பாலிவுட் நடிகர்கள் காட்டுல பண மழை பெய்யுதா என்ன? சொகுசு காரா வாங்கி குவிக்கிறாங்க! இவரு இந்த கார வாங்கிட்டாரா!

பாலிவுட்டைச் சேர்ந்த மிகவும் பிரபலமான முகங்களில் ஜெய்தீப் அஹல்வாத்-ம் ஒருவர் ஆவார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி டிவி ஷோக்களிலும் தோன்றி வருகின்றார். அந்தவகையில், கேங்ஸ் ஆஃப் வேஸிபர், ராஸி, பாடல் லோக், த்ரீ ஆஃப் அஸ் போன்ற பல முன்னணி ஷோக்களில் அவர் பணியாற்றியிருக்கின்றார். இத்தகைய ஓர் ஃபேமஸான நபரே தற்போது மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) சொகுசு காரையே அந்த நடிகர் வாங்கி இருக்கின்றார்.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 1.32 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்ரோடில் இதன் விலை ரூ. 1.50 கோடியை தாண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர ரக காரையே ஜெய்தீப் தற்போது வாங்கி இருக்கின்றார்.

Jaideep ahlawat buys mercedes gls

சமீப சில காலமாக பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் சொகுசு கார்களை வாங்கும் நிகழ்வு என்பது மிகவும் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், மிக சமீபத்தில் பிரபல நடிகை ஜான்வி கபூர் மிக மிக விலை உயர்ந்த லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு கார் மாடலை வாங்கி இருந்தார்.

இது ஓர் உல்லாச கப்பல் போன்ற ஆடம்பர வசதிகளை அதிகளவில் தாங்கியிருக்கும் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இதன் வெளிப்பக்கம் பார்க்க கப்பலைப் போலவும், உள்பக்கம் விமானத்தைப் போலவும் இருக்கும். அதேவேளையில், பயணத்தின் போது வீட்டுக்குள் இருக்கும் அனுபவத்தை அது வழங்கும்.

இத்தகைய மிக மிக அதிக ஆடம்பர அம்சங்கள் நிரம்பிய லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு காரையே தற்போது ஜான்வி பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் விலை ஆன்-ரோடில் ரூ. 3 கோடியை நெருங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரைப் போலவே இன்னும் பல பாலிவுட் பிரபலங்கள் இதே ஆடம்பர கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த ஜெய்தீப்-ம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு காரை வாங்கி அசத்தியிருக்கின்றார். மேலும், சமீபத்தில் புதிதாக ஆடம்பர வாகனத்தை வாங்கிய பிரபலங்களின் பட்டியலில் ஜெய்தீப்பும் ஒருவராக இணைந்திருக்கின்றார். பென்ஸ் நிறுவனம் இந்த கார் மாடலை, பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Mercedes benz gls suv

புதுப்பித்தலின்கீழ் வழங்கப்பட்ட அம்சங்கள் பிரபலங்களையும், பெரும் செல்வந்தர்களையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றன. இதற்கு சான்றாகவே ஜெய்தீப்பின் இந்த கார் பர்சேஸ் சம்பவம் அமைந்திருக்கின்றது. இந்த கார் சொகுசு வசதிகளுக்கு மட்டுமல்ல கவர்ச்சியான தோற்றத்திற்கும் பெயர்போனதாகக் காட்சியளிக்கிறது.

அந்தவகையில், சில்வர் நிறம் கொண்ட ரேடியேட்டர் கிரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட், அப்டேட்ட செய்யப்பட்ட பம்பர் ஆகியவற்றைக் கொண்டே புதிய ஜிஎல்எஸ் சொகுசு காரை பென்ஸ் நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. இந்த புதிய அம்சங்களே அக்காருக்கு பிளஸ்ஸாகவும் அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஏற்கனவே கூறியதைப் போல இந்த காரில் பிரீமியம் மற்றும் சொகுசு அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும். அந்தவகையில், இந்த காரின் உள்பக்கத்தை மெருகேற்றும் விதமாக புதிய கேடலா பிரவுன் மற்றும் பாஹியா பிரவுன் ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் இருக்கைகளும் பிரத்யேக நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் இந்த காரில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 590 வாட் திறன் மற்றும் 13 ஸ்பீக்கர்களைக் கொண்ட சவுண்டு சிஸ்டம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்தவரை ஜெய்தீப் வாங்கியிருக்கும் இந்த பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு கார் மாடலில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஒன்று 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 375 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த மோட்டாரை ஜிஎல்எஸ் 450 4மேட்டிக் எனும் வேரியண்டிலேயே பென்ஸ் விற்பனைக்கு வழங்குகின்றது.

இதேபோல், ஓர் டீசல் எஞ்சின் ஆப்ஷனை இந்த காரில் பென்ஸ் வழங்குகின்றது. அது ஜிஎல்எஸ் 450டி 4மேட்டிக் எனும் வேரியண்டாக விற்பனைக்குக் கிடைக்கிறது. 3.0 லிட்டர், 6 சிலிண்டர் மோட்டாரே இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது அதிகபட்சமாக 361 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க்கை வெளியேற்றும். இரண்டிலும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில், குறிப்பாக, பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சொகுசு கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெய்தீப் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு காரை வாங்கியிருக்கும் சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது. இவரை இன்னும் பலர் ஆடம்பர கார்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 14, 2024, 11:00 [IST]
English summary
Jaideep ahlawat adds mercedes benz gls suv to his garage
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+