இமாலய விலைக்கு ஏலம் போன ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக தயாரிக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டின் கார்!

By Saravana

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவத்தை அஸ்டன் மார்ட்டின் கார்களும் பெறுகின்றன. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகர்கள் மாறினாலும், ஜேம்ஸ்பாண்டின் ஆஸ்தான கார் அஸ்டன் மார்ட்டின் என்றாகிவிட்டது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வெளி வரும் படங்களுக்காக விசேஷ அம்சங்களுடன் கூடிய பிரத்யேக கார்களை அஸ்டன் மார்ட்டின் கார் நிறுவனம் தயாரித்து கொடுத்து வருகிறது. அந்த வகையில், ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் லேட்டஸ்ட் சினிமாவான ஸ்பெக்டர் படத்தில் அஸ்டன் மார்ட்டின் டிபி10 என்ற பிரத்யேக கார் மாடல் தயாரிக்கப்பட்டது. தற்போது அந்த கார்களில் ஒன்று இமாலய விலைக்கு ஏலம் போயுள்ளது.

பொன்விழா கொண்டாட்டம்

பொன்விழா கொண்டாட்டம்

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அஸ்டன் மார்ட்டின் கார்கள் பயன்படுத்தத் துவங்கி 50 ஆண்டுகள் ஆகிறது இதனை கொண்டாடும் விதத்தில் இந்த புதிய டிபி10 கார் மிகவும் பிரத்யேகமாக உறுவாக்கப்பட்டது. மேலும், அடுத்த தலைமுறை அஸ்டன் மார்ட்டின் கார்களுக்கான முன்னோட்டமான டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அரிய மாடல்

அரிய மாடல்

மொத்தமாகவே 10 கார்கள் மட்டுமே டிபி10 வரிசையில் அஸ்டன் மார்ட்டின் தயாரிக்கப்பட உள்ளது. அதில், விற்பனைக்காக வெளியிடப்பட்ட ஒரேயொரு கார் இதுதான் என்று அஸ்டன் மார்ட்டின் தெரிவித்துள்ளது.

நல்ல காரியத்துக்காக...

நல்ல காரியத்துக்காக...

மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரண்ட்டியர்ஸ் என்ற என்ற மருத்துவ சேவை வழங்கும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக இந்த கார் ஏலம் விடப்பட்டது. நேற்று முன்தினம் இதற்காக ஏலம் நடந்தது. போரில் காயமடைந்தவர்கள், தொற்று நோயினால் பாதிக்கப்படுவர்களுக்கு இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம், ஏலத் தொகை பயன்படுத்தப்படும்.

விலை

விலை

ஒரு மில்லியன் பவுண்ட் அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2.4 மில்லியன் பவுண்ட் விலையில் விற்பனையாகியது. எதிர்பார்ப்பையும் விஞ்சி, இந்த கார் இந்திய மதிப்பில் ரூ24 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது.

அப்படியா...

அப்படியா...

இந்த காரை ரூ.24 கோடி கொடுத்து வாங்கினாலும், பந்தாவாக பொது சாலைகளில் ஓட்ட முடியாது. அதாவது, இந்த கார் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. அத்துடன், அரசு விதிமுறைகளுக்கு தக்கவாறு மாறுதல்களை செய்து சாலைகளில் இயக்குவதற்கான சான்றையும் இந்த காருக்கு அஸ்டன் மார்ட்டின் பெறவில்லை. எனவே, பொது சாலைகளில் ஓட்டிச் செல்ல முடியாது.

 சேகரிப்பாளர்களுக்கான மாடல்

சேகரிப்பாளர்களுக்கான மாடல்

இந்த கார் கார் சேகரிப்பாளர்களுக்கான மாடலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அரிய கார்களை பொக்கிஷமாக கருதி பாதுகாத்து பராமரித்து வரும் ஒரு பெரும் கோடீஸ்வரர் சார்பில் இந்த கார் வாங்கப்பட்டிருக்கிறது.

சக்திவாய்ந்த கார்

சக்திவாய்ந்த கார்

இந்த காரில் 500 பிஎச்பி பவரை அளிக்க வல்ல மிகவும் சக்திவாய்ந்த 4.7 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடும். அத்துடன் மணிக்கு 305 கிமீ வேகம் வரை எட்டும் வல்லை கொண்டது.

ஏல நிறுவனம்

ஏல நிறுவனம்

இயான் புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக இங்கிலாந்தை சேர்ந்த க்றிஸ்ட்டி ஏல நிறுவனம் இந்த காரை ஏலத்தில் விற்பனை செய்து கொடுத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
James Bond's spectacular Aston martin DB10 car went on sale at a special Christie's auction with all funds raised going to charity
Story first published: Saturday, February 20, 2016, 12:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X