Just In
- 2 hrs ago
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- 14 hrs ago
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- 15 hrs ago
பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!
- 17 hrs ago
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
Don't Miss!
- Movies
போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்
- News
விடாத கி.வீரமணி.. சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.3 முதல் பிரசார இயக்கம்
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அணுக்குண்டே வீசினாலும் ஒன்னும் ஆகாது போலயே... அரசியல் சுற்றுப்பயணத்திற்கு நடிகர் பவன் கல்யாணின் வாகனம்!!
தெலுங்கானா மாநிலம் சில வருடங்களுக்கு முன்பு புதியதாக உருவான விதம் மற்றும் அங்கு தற்சமயம் நிலவிவரும் அரசியல் சூழலை பற்றி செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்திருப்பீர்கள். இந்தியாவின் 'குழந்தை மாநிலம்' என அழைக்கப்படும் தெலுங்கானாவில் அடுத்த 2023 டிசம்பர் மாதத்தில் பரபரப்புக்கு மத்தியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
2014இல் புதிய மாநிலமாக உருவான பிறகு முதல் சட்டசபை தேர்தல் அதே ஆண்டிலும் 2வது தேர்தல் 2018ஆம் ஆண்டிலும் நடைபெற்றன. கடைசியாக 2018இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக கே.சந்திரசேகர் ராவ் உள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்றி முதல்வர் அரியணையை கே.சந்திரசேகர் ராவ் தக்க வைத்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தெலுங்கானாவை ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கு இணையான வலுவான கட்சி எதுவும் தற்போதைக்கு அந்த மாநிலத்தில் இல்லை. 2014இல் 6 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் 2018இல் 19 இடங்களுக்கு முன்னேற்றம் கண்ட போதிலும் பெரிய வித்தியாசத்துடன் பி.ஆர்.எஸ் கட்சிக்கு அடுத்தப்படியாகவே உள்ளது. ஆனால் வரவிருக்கும் 2023 சட்டசபை தேர்தலின் மூலம் தெலுங்கானா அரசியலில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜன சேனா கட்சிக்கு கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என தெரிகிறது.
ஏனெனில் தங்களது கட்சிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் ஜன சேனா கட்சியின் தலைவரும் பிரபல டோலிவுட் நடிகருமான பவன் கல்யாண் விரைவில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்காகவே கம்பீரமான & வலிமையான பேருந்து ஒன்றையும் பவன் கல்யாண் உருவாக்கி உள்ளார். இவ்வாறான அரசியல் சுற்றுப்பயணத்திற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்திற்கு "வராஹி" என பெயர் வைத்துள்ளனர்.
வராஹி என்பது 7 இந்து கடவுள்களில் உள்ள ஒரு கடவுளின் பெயர் ஆகும். வராஹி பேருந்துடன் பவன் கல்யான் நிற்கும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வராஹி பேருந்தை பார்க்கும்போது மிகுந்த பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்ட இராணுவ வாகனங்கள் தான் நம் நினைவுக்கு வருகின்றன. இந்த பயணம் ஆனது வடக்கு தெலுங்கானாவில் உள்ள ஜக்டியல் மாவட்டத்தில் இருந்து துவங்கப்பட உள்ளது.
ஜக்டியல் மாவட்டத்தில் கொண்டகட்டு என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநயா சுவாமி கோவிலில் வராஹி வாகனத்திற்கு பூஜை நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அங்கு இருந்து சுற்றுப் பயணத்தை துவங்க பவன் கல்யாண் திட்டமிட்டுள்ளார். வராஹி பேருந்தை பற்றி கூற வேண்டுமென்றால், இது கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட பேருந்து ஆகும். முன்னதாக இந்த பயணம் தசராவை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதத்திலேயே துவங்கப்பட இருந்தது.
ஆனால் சில காரணங்களுக்காக இந்த பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்த பேருந்தில் ஆதரவாளர்களுடன் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாணின் சுற்றுப்பயணம் 2023 ஜனவரி மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாணின் வராஹி வாகனம் ஆனது என்டிஆர் முன்பு பயன்படுத்திய சைதான்யரதம் என்ற பேருந்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சைதான்யரதம் பேருந்து என்டிஆர்-இன் அடையாளங்களுள் ஒன்றாகவும், அவரை ஆந்திரா முழுவதும் பிரபலமடைய செய்த ஒன்றாகவும் விளங்கியது.
தசராவிற்கு பிறகு பவன் கல்யாணின் சுற்றுப்பயணம் நடைபெறாததாலும், 3 திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டதாலும் பவன் கல்யாணின் சுற்றுப்பயணம் ரத்து ஆகலாம் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவை அனைத்தையும் பொய் என கூறும் வகையில் தற்போது வராஹி பேருந்து உடன் பவன் கல்யாண் நிற்கும் படங்களும், வீடியோக்களும் வெளியாகி அவரது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் புது உத்வேகத்தை அளித்துள்ளன. மற்றப்படி, வராஹி பேருந்தை பற்றிய வேறெந்த விபரங்களும் தற்போதைக்கு கிடைக்கவில்லை.
-
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
-
நீங்க வச்சிருக்க ஆக்டிவாலாம் வேஸ்ட்! கார்களுக்கே உரித்தான அம்சத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஆக்டிவா!
-
இந்த விஷயத்திலும் செம்ம பொருத்தம்.. இளம் ஜோடி கே.எல் ராகுல் & அதியாவின் மயக்க வைக்கும் லக்சரி கார் கலெக்ஷன்ஸ்