பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

1 என்ற பேன்ஸி நம்பருக்காக, ஜெய்ப்பூர் தொழிலதிபர் ஒருவர், காசை தண்ணீராய் செலவு செய்கிறார். அந்த ஒரு நம்பருக்காக பல லட்சங்களை அவர் அள்ளி வீசுவதன் சுவாரசியமான பின்னணி தெரியவந்துள்ளது.

By Arun

1 என்ற பேன்ஸி நம்பருக்காக, ஜெய்ப்பூர் தொழிலதிபர் ஒருவர், காசை தண்ணீராய் செலவு செய்கிறார். அந்த ஒரு நம்பருக்காக பல லட்சங்களை அவர் அள்ளி வீசுவதன் சுவாரசியமான பின்னணி குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

ஜெய்ப்பூர் மில்லியனர்...!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ரஹ்லுல் தனேஜா. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு 37 வயதாகிறது. இவரது கார்களின் நம்பர் பிளேட்கள் அனைத்திலும் 0001 என்ற நம்பர் கட்டாயம் இருக்கும்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

கடந்த மார்ச் 25ம் தேதி, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் ஜாக்குவார் கார் ஒன்றை அவர் வாங்கினார். அதன்பின் ஒன்றரை மாதங்கள் காத்திருந்து, தனக்கு விருப்பமான 0001 என்ற நம்பரை (RJ 45 CG 0001), அந்த காருக்கு பெற்றார். இந்த நம்பருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில், 16 லட்ச ரூபாய் செலவு செய்து, வெற்றி பெற்றார் ரஹ்லுல் தனேஜா.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

ஒரு ப்ரீமியம் நம்பருக்காக செலவழிக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுதான் என அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

ரஹ்லுல் தனேஜா தனது முதல் லக்ஸரி காரான பிஎம்டபிள்யூ 5 சீரியஸை கடந்த 2011ம் ஆண்டு வாங்கினார். அந்த காருக்கு 0001 (RJ 14 CP 0001) நம்பரை வாங்குவதற்காக, 10.31 லட்ச ரூபாயை செலவிட்டார்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

இவரது அடுத்த கார் ஸ்கோடா லயூரா. 0001 என்ற நம்பர் இருந்த ஒரே காரணத்திற்காக (RJ 20 CB 0001), அந்த காரை அவர் செகண்ட் ஹேண்டில் வாங்கினார்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

இதுதவிர கடந்த 1996ம் ஆண்டு, ஸ்கூட்டர் ஒன்றை ரஹ்லுல் தனேஜா செகண்ட் ஹேண்டில் வாங்கினார். அந்த ஸ்கூட்டரின் நம்பர் RJ 14 23M 2323. இதன் கடைசி 4 எண்களான 2323 என்பதை கூட்டுங்கள். 2+3+2+3=10. இதனை 1+0 என கூட்டினால் 1தான் வரும். 0001 என்பதும் கூட 1தான்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

நம்பர் 1 ஏன்?

நம்பர் 1ன் மீதான ஆர்வம் குறித்து ரஹ்லுல் தனேஜா கூறுகையில், ''நான் மேற்கொள்ளும் எல்லா விஷயங்களிலும் நம்பர் 1ஆக இருக்க வேண்டும் என விரும்புவேன். அதனால்தான் எல்லாவற்றிலும் நம்பர் 1'' என்றார்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழிக்கும் ரஹ்லுல் தனேஜா செல்வ செழிப்பு மிகுந்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் கிடையாது. இவரது தந்தை டயர் ரிப்பேர் கடை வைத்திருந்தார்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

ரஹ்லுல் தனேஜா, மகர சங்கராந்தி என்றால் பட்டம் விற்பார். ரக்ஸா பந்தன் என்றால் ராக்கி கயிறுகளை விற்பார். ஹோலி என்ற வண்ண பொடிகளையும், தீபாவளி என்றால் பட்டாசுகளையும் விற்பார். தனது 18வது வயது வரை ரஹ்லுல் தனேஜா இதைதான் செய்து கொண்டிருந்தார்.

பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

படிப்பில் படு சுட்டியான ரஹ்லுல் தனேஜா, மாடலிங் துறையிலும் கால் பதித்தவர். மிஸ்டர் ஜெய்ப்பூர், மிஸ்டர் ராஜஸ்தான் பட்டங்களை அவர் வென்றுள்ளார். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்திருந்தாலும், தற்போது பணம் உள்ளதால், அதனை உற்சாகமாக செலவழிப்பதாக கூறுகிறார் ரஹ்லுல் தனேஜா!!!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jaipur millionaire splurges lakhs of rupees on fancy number plates. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X