வெள்ளை கலர் ஆடையுடன் பறந்து வந்து சிவப்பு காரில் ஏறி சென்ற நடிகை இவங்களா? காரை பார்த்தும் செம ஷாக்!
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். இவர் பல இந்தி திரைப்படங்களில் நடித்து பரபலமாகியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்ததை விட சமீபத்தில் பணம் பரிமாற்ற வழக்கில் சிக்கியதில் பெரிய அளவில் பிரபலமானார். இவர் என்னதான் இந்தி நடிகையாக இருந்தாலும் இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவர் சமீபத்தில் காஸ்ட்லியான கார் ஒன்றில் ஏற்றி சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சண்டிகர் விமான நிலையத்திற்கு நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் சமீபத்தில் வந்துள்ளார். இவர் வரும் போது அங்கிருந்தவர்கள் இவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வெள்ள நிற உடையில் சாதாரணமாக இருந்தாலும், இவரை ரசிகர்கள் ஒரு தேவதையாக பார்த்து வருவதால் பலர் இவரது அழகில் மயங்கி இவருடன் புகைப்படம் எடுத்து வந்தனர். அவரும் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் அவர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்குபோஸ் கொடுத்தார்.

பின்னர் இவர் ஏறிச்சென்ற கார் தான் ஹைலைட். இவர் சிவப்பு நிற கார் ஒன்றில் ஏறிச்சென்றார். இந்த வீடியோவில் காரை முழுமையாக பார்க்க முடியவில்லை என்றாலும் தெரிந்த அளவிற்கு வைத்து பார்க்கும் போது இது ஜாக்குவார் நிறுவனத்தின் எஃப் பேஸ் கார் என தெரியவந்தது. இது இந்தியாவில் விற்பனையாகும் காஸ்ட்லியான கார்களில் ஒன்றாக இருக்கிறது.
ஜாக்குவார் எஃப் பேஸ் காரை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் ரூ84.26 லட்சம் என்ற விலையில் பேஸ் மாடலும் ரூ86.06 லட்சம் என்ற விலையில் டாப் மாடலும் விற்பனையாகியுளு்ளத. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் விற்பனையில் உள்ளன. பேஸ் மாடல் பெட்ரோல் இன்ஜின் உடனும் டாப் மாடல் டீசல் இன்ஜின் உடனும் விற்பனைக்கு வருகிறது. இரண்டு இன்ஜினும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 247 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜினை பொருத்தவரை 201 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் இன்ஜின் 12.9 கி.மீ மைலேஜையும், டீசல் இன்ஜின் 19.3 கி.மீ மைலேஜையும வழங்குகிறது.
இந்த காரின் சிறப்பம்சமே இதன் பிக்கப் தான் இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 7.3 நொடி முதல் 8 நொடிக்குள் பிக்கப் செய்து விடுகிறது. இந்த கார் அதிகபட்சமாக 210 முதல் 217 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிக விலை காரணமாக வெகு சிலரிடம் மட்டுமே உள்ளது. பிரபலங்கள் தொழிலதிபர்கள் தான் இந்த காரை தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்படியாக பிரபலங்கள் காஸ்ட்லியான கார்களை பயன்படுத்துவது சாதாரண விஷயமாக மாறி வருகிறது. பிரபலங்கள் சிம்பிளான காரை பயன்படுத்தினால் தான் இனி ஆச்சரியப்பட வேண்டும் போல. ஆனால்இந்த காரின் உள்ள அம்சங்களை எல்லாம் பார்த்தால் கொடுக்கும் காசுக்கு இது செம ஒர்த் போல!


Click it and Unblock the Notifications









