ஜெயலலிதா பயன்படுத்திய கார் வெறும் ரூ2.72 லட்சத்திற்கு விற்பனைக்கு வருகிறது! என்ன கார் தெரியுமா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா(Jayalalitha) பயன்படுத்திய டாடா சஃபாரி (Tata Safari) கார் தற்போது வெறும் ரூபாய் 2.72 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை வாங்க பலர் போட்டி போட்டு வருகின்றனர். இந்த காரின் விலை இவ்வளவு குறைந்ததற்கு என்ன காரணம்? மக்கள் போட்டி போட்டு இந்த காரை வாங்க நினைப்பதற்கு என்ன காரணம்? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து மறைந்தவர் ஜெயலலிதா. இவர் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். தான் எந்த காரில் பயணிக்க வேண்டும் என்பதை அவரே தேர்வு செய்வார். அவருக்கு வேண்டிய கார்களை எல்லாம் அவரே பார்த்து பார்த்து வாங்குவார். இப்படியாக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்கள் எல்லாம் மார்க்கெட்டில் அவர் பயன்படுத்தும் கார் என்பதற்காகவே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

இப்படியாக கடந்த 1999-ம் ஆண்டு ஜெயலலிதா சொந்தமாக டாடா சஃபாரி கார் ஒன்றை வாங்கினார். அந்த காரை தான் அவர் நீண்ட ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். கிட்டத்தட்ட 2007-ம் ஆண்டு வரை அவர் அந்த காரில் தான் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார். பல நேரங்களில் அவரது காரில் பயணிப்பதை ஊடகங்களில் வெளியான போட்டோ மற்றும் வீடியோக்கள் மூலம் நம்மால் காண முடிகிறது.
இந்த காரை அவர் கடந்த 2007-ம் ஆண்டு தனக்கு நெருங்கிய பழக்கம் கொண்டவரான பாரதி என்பவருக்கு அவர் பயன்பாட்டுக்காக கொடுத்துவிட்டார். அந்த காரை பின்னர் அவர் பயன்படுத்தி அடுத்த சில ஆண்டுகளில் வேறு நபர்களுக்கு விற்று விட்டார். இப்படியாக மாறி மாறி இந்த கார் தற்போது கடைசியாக நிஜந்தன் ஏழுமலை என்பவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் இந்த காரை அவர் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப் போவதாக அறிவித்தார்.

அதன்படி தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பயன்படுத்திய 1999-ம் மாடல் டாடா சபாரி கார் பெரும் ரூபாய் 2.72 லட்சத்திற்கு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த காரை வாங்க அதிமுக விசுவாசிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் போட்டிய நிலவி வருகிறது முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய காரை தான் எப்படியாவது கை வசப்படுத்தி விட வேண்டும் என பலர் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்த சஃபாரி கார் ஜெயலலிதா வாங்கும் போது அப்பொழுதே மார்க்கெட் விலையில் ரூபாய் 8.93 முதல் 11.08 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இந்த கார் ஒரு டீசல் இன்ஜின் கொண்ட காராகும் இந்த கார் சென்னை தெற்கு ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்டுள்ளது கடந்த 1999-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி தான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாகன் தளத்தில் உள்ள தரவுகளின் படி இந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் என்பது கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி காலாவதியாகிவிட்டது. புதிதாக இந்த காரை வாங்கி பயன்படுத்துவர்கள் மீண்டும் இன்சூரன்ஸ் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த வாகனத்தின் பிட்னஸ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குறித்த தரவுகள் எதுவும் தற்போது வாகன தளத்தில் இல்லை.
மேலும் இந்த கார் பாரத் ஸ்டேஜ் 1 காராக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக இது அதிக அளவில் மாசுவை வெளிப்படுத்தும் காராக தான் இருக்கும் என தெரிகிறது. இந்த சான்று எல்லாம் வாகன தளத்தில் இல்லை என்றாலும் அவர்களிடம் உள்ள ஒரிஜினல் டாக்குமெண்டை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாம். இந்த காரை ரூபாய் 2.72 லட்சத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கார் வாங்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் அதிகமாக இந்த கார் பயன்படுத்தப்பட்டு இருக்கும். மேலும் இந்த காரின் உள்ளே உள்ள உதிரி பாகங்களின் தேய்மானமும் அதிகமாக இருக்கும் இந்த காரின் உண்மையான மதிப்பிற்கு இந்த 2.72 லட்சம் என்ற விலை சற்று அதிகமான விலை தான் ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார் என்பதால் இந்த விலைக்கு வாங்கவே ஆட்கள் அதிகமாக உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார் என்பதாலயே இந்த காருக்கு மிகப்பெரிய அளவில் மவுசு இருக்கிறது. டாடா நிறுவனம் இந்த மாடல் சஃபாரி நிறுத்திவிட்டு தற்போது சஃபாரி காரை முழுமையாக மாற்றி அமைத்து புதிய மாடலில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த காரும் தற்போது இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









