ராமர் கோயிலை திறந்தாலும் திறந்தாங்க... ஹெல்மெட் வரைக்கும் ராமர் படம் வந்தாச்சு!! விலை எவ்வளவு தெரியுமா?

ஜெய் ஸ்ரீ ராம் (Jai Sri Ram) எடிசன் ஹெல்மெட்டை அயோத்தி ராமர் கோயில் திறப்பை கொண்டாடும் விதமாக ஸ்டீல்பேர்டு (Steelbird) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புது ஹெல்மெட்களை எவ்வாறு வாங்கலாம்? இவற்றின் விலைகள் என்ன? என்பதை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடவுள் ராமர் கோயில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். ராமர் கோயில் திறப்பை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

jai shree ram edition helmet

இந்த நிலையில், பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல்பேர்டு ஹை-டெக் தனது பங்கிற்கு ஜெய் ஸ்ரீ ராம் எடிசன் ஹெல்மெட்களை அறிமுகம் செய்துள்ளது. எஸ்.பி.எச்-34 என்ற குறியீட்டு பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்களில் பிரத்யேகமாக கடவுள் ராமரின் படமும், அயோத்தியில் எழுப்பப்பட்டுள்ள புதிய ராமர் கோயிலின் படமும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், 'ஜெய் ஸ்ரீ ராம்' வாசகமும் இந்தியில் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்களை பளபளப்பான கருப்பு அல்லது ஆரஞ்ச் நிறங்களில் வாங்கலாம். மற்ற ஹெல்மெட்களை போலவே இந்த ஹெல்மெட்டையும் தனது வழக்கமான ஃபார்முலாவில் ஸ்டீல்பேர்டு உருவாக்கியுள்ளது. அதாவது, எந்தெந்த இடத்தில் காற்றுத்துளைகள் இருக்க வேண்டும், விஸர் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதில் ஸ்டீல்பேர்டின் நிபுணத்துவம் புலப்படுகிறது.

jai shree ram edition helmet

கூடுதல் சவுகரியம் மற்றும் பாதுகாப்புக்காக இந்த புதிய ஹெல்மெட்டை தெர்மோ பிளாஸ்டிக் ஷெல்லில் உருவாக்கி உள்ளதாக கூறும் ஸ்டீல்பேர்டு நிறுவனம், சூரிய ஒளியினாலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிக அடர்த்தி கொண்ட பாலிஸ்டைரேன்-ஆல் உருவாக்கப்பட்ட பாகங்களும் இந்த ஹெல்மெட்டில் உள்ளதாக தெரிவிக்கிறது.

இந்த புதிய ஜெய் ஸ்ரீ ராம் ஹெல்மெட்டில் கீறல்கள்-எதிர்ப்பு கோட்டட் விஸர் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னால் வரும் வாகன ஓட்டிகளால் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த ஹெல்மெட்டின் பின்பக்கத்தில் ஒளி பிரதிப்பலிப்பான் உள்ளது. இவற்றுடன், கால சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சன் ஷீல்டு அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக இந்த ஜெய் ஸ்ரீ ராம் ஹெல்மெட்டில் உள்ளது.

jai shree ram edition helmet

இந்த புதிய ஹெல்மெட்டை வாடிக்கையாளர்கள் தங்களது சவுகரியத்திற்கு ஏற்ப 580மிமீ அல்லது 600மிமீ அளவில் வாங்கலாம். புதிய ஜெய் ஸ்ரீ ராம் எடிசன் ஹெல்மெட்டின் விலையை ரூ.1349 ஆக ஸ்டீல்பேர்டு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஸ்டீல்பேர்டு நிறுவனம் 1963ஆம் ஆண்டில் இருந்து சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக ஹெல்மெட் உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகிறது.

மற்ற ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்களை போல், புதிய ஜெய் ஸ்ரீ ராம் ஹெல்மெட்டையும் இணைய மூலமாக ஆர்டர் செய்து வாங்கலாம். ஹெல்மெட்களை மட்டுமின்றி, பைக் ஆக்ஸஸரீகளையும் இந்தியா முழுவதும் ஸ்டீல்பேர்டு நிறுவனம் டெலிவிரி செய்கிறது. கூடுதல் விபரங்களுக்கு ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்ஸ் இணையத்தள பக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

jai shree ram edition helmet

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளதினால், கடவுள் ராமர் பக்தர்கள் இன்னும் சில வாரங்களுக்கு மிகுந்த பக்தி பரவசத்துடன் இருப்பார்கள் என்பதை அறிந்து ஸ்டீல்பேர்டு நிறுவனம் அவர்களை டார்க்கெட் செய்து புதிய ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறான யுக்திகளினால் தான், ஹெல்மெட் உற்பத்தியில் ஸ்டீல்பேர்டு முன்னணியில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 24, 2024, 18:13 [IST]
English summary
Jai shree ram edition helmet launches by steelbird check all details here
மேலும்... #ஹெல்மெட் #helmet
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X