வெறும் 21 வயசு தான் ஆகுது!! பதக்கத்துடன் இந்தியா திரும்பிய இளம் ராலி ரேஸர் - ஜேகே டயரின் ஸ்பான்சரில்!
21 வயது மட்டுமே ஆன ஜஹான் சிங் கில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA)-இன் ஜூனியர் ஆசியன் பசுபிக் ராலி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவரான ஜஹான் சிங் கில் இந்தோனிஷியா நாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பட்டத்தை கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு 2023ஆம் ஆண்டிற்கான ஆசியன் பசுபிக் ராலி சாம்பியன்ஷிப் பந்தயங்களை தேசிய இந்தோனிஷியன் ராலி சாம்பியன்ஷிப் (INRC)-இன் கீழ் செயல்படும் தனாவ் டோபா ராலி உடன் இணைந்து நடந்தி முடித்துள்ளது. இந்த ராலி தொடரின் இறுதி பந்தயங்கள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்றன.

இறுதி பந்தயத்தில் ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட்டின் டிரைவர் ஜஹான் சிங் கில் முதலிடத்தை பிடித்து பட்டத்தை தட்டி சென்றுள்ளார். 2023 ஆசியன் பசுபிக் ராலி பந்தய தொடர் முழுவதுமே ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட் குழுவின் டிரைவர்கள் முன்னிலை வகித்தனர். தேசிய இந்தோனிஷியன் ராலி சாம்பியன்ஷிப்பின் நேஷ்னல் வைகல் அப்ரூவல் (NVA) வகுப்பு மற்றும் எம்2 வகுப்பு பந்தயங்களில் ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட் டிரைவர்கள் பங்கேற்றனர்.
2023 ஆசியன் பசுபிக் ராலி சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்தமாக 63 டிரைவர்கள் பங்கேற்றனர். இதில் டைட்டில் வின்னரான ஜஹான் சிங் கில் ஜூனியர் வகுப்பிலும், சுஹீம் கபீர் மற்றும் லோகேஷ் கவுடா போன்ற ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட்டின் மற்ற டிரைவர்கள் என்.வி.ஏ வகுப்பிலும் முன்னிலை வகித்தனர்.
ஜஹான் சிங் கில் சமீபத்தில்தான் இந்தியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பந்தயத்தில் தரமான சம்பவம் செய்திருந்தார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க் பகுதியில் நடைபெற்ற ஜூனியர் இந்தியன் நேஷ்னல் ராலி சாம்பியன்ஷிப் பந்தயத்தை ஜஹான் சிங் கில் சொந்தமாக்கி இருந்தார். அதே தைரியத்தில் இந்தோனிஷியாவுக்கு சென்ற ஜஹான் அங்கேயும் ஜூனியர் ஆசியன்-பசுபிக் பட்டத்தை வென்றுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால், ஜஹான் சிங் கில் இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் பங்கேற்ற முதல் ராலி பந்தய தொடர் இதுவாகும். ஆனால், முதல் தொடரிலேயே சர்வதேச அளவிலான பட்டத்தை தட்டித்தூக்கி உள்ளார். 21 வயது மட்டுமே ஆன ஜஹான் சிங் கில் ஆசியன் பசுபிக் ராலி சாம்பியன்ஷிப்பின் ஆர்2 வகுப்பு பந்தயங்களில் ஒட்டுமொத்தமாக 8வது இடத்தை பிடித்துள்ளார்.
இதுகுறித்து ஜஹான் சிங் கில் கூறுகையில், "இந்த சாதனையை செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் ஜேகே டயர் மோட்டார்ஸ்போர்ட் மற்றும் வம்சி மெர்லா கூட்டமைப்பின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது (தனோவ் டோபா ராலி) மிகவும் கடினமான நிலப்பரப்பாக இருந்தது.
இங்கு முதல்முறையாக வாகனம் ஓட்டுவது எளிதான காரியம் அல்ல. ஸ்டேஜ்ஸ் ஏற்கனவே மிகவும் தந்திரமானவையாக இருந்தன. இதற்கிடையில் பெய்த மழை அதை மோசமாக்கியது. இந்த மேற்பரப்பில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் எங்களுக்கு தெரியும் என்றாலும், நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டோம் மற்றும் மேடையில் இடம் பிடித்தோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜஹான் சிங் கில் மட்டுமல்ல, டிரைவர் சுஹீம் கபீரும் தனது முதல் சர்வதேச ராலி பந்தயத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இவ்வாறு, பல இந்திய ராலி ரேஸர்களை கண்டறிந்து அவர்களை சர்வதேச அளவில் முன்னிறுத்தும் உன்னதான பணியை ஜேகே டயர் நிறுவனம் தனது மோட்டார்ஸ்போர்ட் குழுவின் மூலம் செய்து வருகிறது. அத்துடன், தனது ஸ்பான்சர்ஷிப்பில் 2023 ஆசியன் பசுபிக் ராலி சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்றவர்களுக்கு ஜேகே டயர் நிறுவனமும் தனியாக விருதுகளை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








