ஜாகுவார் காருடன் மோதி சுக்கு சுக்காக அப்பளம் போலான ஹோண்டா சி.பி.ஆர்
மும்பையில் நாரிமன்முணை அருகே ஹோண்டா சி.பி.ஆர் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக் மற்றும் ஆடம்பர ஜாகுவார் கார் சாலையில் நேருக்கு நேர் மோதி கோர விபத்தை ஏற்படுத்தியது.
மும்பை நாரிமண் முணையில் யூ-டெர்ன் எடுக்க நினைத்து சாலையில் நின்றிருந்த ஜாகுவார் கார் மீது, அவ்வழியில் ஹோண்டா சி.பி.ஆர் பைக்கில் வேகமாக வந்த இரு இளைஞர்கள் காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் ஜாகுவார் காரின் முன்பகுதி சிதைந்தது. ஜாகுவார் கார் மீது மோதிய ஹோண்டா சிபிஆர் பை முற்றிலும் உருகுலைந்து சுக்குநூறாகி போனது.

ஜாகுவார் காரின் முன்பாகத்தில் நேரடியாக இடித்த அந்த இளைஞர்கள், 2 மீட்டர் தூக்கி வீசப்பட்டு விழுந்தனர். காரின் மீது மோதிய ஹோண்டா சி.பி.ஆர் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக், சுக்கு நூறாக நொறுங்கி அப்பளம் போலானது.

ஹோண்டா சிபிஆர் பைக்கின் வந்த இரண்டு இளைஞர்களும் மும்பையின் கிர்ஹம் பகுதியை சேர்ந்த சஷாங்க் வாட்கே மற்றும் மங்கேஷ் பாடீல் என்றும், அவர்கள் சவுத் மும்பை கல்லூரியின் மாணவர்கள் என்றும் விவரங்கள் தெரியவந்தன.

சம்பவத்தை பார்த்த சிலர் அந்த இரு இளைஞர்களையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக் அனுமதித்தனர். பின் அவர்களிடமிருந்து மொபைல் எண்ணை வாங்கி அவர்களது மற்றொரு நண்பருக்கு தகவல் தெரிவித்தனர்.

பைக்கில் வந்த இரு இளைஞர்களும் 2 மீட்டர் தொலைவு தூக்கி வீசப்பட்டதால் கைகால்களில் எலும்புகள் முறிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான உரிய சிகிச்சை அவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் மும்பை ஊடகங்கள் இந்த விபத்தை குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஹோண்டா சிபிஆர் பைக்குடன் மோதிய ஜாகுவார் காரில் சம்பவத்தின் போது 26 வயது மதிக்க தக்க நான்கு இளைஞர்கள் இருந்துள்ளனர். தென் மும்பை பகுதியை சேர்ந்த அந்த நான்கு பேரும் நாரிமண் முணையிலிருக்கும் ஒரு தனியார் உணவக்கத்திற்கு வந்து, அதற்காக சாலையில் யூ-டெர்ன் எடுத்தபோது அந்த சமயத்தில் வேகமாக வந்த ஹோண்டா சி.பி.ஆர் பைக் காரில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் ஜாகுவார் காராக இருந்தாலும், வேகமாக வந்த வாகனம் மோதியால் காரின் முன் இருக்கைகான கதவுப் பகுதியில் பலத்தை சிதைவு ஏற்படுள்ளது. மேலும் காரிலிருந்த நான்கு பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் அதித் ஷா மற்றும் ஈஷா முல்தானி என்ற இரு இளைஞர்களுக்கு காரின் கண்ணாடிகள் உடைந்து அது உடம்பில் பல்வேறு பகுதிகளில் ஏறி மிகுந்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹோண்டா சி.பி.ஆர் பைக்குடன் காரை மோதியபோது ரோனக் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். முன் இருக்கையில் ஈஷாவும் பின் இருக்கையில் வேறு நண்பர்களும் அமர்ந்துள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் ஏர்-பேக் உடனே வெளியானதால் பெரும் விபத்து நடக்கயிருந்தது தடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சி.பி.ஆர் பைக் மற்றும் ஜாகுவார் காருக்கு இடையே நடைபெற்ற இந்த விபத்தை குறித்து பேசிய காரில் பயணம் செய்த பெயர் கூற விரும்பாத இளைஞர், காரனை தனது நண்பர் ரோனக் யூ-டெர்ன் எடுக்க முயல்கையில் திடீரென்று வேகமாக வந்த ஹோண்டா சி.பி.ஆர் காரின் முன்பகுதியில் இடித்ததாக தெரிவித்தார்.

அதைக்கண்டு நண்பர் ரோனக் காரை பாதுகாக்க முயல்கையில் நொடிப்பொழுதில் பைக் காரின் முன்பாகத்தை பலத்த சத்தத்துடன் இடித்துவிட்டாதக அந்த இளைஞர் தெரிவித்தார்.

நள்ளிரவும் 12.30 மணியளவில் ஜாகுவார் கார் மற்றும் ஹோண்டா சி.பி.ஆர் பைக் நேருக்கு நேர் மோதிக்கொண்டதை நேரில் பார்த்த ஒரு போக்குவரத்து காவலர். அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Via mid-day.com


Click it and Unblock the Notifications