ரூ21 கோடியை மிச்சப்படுத்திய தொழிலதிபர்கள்! சொகுசு கார்களை இப்படி வாங்கினால் செம லாபம்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிசினஸ் குழுமம் ஒன்று ஒன்றாக சேர்ந்து சொகுசு காரை வாங்கியதில் ரூபாய் 21 கோடியை மிச்சம் செய்துள்ளது. பிசினஸ் குழுமம் என்றால் எப்படி செயல்பட வேண்டும் என்பதை காட்டும் வகையில் இந்த குழுமம் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாயை மிச்சபடுத்தி மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்படும் குழுமம் ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன். அதாவது ஜெயின் சமூகத்தை சேர்ந்த மக்கள் தொழில் அதிபர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குழுமத்தை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த குடும்பம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த குடும்பத்தில் 65,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 30,000 பேர் நிர்வாகிகளாகவே இருக்கிறார்கள். இதில் குஜராத்தில் மட்டும் 5000 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

Jain Community Luxury Car Savings

இந்த குழுமம் ஒரு பிசினஸ் குழுமம் என்பதால் இதில் உறுப்பினராக சேர ரூபாய் 2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் இந்தக் குழு மூலம் கிடைக்கும் சிறப்பு கம்யூனிட்டி பலன்களைப் பெற ரூபாய் 20 லட்சம் வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் எல்லாம் இருக்கிறது. இப்படியாக ரூபாய் 20 லட்சம் வழங்கி இதில் உறுப்பினராக இருக்கும் அவர்களுக்கு அவர்கள் வாங்கும் பொருட்களின் விலை மிகக் குறைவாக கிடைக்கும் வகையில் இந்த குழுமம் ஏற்பாடு செய்து தரும். இதன் மூலம் அவர்கள் ரூபாய் 20 லட்சத்திற்கும் அதிகமான பலன்களை பெற முடியும்.

இந்நிலையில் இந்த ஜீடோ அமைப்பு மூலம் தற்போது அதன் உறுப்பினர்கள் சொகுசு காணகளை வாங்க முடிவு செய்தார்கள். இதைழடுத்து கணக்கெடுத்து பார்த்தபோது மொத்தமாக 186 முதல் 190 சொகுசு கார்களை வாங்க வேண்டிய தேவை இருந்தது. இது ஆடி பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களில் கார்களாக இருந்தது. ஒவ்வொரு காரும் ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 1.5 கோடி வரையிலான விலையில் விற்பனையாகி வந்தது.

இதையடுத்து இந்த சொகுசு கார்களை விற்பனை செய்யும் டீலர்களிடம் ஜிடோ அமைப்பு ஒரு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி இந்த ஜீட்டோ அமைப்பு மூலம் வாகனம் வாங்குபவர்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் கொண்டு வந்தது. இந்த ஜீட்டோ அமைப்பு மூலம் ஒருவர் வாகனம் வாங்கினால் அவருக்காக அந்த டீலர்ஷிப் மூலம் விளம்பரம் செய்ய வேண்டிய தேவை இல்லை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு சலுகைகளை செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதால் அதை தள்ளுபடியாக வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜீடோ அமைப்பில் இருப்பவர்களுக்கு கார் வாங்கும் வாய்ப்பை வழங்குவதாக அறிவித்தது. அதன்படி சுமார் 190 பேர் காரை வாங்க முன் வந்துள்ளார்கள். இதனால் ஒரு காரின் விலை ரூபாய் 8 லட்சம் முதல் 17 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்நிலையில் ஜிடோ அமைப்பு இப்படியாக கார் வாங்குவதற்கு ரூபாய் 149.54 கோடி செலவு செய்துள்ளது. இதன் மூலம் ரூபாய் 21.5 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நபரும் தனியாக கார் வாங்கினால் முழு பணம் செலவாகி இருக்கும். இந்த அமைப்பு மூலம் கார் வாங்கியதற்கு காரணமாக ரூபாய் 21.5 கோடி செலவு மிச்சமாகி உள்ளது.

இதில் பெரும்பாலும் குஜராத் மாநிலம் குறிப்பாக ஆமதாபாத் பகுதியில் தான் அதிக கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியா முழுவதும் இந்த கார் விற்பனை என்பது நடந்துள்ளது. இதற்காக ஜிடோ அமைப்பு 15 அதிகாரப்பூர்வ சொகுசு கார் டீலர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த கார் ஆர்டர்களட எல்லாம் நேரடியாக அந்த அமைப்பே டீலர்களுக்கு வழங்கியது .மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்திற்கான எந்த செலவும் இல்லாமல் நேரடியாக கார் வாங்கப்பட்டதால் கார்களை விற்பனை செய்யும் டீலர்களுக்கு லாபம் கிடைத்தது. அதே நேரம் இந்த அமைப்பில் இருந்து காரை வாங்கியவர்களுக்கும் குறைவான விலையில் கார்கள் கிடைத்தன.

இப்படியாக குறைந்த விலையில் கார் வாங்குவது ஒன்றும் முதல் முறை அல்ல, இதற்கு முன்னும் இப்படியான பிசினஸ் குடும்பங்கள் இணைந்து கார்களை வாங்கி உள்ளார்கள். கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவுரங்காபாத் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களை 150 தொழிலதிபர்கள் சொந்தமாக வாங்கினார்கள். அப்பொழுது இந்த கார்களின் விலை மொத்தமாக ரூபாய் 65 கோடி செலவு செய்தனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் டீலர்ஷிப் கல் மூலம் விளம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்து வருகிறார்கள். மற்றும் மார்க்கெட்டிங்காகவும் அதிக செலவு செய்கிறார்கள். இதை எல்லாம் நேரடியாக காரின் விலை மீது வருகிறது. இதை புரிந்து கொண்ட தொழில் அதிபர்கள் இதை குறைப்பதற்காக ஒரு கூட்டமைப்பாக சேர்ந்து நேரடியாக சொகுசு கார் நிறுவனங்களின் டீலர்களிடம் பேசி குறைந்த விலையில் காரை வாங்கி உள்ளார்கள். ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு என்ற கூற்றை உண்மையாகும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய விழிப்புணர்வை தற்போது உள்ள சமூக மக்களிடம் சேர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 22, 2025, 9:15 [IST]
English summary
Jain community luxury car savings 186 cars rs 21 crore discount
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+