உல்லாச கப்பல் போன்ற காரில் வந்தது அந்த இளம் நடிகையா? எல்லா கேமராக்களும் அவர் மீதுதான்...
ஜான்வி கபூர் (Jhanvi Kapoor), பாலிவுட்டில் வேகமாக பிரபலமாகி வரும் இளம் நடிகை. மறைந்த பிரபலம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தற்போதைக்கு சில திரைப்படங்களில் மட்டும் தான் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். ஆனால், அதற்கு உள்ளாக பாலிவுட்டை தாண்டி நமது கோலிவுட் வரையிலும் பிரபலமாகி உள்ளார். பல முன்னணி நடிகர், நடிகைகளின் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அந்த அளவிற்கு ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாக்காரர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த வரிசையில், பிரபல இந்தி நடிகர் அர்ஜூன் கபூரின் பிறந்த நாள் பார்ட்டியில் நடிகை ஜான்வி கபூர் கலந்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக தனது பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் காரில் ஜான்வி வந்திருப்பது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், வெள்ளை நிறத்திலான ரேஞ்ச் ரோவர் காரில் முன் இருக்கையில் நடிகை ஜான்வி கபூர் அமர்ந்திருப்பதை காணலாம். ஆனால், காரை அவர் ஓட்டவில்லை. இந்த வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் காரில் ஜான்வி இதுவரையில் பொது வெளியில் காட்சி தந்தது இல்லை. ஆதலால், இந்த காரை இவர் சமீபத்தில்தான் வாங்கியிருப்பார் என கூறப்படுகிறது.
வீடியோவில் ஜான்வி கபூரின் புதிய ரேஞ்ச் ரோவர் காரை தெளிவாக காண முடியவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த காரை டீசல் என்ஜின் உடன் ஜான்வி கபூர் வாங்கியிருக்கலாம். இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ரேஞ்ச் ரோவர் கார் ஆனது இந்தியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக, ஜான்வி கபூர் போன்ற சினிமா நட்சத்திரங்கள் இந்த காரை போட்டிப் போட்டு வாங்குகின்றனர்.

லேண்ட் ரோவர் ஜாகுவார் (JLR) நிறுவனம் ரேஞ்ச் ரோவர் கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறது. ரேஞ்ச் ரோவர் கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. அதாவது, வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் வைத்து முழு காராக அசெம்பிள் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு இந்தியாவில் அசெம்பிள் செய்யும் பணிகளை சமீபத்தில்தான் லேண்ட் ரோவர் நிறுவனம் துவங்கியது. இதன் காரணமாகவே, முன்பு இருந்தததை காட்டிலும் ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் நம் நாட்டில் கணிசமாக குறைந்துள்ளன. இங்கிலாந்துக்கு வெளியே ரேஞ்ச் ரோவர் கார்கள் இந்தியாவில் மட்டுமே அசெம்பிள் செய்யப்படுகின்றன. ரேஞ்ச் ரோவர் கார்களின் வரலாற்றில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் விலை முன்பு ரூ.2.8 கோடியாக இருந்தது. தற்போது அது, ரூ.2.36 கோடியாக குறைந்துள்ளது. விலை குறைக்கப்பட்டு இருப்பினும், ரேஞ்ச் ரோவர் காரின் பெர்ஃபார்மன்ஸில் எந்த குறையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், முன்பு இருந்த மாடலை காட்டிலும் புதிய மாடல் ஆனது என்ஜின் பவர் மற்றும் தொழிற்நுட்ப வசதிகள் அனைத்திலும் சிறந்து விளங்குகிறது.
ஜான்வி கபூர் வாங்கியிருக்கும் ரேஞ்ச் ரோவரில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த காருக்கு உள்ளே 35 ஸ்பீக்கர்கள் உடன் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. காரின் என்ஜின் சத்தம், டயர்களின் அதிர்வுகள் உள்ளிட்டவை காருக்குள் கேட்காத வண்ணம் ஆக்டீவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் ரேஞ்ச் ரோவர் காரில் கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஞ்ச் ரோவர் கார்களை பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் போட்டி போட்டு வாங்குவதாக ஏற்கனவே கூறினோம் அல்லவா... நடிகர் சஞ்சய், தத், ரன்பீர் கபூர், நடிகைகள் ஆலியா பட், பூஜா ஹெக்டே உள்பட நிறைய பேர் கடந்த சில மாதங்களில் ரேஞ்ச் ரோவரை வாங்கியுள்ளனர். ஆனால், அவர்களை காட்டிலும் நடிகை ஜான்வி கபூர் லோக்கல் அசெம்பிளியால் குறைந்த விலையில் இந்த காரை வாங்கியிருப்பார்.


Click it and Unblock the Notifications









