ஏலத்துக்கு வந்த ஜேம்ஸ்பாண்டின் ஒரிஜினல் நீர்மூழ்கிக் கார்

1977ல் வெளிவந்த தி ஸ்பை ஊ லவ்டு மீ ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட லோட்டஸ் எஸ்பிரிட் சீரிஸ் 1 கார் ஏலத்திற்கு வந்துள்ளது. ரோஜர் மூரே கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் இந்த கார் பார்வையாளர்களையும், ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில், லண்டனை சேர்ந்த ஆர்எம் ஏல நிறுவனம் இந்த காரை வரும் செப்டம்பர் 8 அல்லது 9ந் தேதி பெட்டர்சீ பார்க்கில் ஏலம் விடவுள்ளது. இந்த கார் பற்றிய பல சுவாரஸ்ய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை

விலை

இந்த நீர்மூழ்கி கார் அப்போது 1,00,000 டாலர் செலவில் படத்துக்காக சிறப்பு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டது. இப்போதைய மதிப்புடன் ஒப்பிட்டால் 5,00,000 டாலர்களாக குறிப்பிடப்படுகிறது.

நீர்மூழ்கி கப்பலைத் தேடி

நீர்மூழ்கி கப்பலைத் தேடி

அணு ஆயுதங்களுடன் மாயமாகும் நீர்மூழ்கி கப்பல்களை தேடும் ஜேம்ஸ்பாண்ட் கதை இது. எனவே, இதில், நீர்மூழ்கி கப்பலை தேடிச் செல்வதற்கு நீரிலும், நிலத்திலும் செல்லும் வகையில் இந்த காரை பயன்படுத்தியிருப்பர்.

ஒரிஜினல் லோட்டஸ்

ஒரிஜினல் லோட்டஸ்

ஏலத்திற்கு வந்திருக்கும் ஒரிஜினல் மாடல் கார் 1976ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் கொண்டது.

மாலுமி

மாலுமி

இந்த காரை புளோரிடாவை சேர்ந்த பெர்ரி ஓசினோகிராஃபிக் நீர்மூழ்கி காராக மாற்றியது. அமெரிக்க கப்பல் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மாலுமி டான் கிரிஃபின்தான் இந்த காரை நீருக்கடியில் ஓட்டினார்.

கேட்பாரற்ற நிலை

கேட்பாரற்ற நிலை

பஹாமாஸ் கடல் பகுதியில் சூட்டிங் முடிந்த பிறகு நியூயார்க் நகருக்கு அருகிலுள்ள தீவுப் பகுதியில் இந்த கார் நிறுத்தப்பட்டது. அந்த இடம் 10 ஆண்டு குத்தகையில் இருந்தது. கடந்த 1989ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லோட்டஸ் எஸ்பிரிட் சீரிஸ் 1 காரை யாரும் திரும்ப வந்து கேட்கவில்லை. இதனால், அந்த இடத்துக்கு சொந்தக்கார தம்பதியினரே இந்த காரை ஏலத்தில் விட்டுவிட்டனர்.

நல்ல தொகை

நல்ல தொகை

இந்த காரின் அருமை பெருமைகளை தெரிந்த ஒருவர் நல்ல தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.

மீண்டும் ஏலம்

மீண்டும் ஏலம்

இந்த சிறப்புமிக்க நீர்மூழ்கி கார் செப்டம்பர் மாதம் லண்டனில் ஏலம் விடப்படுகிறது.

புதிய நீர்மூழ்கி கார்

புதிய நீர்மூழ்கி கார்

இந்த ஜேம்ஸ்பாண்ட் கார் அடிப்படையில் புதிய நீர்மூழ்கி கார் ஒன்றை ரின்ஸ்பீடு என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ரின்ஸ்பீடு எஸ்க்யூபா

ரின்ஸ்பீடு எஸ்க்யூபா

ரின்ஸ்பீடு எஸ்கியூபா ஹோவர்கிராஃப்ட் போன்ற வடிவில் கார்கள் வடிவமைக்கப்பட்டாலும், தண்ணீருக்குள்ளும் டிரைவிங் செய்ய ஏற்ற காராக இதனை குறிப்பிடுகிறது ரின்ஸ்பீடு. லோட்டஸ் எல்லீஸ் சேஸியில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார் இது முழுக்க முழுக்க ஓர் எலக்ட்ரிக் கார் என்பது கூடுதல் சிறப்பு. மொத்தம் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மோட்டார் நிலத்தில் செல்லும்போது, தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்போது இரண்டு மோட்டார்கள் புரொப்பல்லரை இயக்கவும் துணை புரிகிறது..

லித்தியம் அயான் பேட்டரி

லித்தியம் அயான் பேட்டரி

ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையிலான லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

எவ்வளவு ஆழத்திற்கு செல்லும்

எவ்வளவு ஆழத்திற்கு செல்லும்

10 மீட்டர்(33அடி) ஆழம் வரை தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்.

வேகம்

வேகம்

வேகம் தரையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மிதந்து செல்லும்போது மணிக்கு 6 கிமீ வேகத்திலும், தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்போது மணிக்கு 3 கிமீ வேகத்திலும் இந்த கார் செல்லும்.

விசேஷ இன்டிரியர்

விசேஷ இன்டிரியர்

இந்த காரின் இன்டிரியர் கடல் நீரின் உப்புத்தன்மை பாதிக்காத வகையில் விசேஷ பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கன்வெர்ட்டிபிள்

கன்வெர்ட்டிபிள்

இந்த கார் கன்வெரிட்டிபிள் என்பதால் கூரை இல்லாமலும் தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், பயணிகள் தண்ணீருக்குள் செல்லும்போது விசேஷ உடைகள் மற்றும் செயற்கை சுவாச கருவிகளுடன் இந்த காரை எப்போதும் போல் டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஓட்டலாம், அமர்ந்திருக்கலாம்.

புதிய நீர்மூழ்கி கார்
புதிய நீர்மூழ்கி கார்
புதிய நீர்மூழ்கி கார்
புதிய நீர்மூழ்கி கார்
புதிய நீர்மூழ்கி கார்
புதிய நீர்மூழ்கி கார்
புதிய நீர்மூழ்கி கார்
புதிய நீர்மூழ்கி கார்

More from DriveSpark

Article Published On: Monday, July 1, 2013, 14:47 [IST]
English summary
Of the dozen or so cars used by James Bond in 007 flicks one of the most well known and iconic car is the Lotus Esprit Series 1. Featured in the 1977 movie The Spy Who Loved Me, starring Roger Moore, the Lotus Esprit was an amphibious car, which was capable of underwater travel like a submarine.This, almost legendary piece of original movie merchandise will be up for auction at RM Auction's event in London that will take place between September 8 & 9 in Battersea Park.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+