ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த ஹார்லி டேவிட்சன் பைக்!

Written By:

நடிப்பிலும், குணத்திலும் தனி ஒருவனாக முத்திரை பதித்து வரும் நடிகர் ஜெயம் ரவி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தாளுக்காக அவரது மகன் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த திடீர் பரிசால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன ஜெயம் ரவி, அந்த பைக்கில் அமர்ந்தபடி போட்டோ எடுத்து டிவிட்டரில் தனது ரசிகர்களுடன் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு கிடைத்த அந்த பைக்கின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த ஹார்லி டேவிட்சன் பைக்!

ஜெயம் ரவிக்கு பரிசாக வழங்கப்பட்டிருப்பது ஹார்லி டேவிட்சன் V Rod என்ற பைக் மாடல். மஸில் ரகத்தை சேர்ந்த மிக கட்டுமஸ்தான தோற்றத்தை கொண்ட இந்த பைக்கை போட்டியாளர்களைவிட பல கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக உருவாக்கியது ஹார்லி டேவிட்சன்.

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த ஹார்லி டேவிட்சன் பைக்!

தாழ்வான ஹேண்டில்பார், இருபுறத்திலும் இரட்டை சைலென்சர்கள், சக்திவாய்ந்த வி ட்வின் சிலிண்டர் அமைப்பு கொண்ட எஞ்சின், வசதியான இருக்கை, வித்தியாசமான வால்பகுதி என அசத்துகிறது இதன் தோற்றம்.

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த ஹார்லி டேவிட்சன் பைக்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக்குகள் ஏர் கூல்டு எஞ்சின் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்படும் நிலையில், அந்த நிறுவனத்தின் முதல் லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டது.

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த ஹார்லி டேவிட்சன் பைக்!

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் 1,247சிசி எஞ்சின் அதிகட்சமாக 115 பிஎச்பி பவரையும், 111 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது. இந்த மோட்டார்சைக்கிளில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த ஹார்லி டேவிட்சன் பைக்!

ஸ்பீடோமீட்டர் மாத்திரம் அனலாக் டயல் கொண்டது. எரிபொருள் மானி, டிரிப் மீட்டர் போன்றவை மின்னணு திரையின் மூலமாக காட்டும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு போன்றவை இதன் சிறப்பாக இருக்கிறது.

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த ஹார்லி டேவிட்சன் பைக்!

ரூ.22.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.24 லட்சம் அடக்க விலை கொண்டதாக இருக்கிறது.

ஆன்லைனிலையே கார் இன்ஸ்யூரன்ஸ்!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: Jayam Ravi gets a surprise Gift from his Son.
Story first published: Monday, September 12, 2016, 13:54 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark