1970களில் கொடி கட்டி பறந்த நடிகையா இவங்க! ரெண்டே கால் கோடி ரூபா கார வீட்டுக்காரர் வாங்கி குடுத்துருக்காரு!

இந்தியாவின் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மிர்ணாள் தாகூர் (Mrunal Thakur), சோனம் கபூர் (Sonam Kapoor), கரீனா கபூர் (Kareena Kapoor), ஷாகித் கபூர் (Shahid Kapoor) மற்றும் கபில் ஷர்மா (Kapil Sharma) போன்ற திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் இந்த சொகுசு செடான் காரை வைத்துள்ளனர்.

இந்த வரிசையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் சொகுசு செடான் காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Jaya Bachchan Spotted In Mercedes Benz S-Class

இந்த வைரல் வீடியோவில், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் (Jaya Bachchan), அவர்களுடைய புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை பயன்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. தற்போது 76 வயதாகும் ஜெயா பச்சனுக்கு, நடிகை, அரசியல்வாதி என பல்வேறு முகங்கள் உள்ளன.

1970களில் ஜெயா பச்சன் திரைத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்தார். எனவே 1970களில், அவரை நிறைய திரைப்படங்களில் பார்க்க முடிந்தது. அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார். இதற்கிடையே அரசியலிலும் நுழைந்த அவர், தற்போது சமாஜ்வாதி கட்சியின் (Samajwadi Party) சார்பில் ராஜ்யசபா எம்பியாக (Rajya Sabha MP) உள்ளார்.

Mercedes Benz S-Class

அமிதாப் பச்சன் குடும்பத்தின் புது வரவான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் மிகவும் விலை உயர்ந்தது. இந்த காரின் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் (S-Class S450 4Matic) வேரியண்ட்டைதான், அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 1.90 கோடி ரூபாயாக உள்ளது.

ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 2.25 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

367 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஆடி ஏ8 (Audi A8) மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) உள்ளிட்ட கார்களுடன், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அமிதாப் பச்சன் குடும்பத்தில் சொகுசு கார்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை. ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VII (Rolls Royce Phantom VII), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 (Lexus LX 570) மற்றும் போர்ஷே கேமென் எஸ் (Porsche Cayman S) போன்ற கார்கள் எல்லாம் அவர்களிடம் உள்ளன.

இருப்பினும் தங்களது சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக தொடர்ந்து மிகவும் விலை உயர்ந்த பல்வேறு புதிய சொகுசு கார்களை அமிதாப் பச்சன் குடும்பம் வாங்கி கொண்டுள்ளது. இதன்படி தற்போது அமிதாப் பச்சனால் வாங்கப்பட்டிருப்பதுதான், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் சொகுசு செடான் கார்!

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 13:10 [IST]
English summary
Jaya bachchan spotted in mercedes benz s class luxury sedan viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+