கண்ணிமைக்கும் நொடியில் சீறி பாய்ந்த ரயில்! கண்ணிமைக்காமல் பார்த்தால் தான் ரயிலே தெரியும்!
கண்ணிமைக்கும் நொடியில் ரயில் ஒன்று பாலத்தைகடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த ரயில் என சொல்லுவார்கள். இந்த ரயில் வேகம் தான் அதற்கு சரியாக வரும் போது கண்ணிமைக்கும் இந்த ரயில் ஒரு பாலத்தை கடந்து சென்றுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகின் அதிகவேகமான ரயில் என்றால் அது ஜப்பானில் இயங்கும் புல்லட் ரயில்கள் தான். இது வேகத்திற்கு மட்டும் பெயர் பெற்றது இல்லை. மாறாக இ்நத ரயில்கள் குறித்த நேரத்தில் சரியாக வரும். அதேநரம், அதிக பாதுகாப்பு நிறைந்தது, இது மட்டுமல்லாமல் இந்த ரயில் ஒரு முறை கூட விபத்தில் சிக்கியது கிடையாது. இதனால் பாதுகாப்பான அதே நேரம் அதிக வேகத்தில் இயங்கும் போக்குவரத்தாக ஜப்பான் ரயில்வே இருக்கிறது.

இந்நிலையில் ஜப்பான் இந்த புல்லட் ரயிலில் புதிதாக மேக்லேவ் என்ற புதிய வகை ரயிலை அறிமுகப்படுத்தியள்ளது. இது தண்டவாளத்தில் செல்லாமல் தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே ஒரு காந்த ஈர்ப்பு சக்தியை உருவாக்கி அதன் மூலம் பயணிக்கிறது. இதனால் எந்த உராய்வும் இல்லாமல் வேகமாக பயணிக்க முடியும். இந்நிலையில் ஜப்பானில் இயங்கிய இந்த ரயிலை வீடியோ எடுக்க சிலர் பாலத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த பாலத்திலிருந்துபார்த்தால் ரயில் அதன் அதிகபட்ச வேகத்தில் பயணிக்கும் போது பார்க்க முடியும். இந்த ரயில் கிட்டத்தட்ட 500 கி.மீ வேகத்தில்ய பயணிக்கும் போது இந்த இடத்திலிருந்த பார்க்க முடியம் என்பதால் பலர் ஆர்வமாக காத்திருந்தனர். இந்த வீடியோவில் ரிப்போர்ட்டர் ஒருவர் இந்த ரயில் குறித்து விளக்கிகொண்டிருந்தார்.

அப்பொழுது இந்த ரயில் வேகமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தஇடத்தை கடந்து சென்றது. நீங்கள் இந்த வீடியோவை பார்க்கும் போது ரயில் வரும் நேரத்தில் லேசாக கண்ணிமைத்தால் கூட அந்த நேரத்தில் ரயில் கடந்து சென்றிருக்கும். இந்த தொழிற்நுட்பம் தான் ரயில் போக்குவரத்தில் அடுத்த முக்கியமான போக்குவரத்தாக பார்க்கப்படுகிறது.
தண்டவாளத்தையும், ரயிலையும் ஒரு காந்த சக்தியில் இணைத்து இரண்டும் ஒன்றோடு ஒன்று உரசாத வகையிலும் அதே நேரம் ரயில் ஸ்டெபிளாக இருக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் வேகமாக பயணிக்க முடியும். அதே நேரம் இந்த வேகத்தால் ஏற்படும் அதிர்வுகள் ரயில் பயணிகளுக்கு தெரியாத வகையில் இந்த தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இந்த மேக்லேன்வ் ரயில் டோக்யோ மற்றும் ஒசாகா ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. உலகின் அதிக வேகத்தில் பயணிக்கும் பயணிகள் ரயில்இது தான். இந்தர யில் அதிகபட்சம் 500 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த திட்டம் தற்போது வரை முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இது சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்தான். முதலில் 2027ல் வரும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது முழுமையாக 2034 ஆகிவிடும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக வேகமாக ரயில் பயணிப்பது நிச்சயம் மக்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. ஆனால் ஜப்பான் இதில் பல மடங்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. விரைவில் இந்தியாவில் இந்த தொழிற்நுட்பம் வந்தால் நிச்சயம் மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா பெறும்.


Click it and Unblock the Notifications








