நம்ம சென்னை பைக் பிரபல ஹாலிவுட் நடிகரிடம்!! அவருக்கு ஏற்ற மாதிரி கம்பீரமா இருக்கு...

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளுக்கு இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. இன்னும் சொல்லப் போனால், சில வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டு பைக்கா அல்லது ஹார்லி-டேவிட்சன் பைக்கா என வாக்குவாதம் செய்துக் கொள்ளும் அளவிற்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ரசிகர்களை பரவலாக கொண்டுள்ளன. தற்போது இந்தியாவில் இயங்கினாலும், ராயல் என்ஃபீல்டு அடிப்படையில் ஓர் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் நிறுவனமாகும். சென்னையில் இதற்கு தொழிற்சாலை உள்ளது. நம் சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் கடல்கடந்து பல நாடுகளில், பல விஐபிகளை சென்றடைகின்றன.

இந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம் (Jason Statham) அவர்களை ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்று சென்றடைந்துள்ளது. ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ், தி டிரான்ஸ்போர்டர் ஃப்ரான்சிஸி மற்றும் பீகீப்பர் உள்ளிட்டவை இவரது நடிப்பில் வெளிவந்து கவனத்தை பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

jason statham with royal enfield

ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்திருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் ஜேசன் ஸ்டாதம் வெளியிட்டுள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மென்ஷன் செய்திருப்பதை தவிர்த்து ஜேசன் ஸ்டாதம் வேறெதுவும் குறிப்பிடவில்லை. இதனால், இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை நடிகர் ஜேசன் ஸ்டாதம் வாங்கியுள்ளாரா அல்லது படப்பிடிப்பின் போது பயன்படுத்தினாரா என்பது தெரியவில்லை.

இந்த படங்களில், ஜேசன் ஸ்டாதம் அமர்ந்திருப்பது ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக் ஆகும். மிஸ்டர் க்ளீன் என்கிற பெயிண்ட்டை கொண்ட காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் இந்த நடிகர் அமர்ந்துள்ளார். படங்களில் இருப்பதை போன்று, மிஸ்டர் க்ளீன் பெயிண்ட் ஆப்ஷனில் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக் கண்ணாடி போன்றதான பெயிண்ட்டில் கிடைக்கிறது.

jason statham with royal enfield

மிஸ்டர் க்ளீன் பெயிண்ட் ஆப்ஷனில் மட்டுமின்றி, ஸ்லிப்ஸ்ட்ரீம் ப்ளூ, அபெக்ஸ் கிரே, டக்ஸ் டீலக்ஸ், ராக்கர் ரெட் மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் க்ரீன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் தற்சமயம் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.19 லட்சத்தில் இருந்து ரூ.3.45 லட்சம் வரையில் உள்ளன.

காண்டினெண்டல் ஜிடி650 மற்றும் இண்டர்செப்டர் 650 இந்த இரு பைக்குகளை 650 ட்வின்ஸ் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அழைக்கிறது. காண்டினெண்டல் ஜிடி650 உடன் ஒப்பிடுகையில், இண்டர்செப்டர் 650 பைக்கின் விலை சற்று குறைவு ஆகும். இண்டர்செப்டர் 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.3.03 லட்சத்தில் இருந்து ரூ.3.31 லட்சம் வரையில் உள்ளன.

jason statham with royal enfield

இந்த இரு பைக்குகளிலும் 648சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. 270-டிகிரி ஃபையரிங் ஆர்டர் உடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் வாயு மூலமாக செயல்படும் ட்வின் ஷாக்குகளும் வழங்கப்படுகின்றன.

பிரேக்கிற்கு இந்த 650சிசி பைக்குகளில் முன் சக்கரத்தில் 320மிமீ-லும், பின் சக்கரத்தில் 240மிமீ-லும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இவற்றுடன், பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் இந்த பைக்குகளில் கிடைக்கிறது. இவை இரண்டு மட்டுமின்றி, சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் ஷூட்கன் 650 பைக்குகளையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகும் அளவிற்கு விற்பனையாகுவதில்லை. வெளிநாடுகளில் 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளை தான் நிறைய பேர் விரும்பி வாங்குகின்றனர். ஹார்லி-டேவிட்சன், டிரையம்ப் மோட்டார்சைக்கிள் போன்ற நிறுவனங்களை அவற்றின் சொந்த நாடுகளில் சமாளிக்கும் ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் வரையில் சென்றிருப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2024, 17:35 [IST]
English summary
Jason statham posing with royal enfield continental gt650 check all details here
மேலும்... #off beat #india #royal enfield
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X