விபத்தில் கல்லு மாதிரி நின்ற ஜாகுவார் கார்.. கடையாணி கழன்ற டாடா டிப்பர்!!

Written By:

விந்தையான விபத்து ஒன்று கேரளாவில் சமீபத்தில் நடந்தேறியுள்ளது. கோட்டயத்தில், ஜாகுவார் கார் ஒன்றும், டிப்பர் லாரி ஒன்றும் சமீபத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், கார் லேசான சேதத்துடன் தப்பிய நிலையில், அந்த காருடன் மோதிய டாடா டிப்பர் லாரி கடும் சேதமடைந்தது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் நடந்தேறிய இந்த விபத்து படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

விபத்து இடம்

விபத்து இடம்

கோட்டயம் மாவட்டத்தின் பாலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில்தான் இந்த விபத்து நடந்தது.

 விசாரணை

விசாரணை

ஆனால், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அதிவேகம்

அதிவேகம்

அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரும், டிப்பர் லாரியும் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது

சிறிய சேதம்

சிறிய சேதம்

இந்த விபத்தில் ஜாகுவார் காரின் முன்பகுதியில் சேதமடைந்தது. காரில் பயணித்தோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், டிப்பர் கதியை பார்க்க அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

டிப்பர் சேதம்

டிப்பர் சேதம்

இந்த விபத்தில் காரைவிட அதிக சேதமடைந்தது டிப்பர் லாரிதான். முன்புற சக்கரங்கள் தனியாக கழன்று பலத்த சேதமடைந்தது. மேலும், காரில் மோதி கட்டுப்பாட்டை இழந்த அந்த டிப்பர் லாரி அருகிலிருந்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீதும் மோதியது.

மீட்புப் பணி

மீட்புப் பணி

விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களையும், டிப்பர் லாரி ஓட்டுனரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும், இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனத்தின் தயாரிப்பான எக்ஸ்எஃப் கார் பல பாதுகாப்பு வசதிகள் கொண்டது. மேலும், ஏர்பேக் தக்க சமயத்தில் விரிவடைந்து ஓட்டுனரையும், பயணிகளையும் பாதுகாத்திருப்பது உறுதியாகியுள்ளது. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் காரணமாக மோசமான விபத்திலிருந்து கார் தப்பியிருக்கிறது.

 
English summary
Jaguar XF and Tipper Accident In Kerala.
Story first published: Saturday, May 2, 2015, 16:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark