ஜப்பான் நாட்டின் முதல் பயணிகள் ஜெட் விமானம்... மிட்சுபிஷி அறிமுகம்!

Written By:

ஜப்பான் நாட்டின் முதல் பயணிகள் ஜெட் விமானத்தை மிட்சுபிஷி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

அது நாட்டு விமான தயாரிப்புத் துறையில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. சமீபத்தில் ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நகோயா விமான நிலையத்தில் வைத்து இந்த விமானம் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. விமானத்தின் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

முதல் ஜெட் விமானம்...

முதல் ஜெட் விமானம்...

1962ல் ஜப்பான் நாட்டின் முதல் பயணிகள் டர்போ ரக விமானத்தை நிஹோன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுவும் மிட்சுபிஷி ஹெவி இன்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் செயல்பட்ட நிறுவனம்தான். ஒய்எஸ்- 11 என்ற அந்த விமானம் புரொப்பல்லர் எஞ்சின் கொண்டது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடல் அந்நாட்டின் முதல் பயணிகள் ஜெட் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர்

பெயர்

மிட்சுபிஷி ரீஜினல் ஜெட் [MRJ] என்று அழைக்கப்படும் இந்த விமானம் குறைந்த தூர அல்லது உள்நாட்டு பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

 வடிவம்

வடிவம்

மிட்சுபிஷி எம்ஆர்ஜே விமானம் 115 அடி நீளம் கொண்டது. இந்த விமானத்தில் 80 பேர் முதல் 92 பேர் வரை பயணிக்கலாம். இரட்டை எஞ்சின்கள் கொண்டது.

விற்பனை

விற்பனை

2017ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாக மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு முதலில் டெலிவிரி வழங்கப்பட உள்ளது.

சிறப்புகள்

சிறப்புகள்

அதிக எரிபொருள் சிக்கனம், நவீன தொழில்நுட்ப வசதிகள், குறைவான இயக்குதல் செலவீனம், சொகுசு போன்ற அம்சங்கள் மூலமாக இந்த விமானம் சிறிய ரக விமான மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிகரமாக பறந்தது...

வெற்றிகரமாக பறந்தது...

நகோயா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மிட்சுபிஷி விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் வெற்றிகரமாக பறந்தது. மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

 போட்டி

போட்டி

இந்த ரக விமான மார்க்கெட்டில் உலக அளவில் கோலோய்ச்சி வரும் பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் மற்றும் கனடா நாட்டின் பம்பார்டியர் நிறுவனங்களுக்கு இந்த புதிய மிட்சுபிஷி விமானம் கடும் நெருக்கடியை தரும்.

இதர செய்திகள்

01. ஹோண்டாவின் குட்டி விமானம்...

02. மஹிந்திரா குட்டி விமானம்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mitsubishi Aircraft Corporation and Mitsubishi Heavy Industries, Ltd. (MHI) today conducted the first flight of the first flight test aircraft for the MRJ (Mitsubishi Regional Jet), their next-generation regional jet.
Story first published: Saturday, November 14, 2015, 12:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark