ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான மரியாதையே போச்சு! காயலான் கடைக்கு வந்த தகர டப்பாவை போல பண்ணிட்டாங்க.. வீடியோ!
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), பல இளைஞர்களின் மிகப் பெரிய கனவாக இந்த நிறுவனத்தின் கார்கள் இருக்கின்றன. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் காரை வாழ்க்கையில் ஒரு முறையாவது வாங்கிவிட மாட்டோமா என நினைப்பவர்களைவிட, வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த காருல் பயணித்துவிட மாட்டோமா என நினைப்பவர்களே மிக மிக அதிகம். ஏன், இந்த காரை ஒரே ஒரு முறையாவது தொட்டு பார்த்துவிட வேண்டும் என நினைப்பவர்களும் இருக்கதான் செய்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்க கார் மாடல்களாகவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் இருக்கின்றன.
இத்தகைய காரையே ஆண்-பெண் என இருவரும் சேர்ந்து அடித்து துவம்சம் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. பழைய இரும்பு கடைக்கு வந்த தகர டப்பாவை போல அவர்கள் அந்த காரை அடித்து நொருக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் ரோல்ஸ் ராய்ஸ் கார் காதலர்களை கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் இருக்கின்றன.

இன்ஸ்டா பிரபலங்களான ஜேமலிஸ் பெனிடஸ் ஸ்மித் மற்றும் விசிலின் டீசல் ஆகியோரே இந்த வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த காருக்கு துளியளவும் மதிப்பளிக்காமல் அவர்கள் துவம்சம் செய்திருக்கின்றனர். முதலில் வந்த இளைஞர் அந்த காரின் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி எனப்படும் முன் பக்கத்தில் நிற்கக் கூடிய சிலையை வெறும் கையாலேயே உடைத்தெறிகின்றார்.
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு அழகு தரும் மிக முக்கியமான பொருட்களில் இதுவும் ஒன்றாகும். மேலும், அதன் ஒன்றின் மதிப்பே பல லட்சம் ஆகும். சுமார், 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதன் மதிப்பு இருக்கும் என கூறப்படுகின்றது. இவருக்கு பின்னர் வந்த அந்த இளம் பெண், காரின் அழகிய கிரில்லை கடப்பாரையை வைத்து சிராய்த்து பார்க்கின்றார்.

பின்னர், காரின் பான்னெட் மீது ஏறி அந்த பெண் திங்கு திங்குவென குதித்து அதன் சஸ்பென்ஷனை சோதித்து பார்க்கின்றனர். இவருக்கு பின்னர் மீண்டும் களத்தில் இறங்கிய அந்த இளைஞர் காரின் மேற்கூரையில் இருந்து பூட் லிட் மேலே குதித்து கீழே விழுந்தார். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் காரின் பக்கவாட்டில் இருந்த பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடியை வெறும் கைகளாலேயே அவர் உடைத்தெறிந்தார்.
முதலில் அந்த பெண் அதை உடைக்க முயற்சித்த நிலையில் அவரால் இயலவில்லை. இதற்கு பின்னரே இளைஞன் அந்த கண்ணாடியை கைகளால் உடைத்தார். இதுதவிர, காரின் இருக்கைகளையும் அவர் பிரித்தெரிந்தார். குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ்-இன் பேட்ஜைகூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அதையும் அந்த கடப்பாரையால் பிய்த்தெறிந்தனர்.
இதை பார்க்கும் போது, ரோல்ஸ் ராய்ஸ் காரை நேசிப்பவர்கள் மட்டுமல்ல, காரையே நேசிக்காதவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை இந்த வீடியோ ஏற்படுத்தி இருக்கும் என நம்பப்படுகின்றது. இவர்கள் இருவரும் சேர்ந்து துவம் செய்த இந்த கார் மாடல் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் ஆகும்.
பெரும் பணக்காரர்களின் பிரியமான ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்பு இதுவாகும். சொகுசான டிராவலுக்கு பெயர்போன தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் ஓர் புதிய ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 9 கோடி ரூபாயவது ஆகும். இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 12 கோடிக்கும் அதிகமாக உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரையே இன்ஸ்டா பிரபலங்கள் இருவர் இணைந்து துவம்சம் செய்து அதுகுறித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். இவர்களின் இந்த செயல் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான மரியாதையே போச்சு என நினைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








