ஜப்பானின் முதல் ஸ்டீல்த் ஜெட் போர் விமானம் அறிமுகம்!

Written By:

ரேடார் கண்களில் சிக்காத சிறப்பம்சங்களை கொண்ட ஸ்டீல்த் ஜெட் போர் விமானத்தை ஜப்பான் அறிமுகம் செய்திருக்கிறது.

இதன்மூலமாக, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தாக ஸ்டீல்த் ஜெட் போர் விமானத்தை பெற்றிருக்கும் உலகின் 4வது நாடு என்ற பெருமை ஜப்பானுக்கு கிடைத்திருக்கிறது. இந்த போர் விமானத்தை பற்றி சிறப்புத் தகவல்களை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

மிட்சுபிஷி எக்ஸ்-2 ஷின்ஷின் என்ற பெயரில் இந்த புதிய ஸ்டீல்த் ஜெட் போர் விமானம் குறிப்பிடப்படுகிறது. இந்த விமானம் 14.174 மீட்டர் நீளம் கொண்டது. விரைவில் இந்த போர் விமானம் பறக்கவிட்டு சோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இதர நாடுகள் வைத்திருக்கும் ஸ்டீல்த் ஜெட் போர் விமான விபரங்களை தொடர்ந்து காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

மிட்சுபிஷி எக்ஸ்2 ஷின்ஷின் போர் விமானத்தில் இரண்டு டர்போஃபேன் ஜெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 2,778 கிமீ வேகம் வரை பறக்க வல்லது. சராசரியாக மணிக்கு 2,247 கிமீ வேகத்தில் பறக்கும்.

சீனா

சீனா

ஷெங்யாங் ஜே-31 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த ஸ்டீல்த் ஜெட் போர் விமானம் 16.9 மீட்டர் நீளம் கொண்டது. 11.5 மீட்டர் இறக்கை அகலம் கொண்டது. இந்த விமானத்தில் இரண்டு டர்போஃபேன் ஜெட் எஞ்சின்கள் செயலாற்றுகின்றன. மணிக்கு 2,222 கிமீ வேகம் வரை பறக்கும். 4,000 கிமீ தூரம் வரை பயணிக்கும். 2018ம் ஆண்டு சீன விமானப்படையில் சேர்க்கப்படும்.

Image Source - Wikimedia Commons

செங்க்டு ஜே-20

செங்க்டு ஜே-20

சீனாவிடம் இருக்கும் மற்றொரு ஸ்டீல்த் ஜெட் விமானம். இந்த விமானம் 20 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்டது. ஜே-31 விமானத்தில் பயன்படுத்தப்படும் அதே டர்போஃபேன் எஞ்சின்கள்தான் இந்த விமானத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் சீன விமானப்படையில் சேவையாற்ற சேர்க்கப்பட உள்ளது.

Image Source - Wikimedia Commons

 ரஷ்யா

ரஷ்யா

சுகோய் பிஏகே எஃப்ஏ என்ற பெயரில் அழைக்கப்படும் ரஷ்யாவின் ஸ்டீல்த் ஜெட் போர் விமானம். இந்த விமானத்தில் 2 டர்போஃபேன் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் 2,440 கிமீ வேகத்தில் பறக்கும். 5,500 கிமீ தூரம் வரை பறந்து செல்ல முடியும்.

இந்தியா

இந்தியா

ரஷ்யாவிடம் உள்ள அதே சுகோய் பிஏகே எஃப்ஏ விமானத்தை இந்தியா தனது ஐந்தாம் தலைமுறை விமானமாக தயாரித்து வருகிறது. ரஷ்யாவிடம் உள்ள சுகோய் பிஏகே எஃப்ஏ விமானத்தில் ஒருவர் மட்டுமே இயக்க முடியும். ஆனால், இந்திய பதிப்பில் இரண்டு விமானிகள் அமர்ந்து செல்ல முடியும். ஆனால், இந்த விமானம் இந்திய விமானப்படையில் சேர்க்க இன்னும் நாள் பிடிக்கும்.

 அமெரிக்கா

அமெரிக்கா

1997ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஸ்டீல்த் ஜெட் ரக போர் விமானம்தான் பி-2. இந்த விமானம் 21 மீட்டர் நீளமும், 52.4 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டது. இந்த விமானத்தில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் 4 எஃப்118- ஜிஇ-100 டர்போஃபேன் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மணிக்கு 1,010 கிமீ வேகத்தில் செல்லும். அதிகபட்சமாக 11,100 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

Image Source - Wikimedia Commons

எஃப்-35 லைட்னிங்-II

எஃப்-35 லைட்னிங்-II

அமெரிக்க கடற்படையில் பயன்பாட்டில் உள்ள ஸ்டீல்த் ஜெட் ரக போர் விமானம். எஃப்-35 லைட்னிங்- II விமானம் மூன்று வகைகளில் கிடைக்கிறது. குறைந்த தூரத்திலேயே மேலேழும்பவும், செங்குத்தாக தரையிறங்கும் சிறப்பம்சங்களை கொண்டது. இந்த விமானத்தில் ஒற்றை பிராட் அண்ட் ஒயிட்னி எஃப்135 டர்போஃபேன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 1,988 கிமீ வேகத்தில் பறக்கும்.

mage Source - Wikimedia Commons

எஃப்-22 ராப்டர்

எஃப்-22 ராப்டர்

2005ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நவீன ரக ஸ்டீல்த் ஜெட் ரக போர் விமானம். ஒரு விமானம் 13.33 டிரில்லியன் ரூபாய் மதிப்பு கொண்டது. இந்த விமானம் 18.92 மீட்டர் நீளமும், 13.56 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த விமானத்திலும் பிராட் அண்ட் ஒயிட்னி எஃப்119 பிடபிள்யூ 100 டர்போஃபேன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் மணிக்கு 2,410 கிமீ வேகத்தில் பறக்கும்.

Image Source - Wikimedia Commons

அமெரிக்காவின் முதல் ஸ்டீல்த் ஜெட்

அமெரிக்காவின் முதல் ஸ்டீல்த் ஜெட்

அமெரிக்காவின் முதல் ஸ்டீல்த் ஜெட் விமானம் எஃப்-117 என்று அறியப்படுகிறது. 1983ம் ஆண்டு இந்த விமானம் அமெரிக்க வான் படையில் சேர்க்கப்பட்டது. 1988ம் ஆண்டு வரை பொது பார்வைக்கு வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரே ஸ்டீல்த் ஜெட் விமானமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு 993 கிமீ வேகத்தில் பறக்கும். 1,720 கிமீ தூரம் பயணிக்கும்.

முதல் ஸ்டீல்த் ஜெட் விமானம்

முதல் ஸ்டீல்த் ஜெட் விமானம்

இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஹார்டென் எச்ஓ 229 என்ற விமானம்தான் ஸ்டீல்த் ரக ஜெட் விமானங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட மாடலாக கருதப்படுகிறது. ஹார்டென் பிரதர்ஸ் இந்த விமானத்தை வடிவமைத்தனர்.

 உலகின் அதிவேக விமானங்கள்

உலகின் அதிவேக விமானங்கள்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Japan Gets Its Own Stealth Jet! Is India Even Close?
Story first published: Tuesday, April 26, 2016, 12:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark