விஜய் வாங்கினாரே அந்த காருதான இது! இவங்களும் வாங்கிட்டாங்களா! கால நீட்டி போட்டுட்டு படம் பாத்துட்டே போகலாம்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அல்ட்ரா லக்சூரி அம்சங்கள் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் டெலிவரி பணிகளை மிக சமீபத்திலேயே லெக்சஸ் நிறுவனம் நாட்டில் தொடங்கியது. கடந்த மாத இறுதியிலேயே இந்த பணிகள் நாட்டில் தொடங்கின. இந்த நிலையிலேயே இந்த சொகுசு காருக்கு நடிகர்கள் மற்றும் முன்னணி பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில், நடிகர் விஜய்கூட இந்த காரை வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த கப்பல் போன்ற சொகுசு வாகனம் நடிகர் விஜய்யின் வீட்டில் இருந்து வெளியே வரக் கூடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இவரைப் போலவே இன்னும் பல பிரபலங்கள் இந்த காரை வாங்கியதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ரன்பீர் கபூர்கூட இந்த காரை வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

Janhvi buys luxury lexus lm

மேலும், இந்திய கிரிக்கெட் அணி விளையாட்டு வீரரான ஹர்திக் பாண்டியாவும் இந்த காரை டெலிவரி பெற்றிருப்பதாகவும், அந்த காரில் அவர் வலம் வந்த வீடியோவும் வெளியாகின. இந்த நிலையிலேயே இவர்களின் வரிசையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆமாங்க, ஜான்வி-யும் இந்த ஆடம்பர வாகனத்தை தற்போது வாங்கி இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜான்வி கபூர் அந்த வாகனத்தில் வலம் வரக் கூடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மிகப் பெரிய சொகுசு கார் கலெக்சனைக் கொண்டிருக்கும் ஓர் நடிகையாகவே ஜான்வி கபூர் இருக்கின்றார்.

இந்த நிலையிலேயே புதிதாக இந்த உல்லாச கப்பல் மாதிரியான எம்பிவி காரையும் அவர் வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.50 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 3 கோடியை நெருங்கும். இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரையே இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். லெக்சஸ் எல்எம் 350எச் ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இது பார்க்க மட்டுமல்ல பயணத்தின்போதும் கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தையே வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Lexus lm

இதற்கேற்ப மிக சிறப்பான சஸ்பென்ஷன் செட்-அப்பையே இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, இதன் உயர்நிலை தேர்வு பயணத்தின்போதும் வீட்டுக்குள் இருப்பதைப் போன்ற உணர்வை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்காக ஏகப்பட்ட சொகுசு வசதிகளை அந்த வெர்ஷனில் லெக்சஸ் மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது.

லெக்சஸ் எல்எம் 350எச் இந்தியாவில் இரண்டு விதமான இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 4 மற்றும் 7 என இரண்டு விதமான இருக்கைகள் தேர்விலேயே அது விற்கப்படுகின்றது. இதன் 4 சீட்டர் வெர்ஷனே மிகுந்த ஆடம்பர அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அதிக ஆடம்பரத்தை விரும்பும் பணக்காரர்களுக்கென்றே 4 சீட்டர் வெர்ஷனை லெக்சஸ் தயார் செய்திருக்கின்றது.

குறிப்பாக, இந்த வெர்ஷனிலேயே வீட்டுக்குள் படுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை வழங்கக் கூடிய இருக்கை வழங்கப்பட்டு இருக்கும். விமானங்களில் பயன்படுத்தப்படும் ரெக்லைனர் வகை இருக்கைகளே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது இன்னும் அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஆகையால், கொஞ்சம் கூட காரில் இருக்கின்ற அனுபவம் இல்லாமல், காலை நீட்டிப் போட்டுக் கொண்டு இதன் 4 சீட்டர் வெர்ஷனில் டிராவல் செய்யலாம். மேலும், பிரைவேட்டான டிராவல் அனுபவத்தை வழங்கும் விதமாக டிரைவர் பகுதிக்கும், பயணிகள் பகுதிக்கும் இடையே தடுப்பு போன்ற அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த தடுப்புக்கு பின்னாலேயே பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக மிகப் பெரிய டிவி போன்ற திரை வழங்கப்பட்டு இருக்கும். இது ஓர் 48 அங்குல திரை ஆகும். இதுதவிர, 23 ஸ்பீக்கர்கள் கொண்ட பிரீமியம் சவுண்டு சிஸ்டம், மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட டேபிள்கள், சூடான அனுபவத்தை வழங்கக் கூடிய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஓட்டோமேன்கள் ஆகியவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுதவிர, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், சிறிய குளிர்சாதன பெட்டி, குளோவ் பாக்ஸ், டிஜிட்டல் ரியர் வியூ மிர்ரர். குடையை தாங்கும் வசதி உள்ளிட்டவையும இந்த சொகுசு காரில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பாதுகாப்பு அம்சங்களும் இந்த வாகனத்தில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், லெக்சஸ் சேஃப்டி சிஸ்டம் பிளஸ் 3 வசதிக் கொண்ட அடாஸ் அம்சத்தை இந்த காரில் லெக்சஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இந்த தொழில்நுட்பமே மிகுந்த பாதுகாப்பு திறன் கொண்ட காராக எல்எம் 350எச் மாடலை காட்சியளிக்க செய்கின்றது. லெக்சஸ் எல்எம் 350எச் எம்பிவி 4 சீட்டர் வெர்ஷன் ரூ. 2.5 கோடி என்கிற உச்சபட்ச விலையிலும், 7 சீட்டர் வெர்ஷன் 2 கோடி ரூபாய் என்கிற விலையிலும் விற்கப்படுகின்றது.

இரண்டிலும், ஒரே திறன் கொண்ட எஞ்சின்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன், 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 250 பிஎஸ் மற்றும் 239 என்எம் டார்க்கை வெளியேற்றும். இ-சிவிடி கியர்பாக்ஸே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே நான்கு வீல்களுக்கும் ஆற்றல் திறனை கடத்தும். இந்த எம்பிவி அதிக சொகுசு அம்சங்களைத் தாங்கிய வாகனம் மட்டுமல்ல அதிக கவர்ச்சியான ஓர் வாகனமும்கூட என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு இணையான சொகுசு வாழ்க்கையை நடிகர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சான்றாகவே இந்த நடிகர் விஜய், நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் இந்த காரை வாங்கியிருக்கும் நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. இவர்களின் வரிசையில் மேலும் சில நடிகைகள், நடிகர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 11:08 [IST]
English summary
Janhvi kapoor buys new lexus lm 350h luxury mpv joins elite bollywood club
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+