ஒன்றரை கோடி ரூபாய் காரில் தேவதை மாதிரி வந்தது அவங்களா! நல்லா உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னு தெரியுது!

இந்திய திரையுலகில் தற்போது அதிகம் பேசப்பட்டு கொண்டிருக்கும் ஒரு படம் ஜவான் (Jawan). ஷாருக்கான் (Shah Rukh Khan), நயன்தாரா (Nayanthara) மற்றும் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அட்லி (Atlee) இயக்கியுள்ளார். அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் பணியாற்றயுள்ள ஜவான் திரைப்படம், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை கலெக்ஸன் செய்து, பாக்ஸ் ஆஃபீஸில் (Box Office Collection)கெத்து காட்டி வருகிறது. வசூலை வாரி குவித்து வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகைகளில் ஒருவர் சன்யா மல்ஹோத்ரா (Sanya Malhotra).

Sanya Malhotra Audi Q8

தங்கல் (Dangal) திரைப்படத்தில் நடித்ததன் மூலம்தான், சன்யா மல்ஹோத்ரா புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்த திரைப்படத்தில் அமிர்கானின் (Aamir Khan) மகள் ஆக அவர் நடித்திருந்தார். அதாவது மல்யுத்த வீராங்கனையான பபிதா குமாரி போகத்தின் (Babita Kumari Phogat) கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார்.

தற்போது ஜவான் திரைப்படத்தில் நடித்திருப்பதன் மூலம் சன்யா மல்ஹோத்ராவின் புகழ் மேலும் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் மும்பை நகரின் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு மிகவும் விலை உயர்ந்த காரில், சன்யா மல்ஹோத்ரா வந்துள்ளார். யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ (Viral video) தற்போது வைரலாக பரவி வருகிறது.

Jawan Actress Sanya Malhotra Spotted In Audi Q8

அந்தேரியில் உள்ள அலுவலகத்திற்கு சன்யா மல்ஹோத்ரா வந்தது, ஆடி க்யூ8 (Audi Q8) கார் ஆகும். இது கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்தது. கடந்த 2022ம் ஆண்டுதான் சன்யா மல்ஹோத்ரா, ஆடி க்யூ8 காரை வாங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய சந்தையில் ஆடி க்யூ7 (Audi Q7) காருக்கு மேலாக க்யூ8 கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது ஆடி நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி க்யூ7 காரின் ஆரம்ப விலையே (Price), 1.07 கோடி ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.43 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே ஆன் ரோடு விலை இன்னும் பல லட்ச ரூபாய் கூடுதலாக வரும். செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், 3.0 லிட்டர் TFSI V6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 335 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் விர்ச்சூவல் காக்பிட் டிஸ்ப்ளே, வென்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதிகளுடன் இருக்கைகள் என ஆடி க்யூ8 காரில் ஏராளமான சொகுசு மற்றும் அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கோடீஸ்வரர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமான காராக திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport), பிஎம்டபிள்யூ எக்ஸ்6 (BMW X6) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) போன்ற கார்களுடன், ஆடி க்யூ8 போட்டியிட்டு வருகிறது. திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றவர்களின் சொகுசான பயணங்களுக்கு இந்த கார் ஏற்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 14, 2023, 13:19 [IST]
English summary
Jawan actress sanya malhotra spotted in audi q8 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+