நதிகளை காக்க ரூ.2 கோடி மதிப்புடைய பென்ஸ் எஸ்யூவியில் புறப்படும் ஜக்கி வாசுதேவ்!

Written By:

எதிர்கால தலைமுறையின் நலன் கருதி, நதிகளை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து ஹரித்வாருக்கு பிரச்சார பயணத்தை துவங்க இருக்கிறார் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.

இந்த பயணத்திற்காக ரூ.2 கோடி விலை மதிப்புடைய மெர்சிடிஸ் பென்ஸ் சொாகுசு காரை ஜக்கி வாசுதேவவ் பயன்படுத்த இருக்கிறார்.

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

வரும் 4ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ஜக்கி வாசுதேவ் 16 மாநிலங்கள் வழியாக ஹரித்வார் நகரில் தனது பிரச்சார பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார். அழிந்து வரும் 'நதிகளை மீட்போம்' என்ற கொள்கையுடன் இந்த பிரச்சார பயணத்தை ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ள இருக்கிறார்.

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

இந்த பிரச்சாரத்திற்காக நாடு முழுவதும் 7,000 கிமீ தூரம் வரை 30 நாட்களுக்கு பயணம் செய்ய இருக்கிறார் ஜக்கி வாசுதேவ். இந்த நீண்ட பயணத்திற்காக மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி என்ற விலை உயர்ந்த எஸ்யூவி ரக காரை தேர்வு செய்திருக்கிறார்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

ஏலியன் க்ரீன் என்ற கிளி பச்சை வண்ணத்திலான மெர்சிடிஸ் பென்ஸ் சி63 ஏஎம்ஜி எஸ்யூவியில் அவர் பயணிக்கிறார். ஜக்கி வாசுதேவ் கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி, ஹெலிகாப்டர் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில், தனது பிரச்சாரத்தின்போது அவரே காரை ஓட்டிச் செல்வார் என்று தெரிகிறது.

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

இந்தியாவில் அம்பானி குடும்பத்தினர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்களிடம் மட்டுமே இந்த விலை உயர்ந்த எஸ்யூவி மாடல் இருக்கிறது. தனது பயணதத்தின்போது பல்வேறு நிலபரப்புகளை கடந்து செல்வதற்காக இந்த எஸ்யூவி மாடலை அவர் தேர்வு செய்திருக்கிறார்.

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

இந்த எஸ்யூவியில் 5.5 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

இந்த சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த எஸ்யூவியானது 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

இந்த எஸ்யூவி 205 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருப்பதால், கரடு முரடான பாதைகள் மற்றும் மலைச்சாலைகளில் ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

இந்த காரில் 8 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு போன்ற பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

அதே நேரத்தில், இந்த எஸ்யூவி லிட்டருக்கு 5 முதல் 6 கிமீ வரை மட்டுமே மைலேஜ் கொடுக்கும். இந்த எஸ்யூவியில் 96 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருப்பதால், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 500 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

நதிகளை காக்கும் பிரச்சாரத்திற்கு பென்ஸ் எஸ்யூவியை பயன்படுத்தும் ஜக்கி வாசுதேவ்!

ஆனால், நதிகளை காப்போம் என்ற நல்லெண்ண பிரச்சார பயணத்திற்காக சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத அதிக எரிபொருளை உறிஞ்சும் காரை ஜக்கி வாசுதேவ் பயன்படுத்த இருப்பது சிறந்த தேர்வாக இருக்காது என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

Photo Credit: Sundarammotors

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Jaggi Vasudev Will Use Mercedes Benz G63 AMG SUV For His Save River Mission.
Story first published: Friday, September 1, 2017, 11:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark