கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்!
உலகின் பல நாடுகளில் மிகச்சிறந்த போக்குவரத்து சாதனமாக ரயில்கள் விளங்குகின்றன. அதில், ஒரு சில நாடுகள் ரயில் தொழில்நுட்பத்தில் பன்மடங்கு முன்னே நிற்கின்றன.
அந்த வகையில், ஆசியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் விளங்குகிறது. அதிவேக ரயில், புல்லட் ரயிலுக்கு பெயர் போன ஜப்பானில் தற்போது கண்ணுக்கு புலப்படாத புதிய ரயில் ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.

ஜப்பானில் ரயில் துறை மற்றும் ஓட்டல் துறையில் பிரபலமாக விளங்கும் செய்பூ குழுமம்தான் இந்த புதிய ரயிலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது.

இந்த ரயிலை உருவாக்குவதற்காக கஸுயோ செஜிமா என்ற பிரபல கட்டிட கலை வல்லுனரை செய்பூ நிறுவனம் பணியமர்த்தியிருக்கிறது.

59 வயதாகும் கஸுயோ செஜிமா உருவாக்கிய கட்டிடங்கள் பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தும் விதத்தில் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

மியூசியம்
பிரான்ஸ் நாட்டில் உள்ள லீ லூவர் லென்ஸ் மியூசியத்தை உருவாக்கியவரும் செஜிமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலுக்கு வருவோம்
வரும் 2018ம் ஆண்டு செய்பூ குழுமத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த கண்ணுக்குப் புலப்படாத ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சேவை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து அந்நாட்டின் பிற நகரங்களை இணைக்கும் விதத்தில் இந்த கண்ணுக்குப் புலப்படாத ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சாத்தியமாகுமா?
ரயிலின் வெளிப்புறத்தில் விசேஷ பிரதிபலிப்பு தன்மை கொண்ட பூச்சு காரணமாக, அந்த ரயில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கண்ணுக்குப் புலப்படாத ரயிலை இயக்கும்போது ஏற்படும் அபாயங்கள், ஆபத்துக்கள் குறித்த தற்போது எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications








