காஸ்ட்லியான கருப்பு நிற எலெக்ட்ரிக் காரை வாங்கிய பாடகி.. ஹீரோயினை போல இருக்காங்க இவங்க பாடகியா!
மின்சார கார்களுக்கு இந்தியப் பணக்காரர்கள் மத்தியிலும், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக திரைத்துறையைச் சார்ந்த முன்னணி பிரபலங்கள் சிலர் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் உரிமையாளர்களாக மாறியிருக்கின்றனர். ஏன் நம்முடைய தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய்-கூட ஓர் ஆடம்பர எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றார். பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) சொகுசு செடான் ரக எலெக்ட்ரிக் காரையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இவரை போலவே இன்னும் பல திரைப்பிரபலங்கள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையிலேயே பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முன்னணி பாடகி ஒருவர் எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கு புதிதாக மாறி இருக்கின்றார். ஜஸ்லீன் ராயல், இவரே புதிதாக எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கு மாறியவர் ஆவார். இவர் புத்தம் புதிய பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3) எலெக்ட்ரிக் காரையே வாங்கி இருக்கின்றார்.

இந்தியாவில் விற்கப்படும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக பிஒய்டி அட்டோ 3 இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலையே முன்னணி பாடகியான ஜஸ்லீன் தற்போது வாங்கி இருக்கின்றார்.
இந்த கார் கொள்முதலை ஜஸ்லீன் ராயல் தன்னுடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் பாடல் இயக்குநர் என பல ரோல்களை இவர் ஆற்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, பல்வேறு விருதுகளையும் இவர் வென்றிருக்கின்றார்.

குறிப்பாக, 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர் என்கிற விருதை இவரே வென்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய ஓர் நபரே தற்போது சுற்றுசூழலின் நலனில் பங்களிக்கும் விதமாக எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றார். பிஒய்டி அட்டோ 3 இந்தியாவில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் சுப்பீரியர் (Superior) ஆகியவையே அவை ஆகும். இதில் எந்த தேர்வை பாடகி ஜஸ்லீன் வாங்கியிருக்கின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. அதேவேளையில், இதன் ஆரம்ப நிலை தேர்வே இந்தியாவில் ரூ. 24.99 லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இத்தகைய உயரிய விலைக் கொண்ட காரையே பாடகி தனக்குச் சொந்தமானதாக மாற்றி இருக்கின்றார். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. 60.48 kWh மற்றும் 49.92 kWh ஆகியவையே அவை ஆகும்.
இதில் முதல் பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 521 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது பேட்டரி பேக் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 468 கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய ரேஞ்ஜ் திறனை வழங்கும் மற்றும் அதிகம் பிரீமியம் அம்சங்களை இந்த கார் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் குறிப்பாக, சொகுசு கார் விரும்பிகள் மத்தியில் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
லெவல் 2 வகை அடாஸ் அம்சம், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கை, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர் ஃபுல் மோட்டார் உள்ளிட்ட சிறப்பு வசதிகளையே இந்த கார் பெற்றிருக்கின்றது. இத்துடன், 7 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்டுகள் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, திரைப் பிரபலங்கள் மத்தியில் ஆடம்பர அம்சங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பாடகி ஜஸ்லீன் எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








