ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

2.12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிஸ்ஸான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார், போலீசாருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் அதிவேக செயல்திறனால் குற்றவாளிகளால் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.

By Arun

2.12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிஸ்ஸான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார், போலீசாருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் அதிவேக செயல்திறனால் குற்றவாளிகளால் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

துபாய் போலீசார் கவர்ச்சிகரமான மற்றும் ஆடம்பரமான கார்களை பயன்படுத்துகின்றனர். ஆடி, மெக்லாரன், மெர்ஸிடெஸ் பென்ஸ், புகாட்டி, ஆஸ்டன் மார்டின், லம்போர்கினி, பெராரி, பிஎம்டபிள்யூ என அவர்கள் பயன்படுத்தும் லக்ஸரி மற்றும் சூப்பர் கார்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

இத்தாலி போலீசாரும் கூட லம்போர்கினி மற்றும் பெராரி போன்ற விலை உயர்ந்த கார்களை ரோந்து பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க போலீசாரிடம், ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் ஹைபிரிட் உள்ளது. ஆனால் இந்த விலை உயர்ந்த கார்கள் எல்லாம் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் வாங்கி தந்தவை.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

ஆனால் ஜப்பான் போலீசாருக்கு, நிஸ்ஸான் GT-R ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த காரின் விலை 2.12 கோடி ரூபாய் என்பதுதான் ஆச்சரியம் அளிக்கும் விஷயம். ஜப்பானை சேர்ந்த ஒருவர்தான் போலீஸ் படைக்கு, விலையுயர்ந்த நிஸ்ஸான் GT-R காரை அளித்துள்ளார்.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

ஆனால் அவர் யார்? என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் எதற்காக விலை உயர்ந்த காரை போலீசாருக்கு நன்கொடையாக வழங்கினார்? என்ற தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நிச்சயமாக அவர் கோடீஸ்வரராகதான் இருக்ககூடும்.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

நிஸ்ஸான் GT-R ஸ்போர்ட்ஸ் காரை, ஜப்பான் போலீசார் வெறுமனே ஏற்றுக்கொள்ளவில்லை. விழா ஒன்றை நடத்தி, கொண்டாடி மகிழ்ந்து விட்டனர். ஜப்பான் போலீஸ் கார்களில் கருப்பு-வெள்ளை நிற பெயிண்ட் ஜாப் செய்யப்பட்டிருக்கும். அது ஜப்பான் போலீஸ் கார்களுக்கான அடையாளம்.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

அதன்படி நன்கொடையாக கிடைத்த நிஸ்ஸான் GT-R ஸ்போர்ட்ஸ் காரிலும் கருப்பு-வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. காரின் டாப்பில் சிவப்பு நிற சுழல் விளக்கும், முன்பக்க பம்பரில் எல்இடி ஸ்ட்ரோப் லைட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

ஜப்பானில் உள்ள டோச்சிகி பகுதி போலீசாருக்குதான், நிஸ்ஸான் GT-R கார் பரிசாக கிடைத்துள்ளது. இனி அப்பகுதி மக்கள் கார்களில், ஓவர் ஸ்பீடில் பயணிக்க முடியாது. வாகனத்தை ஓட்டி கொண்டிருக்கும்போது, எந்த தவறையும் செய்ய முடியாது.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

ஏனெனில் நிஸ்ஸான் GT-R கார் அவர்களை எளிதாக விரட்டி பிடித்து விடும். ஆம், நன்கொடையாக கிடைத்த நிஸ்ஸான் GT-R காரை ரோந்து பணிக்கு பயன்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, நிஸ்ஸான் GT-R கார் வெறும் 2.7 வினாடிகளில் எட்டிவிடும்.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

நிஸ்ஸான் GT-R காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிலோ மீட்டர்கள். இந்த கார் அதிகபட்சமாக 561 பிஎச்பி பவரையும், 637 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கிரிமீனல்கள் தப்புவது கொஞ்சம் கஸ்டம்தான்!

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

நிஸ்ஸான் GT-R காரை போலீசாருக்கு நன்கொடையாக வழங்கியவரின் பெயர் வெளியாகாவிட்டாலும் கூட, அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 64 வயது முதியவர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க இந்த கார் பயன்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

ஜப்பான் போலீஸ் படையில், இந்த மாடல் கார் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. டோச்சிகி பகுதியில் உள்ள நிஸ்ஸான் நிறுவனத்தின் பிளாண்ட்டில்தான், இந்த கார் தயாரிக்கப்பட்டது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Japanese Resident Donates Nissan GT-R Patrol Car Worth Rs 2.12 Crore to Police Department. Read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X