ஏன் ரேஞ்ச் கம்மியா இருக்கு? எலெக்ட்ரிக் கார்களில் ஜப்பான் நிறுவனம் செய்த ஆய்விற்கு கை மேல் பலன்!
ஜப்பான் நிறுவனம் ஒன்று தற்போது உள்ள எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்சை 10 சதவீதம் வரை உயர்த்த புதிய தொழினுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.
இதை அடுத்தாண்டில் சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் எப்படி வேலை செய்கிறது? இதனால் எப்படி ரேஞ்ச் அதிகமாகிறது எனக் காணலாம் வாருங்கள்.

ஜப்பானின் கோயோடோ பல்கலைக்கழகத்தின் நிறுவனம் ஃப்ளோஸ்ஃபியா, இந்நிறுவனத்தில் மிட்சுபிஸி, டொடயோட்டா, ஜப்பான் வளர்ச்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த ஃப்ளோஸ்ஃபியா நிறுவனத்தின் வேலை ஆட்டோமொபைல் துறையில் உள்ள தொழிற்நுட்ப ரீதியிலான பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பது, தற்போது உள்ள சிஸ்டத்தை மேலும் நன்மைகள் பயக்கும் வண்ணம் மேம்படுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகிறது.

இந்நிறுவனம் சமீபத்தில் எலெக்ட்ரிக் கார்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதில் இருக்கும் முக்கியமான பிரச்சனை அதன் ரேஞ்ச் தான். முழு சார்ஜில் குறைவான ரேஞ்ச் மட்டுமே செல்ல முடியும் என்பதால் நீண்ட தூரப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு இது சாத்தியப்பட்டு வராது.

அதனால் காருக்கான ரேஞ்ச் அதிகமாக வேண்டும் என்றால் பேட்டரி கொள்ளளவு அதிகமாக வேண்டும். அதனால் விலை அதிகமாகும். இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார் இயங்கும் தொழிற்நுட்பம் குறித்து ஆய்வு செய்த போது எலெக்ட்ரிக் கார்களில் உள்ள செமி கண்டெக்டர்கள் சிலிக்கானை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் எலெக்ட்ரிக் கடத்தலின் போது ஏற்படும் இழப்புகளைக் குறைக்க இந்த சிலிக்கான் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இந்நிறுவனத்தை சிலிக்கானை விடக் குறைவான லாஸ் தரும் பொருள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் கல்லியம் ஆக்ஸைடு என்ற பொருள் சிலிக்கானை விடக் குறைவான மின் கடத்தல் இழப்பு தருவது தெரியவந்தது.

இதனால் இந்த கல்லியம் ஆக்ஸைடு என்ற பொருளை சிலிக்கானுக்கு மாற்றாக வைத்துச் செமி கண்டெக்டர்களை தயாரித்தால் தற்போது உள்ள செமி கண்டெக்டர்களில் ஏற்படும் மின் கடத்தல் இழப்பில் 70 சதவீதம் இழப்பு குறையும். இதனால் தற்போது உள்ள வாகனம் என்ன ரேஞ்ச் தருகிறதோ அதிலிருந்து 10 சதவீதம் கூடுதலான ரேஞ்ச் கிடைக்கும்.

அதாவது இழப்பு குறைவதால் அந்த மின்சாரமும் ரேஞ்சாக கண்வெர்ட் செய்யப்படும். அதனால் தற்போது முழு சார்ஜில் 300 கி.மீ தூரம் ஒரு கார் பயணிக்கிறது என்றால் இனி அதே கார் இந்த தொழிற்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் செமி கண்டெக்டர்களை பயன்படுத்தினால் 330 கி.மீ வரை பயணிக்கும் என அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனால் சிலிக்கானிற்கு மாற்றாகக் கல்லியம் ஆக்ஸைடை கொண்டு இந்நிறுவனமே ஆட்டோமொபைல் துறைக்கான செமி கண்டெக்டர்களை தயாரித்து ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் 2023ம் ஆண்டு பாதியில் இந்த தயாரிப்பு விற்பனைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்காக இந்நிறுவனம் இந்த செமி கண்டெக்டர் தயாரிப்பை வெளியில் உள்ள நிறுவனம் மூலம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்த கல்லியம் ஆக்ஸைடு செமி கண்டெக்டர் 100 பில்லியம் ஜப்பானிய யென் அதாவது இந்திய மதிப்பில் ரூ5800 கோடி அளவில் வர்த்தகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகமாகிவருகிறது. ஜப்பானும் இந்த சந்தையில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த புது செமி கண்டெக்டர் தயாரிக்கும் நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய செமி கண்டெக்டர் மார்கெட்டில் புரட்சியை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








