1-2 பேருக்கு இல்ல.. வீடு வாங்கும் ஒவ்வொருத்தருக்கும் காரு இலவசம்.. வீட்டோட விலை தெரிஞ்சா டபாக் டபாக் ஆயிரும்!
ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக காரை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருக்கின்றார். அதுவும், உலகின் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார் மாடலையே இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அந்த ரியல் எஸ்டேட் அதிபர் தன்னுடைய 'எக்ஸ்' (டுவிட்டர்) வலைதள பக்கத்திலேயே அறிவித்திருக்கின்றார். விலை உயர்ந்த கார் மாடல் என்ற உடன் ஏதோ வெளிநாட்டு ரியல் எஸ்டேட் அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.
நமது இந்தியாவிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர்களில் ஒருவராக கவுரவ் குப்தா காட்சியளிக்கின்றார். இவரே இந்த அறிவிப்பை வெளியிட்டவர் ஆவார். உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் புதிய புராஜெக்ட் ஒன்று வந்திருப்பதாகவும், இந்த புராஜெக்டில் வில்லா-வை புக் செய்பவர்களுக்கு லம்போர்கினி கார் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கின்றார்.

அவரின் இந்த அறிவிப்பின்படி, வீடு வாங்கும் ஒவ்வொருவருக்கும் கார் வழங்கப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், ஒரே ஒரு இல்லத்தின் விலையே ரூ. 26 கோடி என்று கூறப்படுகின்றது. இதுதவிர, கார்களை நிறுத்துவதற்கு என தனியாக ரூ. 30 லட்சமும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இத்தகைய மிகவும் விலை உயர்ந்த வில்லாவிற்காகவே காஸ்ட்லியான காரை பரிசாக வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. லம்போர்கினி உருஸ் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் காஸ்ட்லியான எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் ரூ. 4.18 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.
அது வெறும் ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இரண்டு விதமான வேரியண்டுகளிலேயே இந்த சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. உருஸ் எஸ் (Urus S) மற்றும் உருஸ் பெர்ஃபார்மன்டே (Urus Performante) ஆகியவையே அவை ஆகும். இதில் உருஸ் எஸ் தேர்வே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும்.
பெர்ஃபார்மன்டே உயர் நிலை தேர்வாகும். இதன் விலை ரூ. 4.22 கோடி ஆகும். இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எஸ்யூவி ரக காராகவும் காட்சியளிக்கின்றது.
அதாவது, சொகுசு அம்சம் மற்றும் அதிக ஆற்றல் வெளியேற்றுவது என இரண்டிலும் மகி சிறந்த வாகன மாடலாக உருஸ் காட்சியளிக்கின்றது. இதனாலேயே உலக பணக்காரர்கள் மத்தியில் இந்த காருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 666 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ வேகம் ஆகும். அதேவேளையில், இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 3.5 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.
இதன் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக லம்போர்கினி நிறுவனம் ஏர் சஸ்பென்ஷன் செட்-அப் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய காரையே இந்திய ரியல் எஸ்டேட் அதிபர், நொய்டாவில் வரவிருக்கும் புதிய புராஜெக்டில் வீடு வாங்குபவர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார். இந்த காருக்கு இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மட்டுமல்ல உலக சந்தையில இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









