ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வழிபாதையில் வரும் வாகனங்களின் டயரை கிழிக்க ஸ்பைக்கர்கள் பொருத்த அம்மாநில் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

By Balasubramanian

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வழிபாதையில் வரும் வாகனங்களின் டயரை கிழிக்க ஸ்பைக்கர்கள் பொருத்த அம்மாநில் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பெரும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. எவ்வளவு தான் டிராப்பிகை ஒழுங்குபடுத்த ஒரு வழிப்பாதைகள் அமைத்தாலும், ஆங்காங்கே டிராபிக் ஏற்பட்டு கொண்டு தான். இருக்கிறது.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

இந்த டிராபிக்களுக்கு முக்கிய காரணம் சாலை விதிகளை மீறுபவர்கள் தான். பலர் ஒரு வழிபாதையை விதியை மீதி தடை செய்யப்பட்ட பகுதி வழியாக செல்வதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

சமீபத்தில் ராஜஸ்தான் மாநில டிஜிபி தலைமையில் டிராபிக் குறித்து ஒரு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் டிராபிக் ஏற்படும் காரணங்கள் குறுத்து பல்வேறு விதமாக விவாதிக்கப்பட்டு இறுதியாக ராஜஸ்தானில் சில இடங்களை தேர்தேடுத்து அங்கு ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களின் டயர்களை பஞ்சாரக்கும் வகையில் ஸ்பைக்கர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

அதன் படி ஜெய்பூர், ஜோத்பூர், உதய்பூர், பரத்பூர், கோடா, பைக்கநர், அஜ்மீர், ஆகிய நகரங்களில் சில இடங்களை தேர்ந்தேடுத்து அங்கு சோதனை முயற்சியாக முதலில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனத்தை பஞ்சர் ஆக்கும் ஸ்பைக்கர்களை நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

அதற்காக அம்மாநில உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இந்த ஸ்பைக்கர்கள் பொருத்தப்படும் என தெரிகிறது.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

ஸ்பைக்கர்கள் என்பது ஒரு வழிபாதையில் வாகனங்கள் வாந்தால் அவர்களது வாகனம் இந்த ஸ்பைக்கரில் ஏறும் போது அதில் உள்ள கூர்மையான ஆணி அந்த வாகனத்தின் டயரை குத்தி கிழித்து விடும். அதே நேரத்தில் சரியான திசையில் செல்லும் வாகனங்கள் ஸ்பைக்கரில் ஏறி இறங்கினால் அதுஎந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

இதே போன்ற ஒரு ஸ்பைக்கர் இதற்கு முன்பாக புனே வில் உள்ள ஒரு பிரைவேட் நகருக்குள் அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் பள்ளி இருப்பதால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் அதிக அளவில் ஒரு வழிப்பாதையை தவறாக பயன்படுத்துவதால் இந்த ஸ்பைக்கர் அமைக்கப்பட்டது.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

இந்த ஸ்பைக்கரில் சரியாக திசை வழியாக வாகனங்கள் எந்த பாதிப்பும் இன்றி ஏறி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. இதற்கு மக்கள் மத்தியலும் அமோக ஆதரவு கிடைத்தது. சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியதையடுத்து புனே போலீசார் இந்த இடத்திற்கு சென்று அந்த பகுதியை நிர்வாகிக்கும் தனியார் நிறுவனத்திடம் பேசி இதை பொருத்துவதற்கு அனுமதியில்லை சிறப்பு அனுமதி வாங்கிவிட்டு வேண்டுமானால் பொருத்தி கொள்ளுங்கள் என கூறி அதை அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படு வருவதாக கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தான் போலீசார் புனேவில் தனியார் நிறுவனம் செய்தது போலவே ஒரு வழிப்பாதைகளில் ஸ்பைக்கர்களை பொருத்த முடிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

முதலில் சோதனை திட்டமாக சில நகரங்களில் செய்யப்படும் இந்த திட்டம் வெற்றி பெற்றால் தொடர்ந்து எல்லா பகுதிகளிலும், இது செயல்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதையில் வரும் வாகனத்தில் ஏற்படும் வாகன நெருக்கடி இதன் மூலம் குறையும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜஸ்தானில் ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களில் டயர்களை கிழிக்க போலீசார் முடிவு

இத்திட்டம் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் மட்டுமல்லாது மும்பை, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, டில்லி ஆகிய நகரங்களிலும் இது போன்ற ஸ்பைக்கர்களை அமைக்க அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.

Article Published On: Thursday, May 10, 2018, 11:18 [IST]
English summary
After Pune fails, Jaipur Police to test traffic spikes/blade pilot project.Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+