பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல!.. காரை வாங்க தெரிஞ்சவங்களுக்கு இத பண்ண தெரியலையா!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த லக்சூரி கார் மாடல்களில் லெக்சஸ் (Lexus) நிறுவனத்தின் எல்எம் 350எச் (LM 350h) மாடலும் ஒன்றாகும். சொகுசு கப்பல் போன்ற இந்த காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நடிகர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். அந்த அளவிற்கே திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் இந்த காரை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், இந்த பிராண்ட் நியூ லக்சூரி வாகனத்தை பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகையுமான ஜான்வி கபூர்-ம் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் பார்க்க மட்டுமல்ல பயன்பாட்டு விஷயத்திலும் சொகுசு கப்பல்களுக்கு இணையானதாகவே இருக்கும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

Janhvi kapoor car door struggle

இதனால்தான் இந்த கார் மாடலின் விலை மிக மிக அதிகமாக உள்ளது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும். இது ஆன்-ரோடு விலை என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரையே ஜான்வி கபூர் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த காரை அவர் வைத்திருந்தாலும், அந்த காரில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் இருக்கின்றன? மற்றும் காரில் உள்ள சில சிறப்பு வசதிகளை பன்படுத்தும் முறை ஆகியவற்றை அவர் அறிந்திருப்பதாக தெரியவில்லை. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் கதவை மூட முடியமால் திணறக் கூடிய வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

Janhvi kapoor door struggle

அந்த புத்தம் புதிய காரின் கதவு மூடாததனால் அதில் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என அவர் ஒரு ஷாக்காகும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், அந்த கதவில் எந்த கோளாறும் இல்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. அது ஒரு ஆட்டோமேட்டிக் டோர் ஆகும்.

ஒரு ஸ்விட்சை அழுத்தினால் அது தானாகவே மூடிக் கொள்ளும். இதை மறந்தே ஜான்வி கபூர், கைகளால் மூட முயற்சித்தார். ஆனால், கதவு ஸ்ட்ரக்காகியதை போல நின்றுவிட்டது. இதனால்தான் ஜான்வி அந்த நேரத்தில் ஷாக்காகியிருக்கின்றார். அவரின் இந்த செயலுக்கு இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பொதுவாக புதிதாக காரை வாங்கச் செல்லும் போது ஷோரூம் நிர்வப்பகிகள் காரில் உள்ள அனைத்து சிறப்புகள் பற்றியும் தெளிவாக கூறுவார்கள். ஆனால், ஜான்வி விஷயத்தில் இதை கார் ஷோரூம் நிர்வாகிகள் செய்ய தவறியிருப்பார்களோ என கேட்கச் செய்திருக்கின்றது. அதேநேரத்தில், முன்னணி பிரபலங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் ஓர் காரை வாங்கும் போது அவர்களே நேரில் ஷோரூம் சென்று வாங்குவார்களா என்பது சந்தேகமே.

பெரும்பாலும் முன்னணி பிரபலங்கள் தங்களுக்கு பிடித்தமான வாகனங்களை அவர்களின் பர்சனல் அசிஸ்டன்ட் போன்றோரை நேரில் அனுப்பியே வாங்குவார்கள் என கூறப்படுகின்றது. இதுமாதிரியான சூழலிலேயே ஜான்வி லெக்சஸ் எல்எம் 350எச் பற்றிய விபரங்களை அறிய தவறியிருப்பார் என தெரிகின்றது.

மிக மிக அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய கார் மாடலாகவே லெக்சஸ் எல்எம் 350எச் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் ஓர் சின்ன வசதியே கார் கதவை மோட்டார் வாயிலாக திறத்தல் மற்றும் மூடுதல் வசதி ஆகும். இதுதவிர, 48 அங்குல அளவிலான பெரிய திரை, 23 ஸ்பீக்கர்களைக் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆர்ம் ரெஸ்ட் (ஸ்டோரேஜ் வசதியுடன்) ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.

இதுதவிர, யுஎஸ்பி சார்ஜர், ஒயர்லெஸ் சார்ஜர், ரீடிங் லேம்ப், குடைகளை வைப்பதற்கான தனி இடம் ஆகியவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, சிறிய குளிர்சாதன பெட்டி, இரட்டை சன்ரூஃப், முக்கிய கருவிகளைக் கட்டுப்படுத்துவதற்கான டச் கன்ட்ரோல்கள் போன்ற அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, இதன் இருக்கைகள் மிகவும் மிருதுவானதாக இருக்கும். அதேவேளையில், இதன் 4 சீட்டர் வெர்ஷனில் விமானங்களில் வழங்கப்படுவதைப் போன்ற இருக்கையே வழங்கப்பட்டு இருக்கும். அதில் காலை நீட்டிப்போட்டுக் கொண்டு, சாய்ந்தவாறு பயணிக்க முடியும். இத்துடன், டிவியை பார்த்துக் கொண்டும் பயணிக்கலாம். ஆமாங்க, இதன் 4 சீட்டர் வெர்ஷனில் பின் பக்கத்தில் மிகப் பெரிய டிவி போன்ற திரை வழங்கப்பட்டு இருக்கும்.

எனவே, லாங் டிராவலாக இருந்தாலும் அது பயணமாகவே தெரியாது. மாறாக வீட்டுக்குள் இருப்பதைப் போன்ற உணர்வே நமக்கு கிடைக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் இதன் 4 சீட்டர் வெர்ஷனை முழுக்க முழுக்க ஆடம்பர பயணத்தை விரும்பும் பணக்காரர்களுக்கு ஏற்றதாகவே லெக்சஸ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

எஞ்சினை பொருத்த வரை இந்த வாகனத்தில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 239 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இ-சிவிடி மற்றும் இ-4 வீல் டிரைவ் ஆகிய அம்சங்களையும் எல்எம் 350எச் பெற்றிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக திரை பிரபலங்கள் பலர் இந்த காரை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் திரை உலகைச் சேர்ந்த நடிகர் விஜய்கூட இந்த காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 8, 2024, 11:00 [IST]
English summary
Janhvi kapoor lexus lm 350h luxury car door struggle
மேலும்... #india #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+