நம்ம ஊர் ராயல் என்ஃபீல்டு பைக் மட்டும் தனியா தெரியுது!! ஜப்பானில் ரோட்ல போறவங்க எல்லாம் ஒரு மாதிரி பாக்குறாங்க
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மோட்டார்சைக்கிள் ஜப்பான் நாட்டில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளை தன் பக்கம் கவர்ந்து இழுத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது. நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்தது மட்டுமின்றி, ஜப்பான் இளைஞர்களையும் கிளாசிக் 350 வெகுவாக கவர்ந்துள்ளது.
சென்னையை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் உள்ளதை போல், சில ஆசிய நாடுகளிலும் பிரபலமானதாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், தாய்லாந்து மற்றும் இந்தோனிஷிய சந்தைகளில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஆனால், ஜப்பானில் ராயல் என்ஃபீல்டுக்கு அந்த அளவிற்கு பெரிய சந்தை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை ஜப்பான் நாட்டில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் சிலர் ஆர்வமாக பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பதிவிட்டவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார்.
அஜய் பாண்டே என பெயர் கொண்ட அந்த நபர் தனது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் பல்வேறு வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு, சமீபத்தில் ஜப்பான் நாட்டிற்கு சென்ற அஜய் பாண்டே அங்கு ஒரு காஃபி ஷாப்பில் தனது பைக்கை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, சில ஜப்பான் இளைஞர்கள் தனது பைக்கை ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து அஜய் பாண்டே பார்த்துள்ளார்.

பின்னர், அவர்களுக்கு அருகே சென்று இது தன்னுடைய பைக் என அறிமுகப்படுத்திக் கொண்டவர் பின்னர் அவர்களுடன் உரையாடி உள்ளார். உரையாடலுக்கு இடையே பைக்கை பற்றிய சில கேள்விகளையும் அவர்களிடன் அஜய் பாண்டே கேட்டுள்ளார். அதாவது, ஜப்பானில் பைக் ரைடிங் கலாச்சாரம் எவ்வாறு உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர்களிடம் கேட்டார்.
அஜய் பாண்டேவின் இந்த வீடியோவின் மூலம், அந்த ஜப்பான் மாணவ, மாணவிகள் கிளாசிக் 350 பைக்கை அப்போதுதான் முதல்முறையாக பார்த்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஏற்கனவே கூறியதுபோல், ஜப்பானில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அவ்வளவாக பயன்பாட்டில் இல்லை. அப்படியிருக்கையில், பள்ளி பயலும் மாணவர்களுக்கு கிளாசிக் 350 பைக்கை பற்றி தெரியாதது ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால், ராயல் என்ஃபீல்டு மட்டுமில்லை, ஜப்பானில் நிறைய பைக் நிறுவனங்கள் சிறிய அளவிலான ஆதிக்கத்தையே கொண்டுள்ளன. ஏனெனில், பொதுவாகவே ஜப்பான் மக்கள் பைக் ரைடிங்கை அவ்வளவாக விரும்புவதில்லை. குறுகிய தூர பயணத்திற்கு பைக் என்றால் ஓகே என்பார்கள். அதுவே, நீண்ட தொலைவு பயணம் என்றால் காரையே பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதுவும் இல்லாமல், சிறிய நாடு என்பதால், ஜப்பானில் நீண்ட தொலைவு பயணங்களை மேற்கொள்பவர்கள் குறைவே. இருப்பினும், ஜப்பான் நாட்டில் ராயல் என்ஃபீல்டின் ஷோரூம்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை காட்டும் விதமாக அங்கிருக்கும் ஒரு ராயல் என்ஃபீல்டு ஷோரூமுக்கு அஜய் பாண்டே சென்றுள்ளார். அங்கு, அனைத்து விதமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜப்பான், பைக்கில் சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற, அழகான நாடு ஆகும். ஆனால், அந்த நாட்டு மக்கள் தங்களது வாழ்நாளில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்றிருப்பர் என்பதால், பைக் ரைடிங்கை பெரியதாக விரும்புவதில்லை. இருப்பினும், அத்தகைய மக்களையும் அஜய் பாண்டேவின் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் கவர்ந்துவிட்டது.


Click it and Unblock the Notifications









