புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வாங்கிய தமிழக முதல்வர்

ரூ.1.20 கோடியில் புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் கார் வாங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இதற்கு முன்பு டொயோட்டா லேண்ட்க்ரூஸர் ப்ராடோ காரை வைத்திருந்தார். தலைமை செயலகம் செல்வது முதல் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு செல்வது வரை எல்லாவற்றிற்கும் அந்த காரை பயன்படுத்தி வந்தார்.

CM new car

இந்த நிலையில், லேண்ட் க்ரூஸர் ப்ராடோவை மாற்றிவிட்டு தற்போது அதே வரிசையில் விற்பனை செய்யப்படும் டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் எல்சி 200 எஸ்யூவி காரை வாங்கியிருக்கிறார்.

அனைத்து சாலை நிலைகளிலும் சிறப்பாக செல்லும் வசதி கொண்ட இந்த எஸ்யூவி ரக காரில் அனைத்து பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டது. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கிறது.

ஆப்ரோடு சாகசங்களுக்காக தயாரிக்கப்படும் ரகத்தை சேர்ந்த எஸ்யூவி கார் என்பதால் சிறப்பான சஸ்பென்ஷனை கொண்டிருக்கிறது. அனைத்து வீல்களிலும் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

முதல்வருக்காக புல்லட் ப்ரூப் உள்ளிட்ட விசேஷ வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது லேண்ட்க்ரூஸர் எல்சி200.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 26, 2012, 15:54 [IST]
English summary
Chief Minister J Jayalalithaa has purchased a brand new Land Cruiser LC200 SUV recently. It costs Rs.1.20 crore including customization. She had previously owned a Prado.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+