பாலிவுட் போய்ட்டு ஆளே மாறிட்டாங்க!! புதுசா பிரைவேட் ஜெட் எல்லாம் வாங்கி மாஸ் காட்டும் நடிகை நயன்தாரா!

நயன்தாரா (Nayanthara), தென்னிந்தியா மட்டுமின்றி, இந்தியா முழுவதிலுமே ஓர் முன்னணி நடிகை. நடிகர் ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்திருந்த நயன்தாரா தற்போது புதியதாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், பிரைவேட் ஜெட்டின் உட்பக்க படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளன.

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவை தெரியாதவர்களே இருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருக்கும் நடிகை ஆவார். பிறந்தது கேரளா என்றாலும், நயன்தாராவை சினிமாவில் உச்சத்தில் கொண்டு நிறுத்தியது நம் கோலிவுட் தான். அதன்பின், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் நடித்தார்.

actress nayanthara buys private jet

இதில் சில படங்கள் வெற்றியடைந்தன, சில படங்கள் தோல்வியடைந்தன. இருப்பினும், தென்னிந்தியா முழுவதும் அறியப்படக்கூடிய நடிகையாக விளங்குகிறார் நயன்தாரா. சமீபத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி சினிமா உலகிலும் நுழைந்துள்ளார் நயன்தாரா. மிக பெரிய வெற்றியடைந்துள்ள ஜவான் திரைப்படம் இதுவரையில் ரூ.1000 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் செம்ம குஷியில் இருக்கும் நடிகை நயன்தாரா புதியதாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், பிரைவேட் ஜெட் உடன் நயன்தாரா மற்றும் அவரது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. நடிகை நயன்தாராவின் நிகர சொத்து மதிப்பு தற்சமயம் ரூ.200 கோடி என கூறப்படுகிறது.

actress nayanthara buys private jet

தற்போது வாங்கப்பட்டிருக்கும் பிரைவேட் ஜெட்டின் மதிப்பு மட்டும் ரூ.50 கோடியாம். ஓர் குறிப்பிட்ட வெள்ளை -நீல நிறத்திலான ஜெட் ஒன்றில் இருந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி இறங்கி வெளியே வரும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமீப காலமாகவே அடிக்கடி பார்த்து வருகிறோம். ஆனால் அது இந்த தம்பதி சொந்தமாக வாங்கியுள்ள பிரைவேட் ஜெட் என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.

ஜெட்டின் உட்புறம் முற்றிலுமாக லக்சரி தோற்றத்தில் காட்சியளிக்கிறது. சாய்க்கக்கூடிய, மஸாஜ் வசதிகள் கொண்ட சொகுசான இருக்கைகள் கேபினுக்குள் உள்ளன. இவை தவிர்த்து கூடுதல் பயணிகள் வந்தால் அவர்களுக்கான இருக்கை வசதியையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். கழிவறை, கை கழுவதற்கான பேஷன் உள்ளிட்டவை தனித்தனியாக வழங்கப்பட்டு உள்ளன.

actress nayanthara buys private jet

ஓய்வெடுக்க ஓர் படுக்கை அறை கூட உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமா துறையில் பிரைவேட் ஜெட்டை வைத்துள்ள ஒரே நடிகையாக நயன்தாரா புகழப்படுகிறார். அதுவே, பாலிவுட்டில் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா மற்றும் மாதுரி தீக்‌ஷிட் உள்ளிட்டோர் பிரைவேட் ஜெட் வைத்துள்ளனர். இவர்களின் பிரைவேட் ஜெட்கள் ஒவ்வொரு விதமான விலையை கொண்ட வெவ்வேறு விதமான மாடல்கள் ஆகும்.

பிரைவேட் ஜெட் வாங்கும் ஒருவரினால் லக்சரி கார்களை வாங்க முடியாதா என்ன...? நடிகை நயன்தாராவிடம் ரூ.1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உள்ளது. மேலும், ரூ.1 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ்350டி மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் உள்ளிட்ட சொகுசு கார்களும் இவரிடம் உள்ளன. தற்சமயம், கணவர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா ரூ.100 கோடி மதிப்பிலான வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

actress nayanthara buys private jet

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நாடுகள் அளவிற்கு இல்லையென்றாலும், இந்தியாவிலும் பிரைவேட் ஜெட்டை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஏனெனில், சொகுசு காராக இருப்பினும் நீண்ட தொலைவிற்கு பயணிப்பது நேர விரயத்தையும், சற்று அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். அதுவே விமான பயணம் என்றால், அதற்கேற்ப சில மணிநேரங்களுக்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆதலால்தான், பிரைவேட் ஜெட் பெஸ்ட்.

Article Published On: Thursday, September 28, 2023, 10:19 [IST]
English summary
Jawan actress nayanthara private jet price specifications
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X