1970, 80களில் கொடி கட்டி பறந்த தமிழ் நடிகையின் பொண்ணா இது! மூனே கால் கோடி ரூபா கார்ல சொகுசா போறாங்க!
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று லெக்ஸஸ் எல்எம் (Lexus LM). 350ஹெச் 7 சீட்டர் விஐபி (350h 7 Seater VIP) மற்றும் 350ஹெச் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி (350h 4 Seater Ultra Luxury) என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) முறையே 2.10 கோடி ரூபாய் மற்றும் 2.62 கோடி ரூபாய் வரும்.
ஆன்-ரோடு விலை (On-Road Price) முறையே 2.63 கோடி ரூபாய் மற்றும் 3.28 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த லெக்ஸஸ் எல்எம் காரை திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், ஜான்வி கபூரும் (Janhvi Kapoor) ஒருவர் ஆவார்.

தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் (Sridevi) மகளான இவர், தற்போது பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து கொண்டுள்ளார். இவர் லெக்ஸஸ் எல்எம் காரில் பயணம் செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை, ஜான்வி கபூரின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஜான்வி கபூரிடம் இருப்பது லெக்ஸஸ் எல்எம் காரின் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி வேரியண்ட் ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை சுமார் 3.28 கோடி ரூபாய் வரும்.

இந்த விலை உயர்ந்த காரில், 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 250 பிஎஸ் பவரை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், e-CVT கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும்.
இது சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அதிநவீன மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) சற்றும் பஞ்சம் இல்லை. இதில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 8 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவை தவிர, 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 23 ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பின் இருக்கை பயணிகளுக்கு 48 இன்ச் அளவில் பொழுதுபோக்கு திரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜான்வி கபூர் போன்ற அதிகமாக சம்பாதிக்கும் திரையுலக நட்சத்திரங்களுக்கு இது உண்மையிலேயே மிகவும் ஏற்ற சொகுசு கார்தான். ஜான்வி கபூர் மிகவும் சொகுசான கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர் ஆவார். இதற்கு லெக்ஸஸ் எல்எம் ஒரு உதாரணம் மட்டுமே.
இது தவிர ரேஞ்ச் ரோவர் (Range Rover), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 250 டி (Mercedes Benz GLE 250 d), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 (Lexus LX 570) போன்ற சொகுசு கார்களையும் ஜான்வி கபூர் வைத்துள்ளார்.
ஜான்வி கபூரின் தாய் ஸ்ரீதேவி, கடந்த 1970 மற்றும் 80களில் திரைத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி, பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தார். அதேபோல் ஜான்வி கபூரும் தற்போது பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனவே வரும் காலங்களில் அவர் இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








