இந்தியாவின் பணக்கார எம்பி ஜெயாபச்சனின் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Written By:

பிரபல பாலிவுட் நடிகையும், சமாஜ் வாதி கட்சியின் எம்.பி.யுமான ஜெயாபச்சன் தன்னுடைய சொத்து மதிப்பு விபரங்களை மாநிலங்களவை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இதில், அவருக்கு ரூ.1,000 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த விபரங்களின் மூலமாக இந்தியாவின் பணக்கார பாராளுமன்ற உறுப்பினராக கருதப்படும் நடிகை ஜெயாபச்சன் 2012ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும்போது ரூ.412 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.550 கோடி அதிகரித்துள்ளது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மேலும், தன்னிடம் நகை, பணம்,கார்களாக மட்டும் ரூ.463 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது கணவர் அமிதாப்பச்சன் மற்றும் தன்னிடம் 12 விலை உயர்ந்த கார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த கார்களின் மதிப்பு மட்டும் ரூ.36 கோடியாக குறிப்பிடப்பபட்டு இருக்கிறது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அமிதாப்பச்சன்- ஜெயாபச்சன் தம்பதியிடம் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் இருக்கிறது. இந்த காருக்கு தனது செல்லப்பெயரான பிக் பி என்பதன் சுருக்கமான பிபி என்ற நம்பர் பிளேட்டுடன் வாங்கி இருக்கிறார். பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ரா இந்த காரை பரிசாக வழங்கினார். இந்த காரின் மதிப்பு ரூ.4.5 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஜெயாபச்சன் சொந்த உபயோகத்திற்காக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் (W221) சொகுசு கார் மாடலை பயன்படுத்தி வருகிறார். இந்த காரின் மதிப்பு ரூ.1.5 கோடியாக இருக்கிறது. மொத்தமாக பச்சன் குடும்பத்திடம் 3 மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாராளுமன்றத்திற்கு செல்லும்போது அதிக அளவில் டொயோட்டா கேம்ரி காரை ஜெயாபச்சன் பயன்படுத்தி வருகிறார். இந்த கார் ரூ.35 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அமிதாப்பச்சன்- ஜெயாபச்சன் தம்பதியிடம் ரேஞ்ச்ரோவர் பயோகிராஃபி சொகுசு எஸ்யூவி காரும் உள்ளது. இந்த கார் ரூ.4.5 கோடி விலை மதிப்பு கொண்டது. இதுதவிர, லேண்ட்ரோவர் வோக் எஸ்யூவியும் இவர்களிடம் உள்ளது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அமிதாப்பச்சனிடம் டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியும் உள்ளது. இந்த எஸ்யூவி கிட்டத்தட்ட ரூ.1.15 கோடி விலை மதிப்பு கொண்டது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அமிதாப்பச்சனிடம் போர்ஷே கேமென் ஸ்போர்ட்ஸ் காரும் உள்ளது. இந்த காரின் விலையும் ஒரு கோடி ரூபாயை நெருங்குகிறது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அமிதாப்பச்சனிடம் மினி கூப்பர் காரும் உள்ளது. இந்த கார் ரூ.33 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இவர்களது கார் கராஜில் விலை உயர்ந்த கார்கள் மட்டுமில்லை, டாடா நானோ காரும் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம்.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதுமட்டுமல்ல, தனது கணவர் அமிதாப்பச்சனிடம் டிராக்டர் ஒன்றும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆயிரம் கோடிக்கு அதிபதியான ஜெயாபச்சன் கார்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மொத்தத்தில் ரூ.36 கோடிக்கு கார்கள் மட்டும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். பிக் பி.,க்கு இது ஜுஜு.,பிதான்..!!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Jaya Bachchan Cars Collection and Worth Details Revealed.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark