நிலவுக்கு புல்லட் ரயில் விடப்போகிறார்களாம்...அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம்... எப்ப சாத்தியம் தெரியுமா?

ஜப்பான் பல்கலைக்கழகம் தனி நிறுவனத்துடன் சேர்ந்து பூமியிலிருந்து நிலவிற்கு ரயில் விடும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.2050ம் ஆண்டிற்குள் இது சாத்தியமாகும் என தெரிவித்துள்ளனர் . இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணலாம் வாருங்கள்.

நிலவுக்கு ரயில் விடப்போகிறார்களாம் . . . அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம் . . . எப்ப சாத்தியம் தெரியுமா ?

இந்த உலகின் மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மனிதர்களுக்கு தேவைப்படும் விஷயங்களும் அதிகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் மனிதன் இயற்கை வளங்களை அழிக்க ஆரம்பித்துவிட்டான் விரைவில் அந்த வளங்களும் தீர்ந்து போகும் என்ற நிலை வந்துவிட்டது.

நிலவுக்கு ரயில் விடப்போகிறார்களாம் . . . அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம் . . . எப்ப சாத்தியம் தெரியுமா ?

இதனால் மனிதர்களுக்கு எதிர்காலத்தில் பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்களால் வாழ முடியுமா? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்துப் பல விஞ்ஞானிகள் பூமிக்கு மிக அருகில் உள்ள நிலவிற்கும், செவ்வாய்க் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலவுக்கு ரயில் விடப்போகிறார்களாம் . . . அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம் . . . எப்ப சாத்தியம் தெரியுமா ?

அமெரிக்கா தான் முதன் முறையாக நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. அடுத்த வேறு சில நாடுகள் இதற்கான முயற்சியில் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் கோயோடோ பல்கலைக்கழகம், காஜிமா கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து நிலவிற்கு ரயில் விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.

நிலவுக்கு ரயில் விடப்போகிறார்களாம் . . . அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம் . . . எப்ப சாத்தியம் தெரியுமா ?

அவர்கள் திட்டத்தின்படி பூமியிலிருந்து நிலவிற்கு ரயில் மூலம் ஒரு போக்குவரத்து வசதியைக் கட்டமைப்பது இது மட்டுமல்ல நிலவில் மனிதர்கள் வாழும் வகையில் "மூன் கிளாஸ்" என்ற ஒரு இடத்தை கட்டமைக்கவும் முடிவு செய்துள்ளனர். அந்த "மூன் கிளாஸ்" என்பது பூமியின் அதே சூழ்நிலையை நிலவில் ஏற்படுத்தும் முயற்சியாகும்

நிலவுக்கு ரயில் விடப்போகிறார்களாம் . . . அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம் . . . எப்ப சாத்தியம் தெரியுமா ?

பூமியில் புவியீர்ப்பு விசை அதிகம். ஆனால் நிலவில் மிகவும் குறைவு, ஆனால் இந்த ஜப்பான் பல்கலைக்கழக திட்டத்தின் படி நிலவில் அவர்கள் கட்டமைக்கும் "மூன் கிளாஸ்" என்ற கட்டமைப்பிற்குள் பூமியைப் போலவே புவியீர்ப்பு, நீர் வசதி, பொது போக்குவரத்து வசதி, செடி கொடிகள், மற்றும் மனிதர்கள் வாழத் தகுதியாக அத்தனை வசதிகளும் இருக்கும்.

நிலவுக்கு ரயில் விடப்போகிறார்களாம் . . . அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம் . . . எப்ப சாத்தியம் தெரியுமா ?

இதற்காக பல்கலைக்கழகம் ஒரு கோன் வடிவ கட்டமைப்பு டிசைனையும் உருவாக்கியுள்ளது. இது 1300 அடி உயரமும் 328 அடி ஆரமும் கொண்டது. இந்த திட்டம் இத்துடன் முடியப்போவதில்லை. நிலவிலிருந்து அடுத்த கட்டமாகச் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று அங்கும் இது போன்ற கட்டமைப்பு விஷயங்களை உருவாக்கி அங்கும் மனிதர்கள் வாழத் தகுதியாக இடமாக மாறப்படும் என்றும், மேலும் செவ்வாய்க் கிரகத்திலிருந்து நேரடியாகப் பூமிக்கு வருவதற்காக ரயில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நிலவுக்கு ரயில் விடப்போகிறார்களாம் . . . அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம் . . . எப்ப சாத்தியம் தெரியுமா ?

இது அந்நிறுவனத்தின் இரண்டாம் கட்ட திட்டம் தான் முதல் கட்ட திட்டம் நிலவிற்கு ரயில் விடுவதும், அங்கு மனிதர்கள் வாழத் தகுதியான இடத்தை கட்டமைப்பதும் தான் எனக் கூறப்படுகிறது. நிலவின் கட்டமைப்பில் நாம் முன்பே சொன்னது போலக் கோன் வடிவ டிசை உருவாக்கியுள்ளது என முன்னேர் குறிப்பிட்டோமோ அது எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. இது ஒரு முறை சுழற்சியாக 20 நொடிகள் வரை ஆகிறது. இதற்கு முதன் மனிதர்கள் வசிக்க வேண்டும். அப்பொழுது தான் பூமியின் சுழற்சியில் வாழ்ந்த சூழ்நிலை அங்கும் கிடைக்கும்.

நிலவுக்கு ரயில் விடப்போகிறார்களாம் . . . அங்கு மனிதர்கள் வசிக்கவும் முடியுமாம் . . . எப்ப சாத்தியம் தெரியுமா ?

இது மட்டுமல்ல இந்த கோன் வடிவம் இரண்டு அமைக்கப்படுகிறது. இரண்டும் தனித்தனியாக அமைக்கப்படவுள்ளது. அந்த இரண்டிற்கு இடையையும் ரயில் போக்குவரத்து ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் 2050ம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல பூமியிலிருந்து நிலவு, நிலவிலிருந்து செவ்வாய்க் கிரகம், பின்னர் அங்கிருந்து நேரடியாகப் பூமி என ஒரு முக்கோண அமைப்பை வரும் 2120 ஆண்டிற்குள் ஏற்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் ஜப்பான் இறங்கிவிட்டால் நிலவை கைப்பற்றும் முதல் நாடாக ஜப்பான் மாறும்.

Images Courtesy: Kyoto University & KAJIMA CORPORATION

Article Published On: Saturday, July 16, 2022, 10:41 [IST]
English summary
Japan university plans for Bullet train to the moon in 2050
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+