ரூ2 கோடி விலையுள்ள பிஎம்டபிள்யூ காரில் வந்திறங்கிய ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பு பிறகு ஏற்பட்ட பரிதாப நிலைமை

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 400 என்ற எலக்ட்ரிக் காரை பயன்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவரிடம் கோடிக்கணக்கில் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார்கள் எல்லாம் இருந்த நிலையில், சமீபத்தில் விவகாரத்து அறிவிப்பு செய்த பிறகு இவர் சிம்பிளான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவின் முன்னணி எடிட்டராக இருந்த மோகன் என்பவரது மகன் தான். ஜெயம் ரவி குடும்பமே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கிறது. இவரது அண்ணன் ராஜா தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார்.

jayam ravi mahindra xuv 400

இந்நிலையில் ஜெயம் ரவி பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் நிலையில், இவரது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன் பிறகு இவரைப் பற்றிய பேச்சு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

இவரது திருமண வாழ்க்கையில் இவர் பயன்படுத்தி வந்த பல்வேறு விஷயங்கள் இவரது மனைவியின் பெயரிலேயே இருந்து வந்ததாகவும் இவரது வங்கி கணக்கு கூட மனைவியின் பெயருடன் இணைக்கப்பட்டு இருந்ததாகவும். இதனால் இவர் பல்வேறு சங்கடங்களை சந்தித்ததாகவும், அதன் காரணமாகவே தற்போது விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

jayam ravi mahindra xuv 400

விவாகரத்து அறிவிப்பிற்கு முன்னர் இவர் தமிழ் சினிமா குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது தனது காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ காரில் தான் வந்து இறங்குவார். ஆனால் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இவர் சமீபத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 400 என்ற எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. காஸ்ட்லியான சொகுசு கார்களை எல்லாம் பயன்படுத்தி வந்த இவர் தற்போது எளிமையாக சாதாரண காரில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 காரில் வந்திறங்கியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையல் சமீபத்தில் பிரதர் என்ற பட நிகழ்ச்சிக்காக இவர் ஆட்டோவில் எளிமையாக வந்து இறங்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பெரிய சொகுசு கார்களை வைத்திருந்த நடிகர் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 400 என்று எலெக்ட்ரிக் காரை பயன்படுத்துகிறார். ஆனால் இந்த காரும் சாதாரண விஷயம் அல்ல இந்த காருக்கும் பல்வேறு விதமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.

jayam ravi mahindra xuv 400

மஹிந்திரா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் வேகமாக வளர்ந்து வருகிறது. தனது பெட்ரோல் கார்களை எல்லாம் எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறது. அதன்படி நிறுவனம் எக்ஸ்யூவி 400 என்ற எலெக்ட்ரிக் காரையும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இதில் பல்வேறு விதமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த கார் மார்க்கெட்டில் 15.49 லட்சம் முதல் 17.69 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் மொத்தம் இரண்டு விதமான பேட்டரி பேக் உள்ளன. அதன்படி 34.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக், 39.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக கொண்ட இரண்டு வேரியன்ட்கள் உள்ளன. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 456 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிட்டி பயன்பாட்டிற்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவர் பயன்படுத்தி வந்த பிஎம்டபிள்யூ காரும் ஒரு எலெக்ட்ரிக் கார் தான். இந்த கார் பிஎம்டபிள்யூ ஐ7 எக்ஸ்டிரைவ் 60 என்ற காராகும். இந்த காரின் பதிவெண்ணை வைத்து நாம் வாகன் தளத்தில் பார்த்த போது இந்த கார் அவரது மனைவி ஆர்த்தியின் பெயரில் பதிவாகியிருந்தது. இந்த கார் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தான் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் தற்போது ரூ1.95 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

பொதுவாக பெறும் நடிகர்கள் செலிப்ரட்டிகள் எல்லாம் ஆடம்பரமான கார்களை பயன்படுத்துவார்கள். அது அவர்களுக்கு சமூகத்தில் பெரும் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும். இந்நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவி சிம்பிளாக வாழ்ந்து வருகிறார். அதற்கு இவர் பயன்படுத்தும் இந்த கார் மிக முக்கியமான அடையாளமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வாகனம் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வருவதற்கான ஒரு கருவிதான். இதில் சமூக அந்தஸ்து என்பது மக்கள் மனதில் ஏற்படுவதுதான். எளிமையாக, சுலபமாக சென்று வருவதற்கான ஒரு வாகனம் இருந்தாலே நமக்கு அது போதுமானது தான். காஸ்ட்லியான வாகனங்கள் தேவையில்லை என்பதை ஜெயம் ரவி தற்போது எடுத்துக்காட்டி உள்ளார்.

Source: Galatta media

More from DriveSpark

Article Published On: Sunday, October 13, 2024, 16:00 [IST]
English summary
Jayam ravi using mahindra xuv 400 electric car after divorce announcement
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X