இந்தியாவே உன்னிப்பா கவனிக்கும் பவன் கல்யாணின் இன்னொரு முகம்... விஷயம் தெரிஞ்சதும் வாயை பிளக்கும் மக்கள்...

ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநில அரசியலில், தற்போது அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அங்கு ஆட்சி செய்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (YSR Congress) கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி (Jagan Mohan Reddy) வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முதல் அமைச்சர் (Chief Minister) இருக்கையில், சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) அமரவுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு லோக்சபா தேர்தலுடன் (Lok Sabha Election) சேர்த்து, சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

மாறாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் (Telugu Desam), பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) மற்றும் ஜனசேனா (Jana Sena) ஆகிய கட்சிகள் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்துள்ளன. இதில், ஜனசேனா கட்சியானது, நடிகர் பவன் கல்யாணுடையது (Pawan Kalyan) ஆகும்.

Narendra Modi-Pawan Kalyan

ஆந்திர பிரதேச மாநிலத்தின் 21 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்ற தொகுதிகளில் ஜனசேனா போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது ஜனசேனா. தற்போது அந்த கட்சிக்கு 21 சட்டமன்ற மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இதன் மூலம் ஆந்திர அரசியலை கடந்து, தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைவராக பவன் கல்யாண் மாறியுள்ளார். பாஜக மற்றும் காங்கிரஸ் (Congress) ஆகிய 2 முக்கியமான கட்சிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது.

Mercedes Benz R-Class

2 எம்பிக்கள் உள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தலைமையிலான இந்த கூட்டணி அரசில் பவன் கல்யாணும் முக்கியமான ஒரு நபராக இருப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. பொதுவாக அரசியல்வாதிகள் விலை உயர்ந்த கார்களை எல்லாம் பயன்படுத்த மாட்டார்கள்.

ஆனால் பவன் கல்யாண் அப்படிப்பட்டவர் அல்ல. அவருக்கு அரசியல்வாதி என்பதை கடந்து, நடிகர் என்ற முகமும் உள்ளது. எனவே மற்ற பெரும்பாலான நடிகர்களை போலவே, பவன் கல்யாணும் மிகவும் விலை உயர்ந்த கார்களை எல்லாம் வைத்துள்ளார். உண்மையில் பவன் கல்யாணின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் ஆடம்பரமானது.

இதில், 2.20 கோடி ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes AMG G63), 1.30 கோடி ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி55 ஏஎம்ஜி (Mercedes Benz G55 AMG) மற்றும் 1.10 கோடி ரூபாய் மதிப்புடைய ஜாகுவார் எக்ஸ்ஜே (Jaguar XJ) போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, 87 லட்ச ரூபாய் மதிப்புடைய ஆடி க்யூ7 (Audi Q7), 67 லட்ச ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ் பென்ஸ் ஆர்350 (Mercedes Benz R350), 60 லட்ச ரூபாய் மதிப்புடைய பிஎம்டபிள்யூ 520டி (BMW 520D) ஆகிய கார்களையும் நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் வைத்துள்ளார்.

அத்துடன் சுமார் 34 லட்ச ரூபாய் மதிப்புடைய ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavor) கார் ஒன்றையும் பவன் கல்யாண் வைத்துள்ளார். இது இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வந்த ஒரு எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். ஆனால் இந்திய சந்தையில் இந்த கார் தற்போது விற்பனையில் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜனசேனா கட்சி தலைவர் (President) பவன் கல்யாண் மக்களை போலவே, கார்களையும் அதிகம் நேசிக்க கூடியவர் என்பது, அவரது கார் கலெக்ஸன் மூலமாக தெரிய வருகிறது. ஆனால் கடந்த காலங்களில் காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தது போன்ற ஒரு சில சர்ச்சைகளில் பவன் கல்யாண் சிக்கியுள்ளார்.

இது போன்ற பயணங்கள் மிகவும் ஆபத்தானது ஆகும். குறிப்பாக பவன் கல்யாண் போன்ற பிரபலங்கள் இதை செய்தால், அவரை பின்பற்றும் ரசிகர்களும் அப்படியே செய்வார்கள். தற்போது ஆந்திர மற்றும் தேசிய அரசியலில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக உயர்ந்துள்ள பவன் கல்யாண், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2024, 15:08 [IST]
English summary
Jana sena president pawan kalyan car collection audi mercedes benz bmw jaguar
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+