ஜேபிஎம் நிறுவனத்திற்கு கிடைத்த ரூ7200 கோடி ஆர்டர்! லைஃப் டைம் செட்டில்மெண்டை வழங்கிய மத்திய அரசு!
ஜேபிஎம் எக்கோ லைஃப் மொபிலிட்டி என்ற ஜேபி ம் ஆட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனம் தற்போது ரூபாய் 7500 கோடி மதிப்பில் 1390 எலெக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்க பிஎம் இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் ஆர்டரை பெற்றுள்ளது. இந்நிறுவனம் தான் குறைந்த விலையில் பஸ்களை தயாரித்து தர ஒப்பந்தம் கோரிய நிலையில் இந்நிறுவனத்திற்கு தற்போது ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மத்தியரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து எலெக்ட்ரிக் பஸ்கள் தயாரித்து பொது போக்குவரத்துக்கு கொண்டு வருவதற்காக பிஎம் இ-பஸ் சேவா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் ஒரு பஸ்ஸிக்கு ஆகும் செலவில் குறிப்பிட்ட தொகையை மாநில அரசும், குறிப்பிட்ட தொகையை மத்திய அரசும் வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் பஸ் தயாரிப்பு நிறுவனங்கள் பஸ்களை தயாரித்து வழங்க வேண்டும்.

இது மட்டுமல்ல பஸ் தயாரிப்பு நிறுவனங்கள் பஸ்களை தயாரிப்பதோடு நின்று விடாமல் அந்த பஸ்களை செயல்படுத்துவது, அதற்கான பராமரிப்பு பணிகளை செய்வது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அந்நிறுவனங்களே தொடர்ந்து செய்ய வேண்டும். இதுதான் இந்த பிஎம் இ-பஸ் சேவா திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல மாநிலங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன.
இந்நிலையில் அடுத்த கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் பஸ்கள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பஸ் தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரியது. அதன்படி பல்வேறு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டன. இந்த இடத்தில் ஜேபிஎம் ஆட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேபிஎம் எக்கோ லைஃப் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குறைந்த விலையில் பஸ்களை தயாரித்து தருவதாக ஏலம் எடுத்து மத்திய அரசின் ஆர்டரை பெற்றுள்ளது.

இதன்படி இந்நிறுவனம் ரூபாய் 7500 கோடி பட்ஜெட்டில் 1390 எலெக்ட்ரிக் பஸ்கள் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆர்டரை சிஇஎஸ்எல் என்ற அரசின் நிறுவனம் தற்போது ஜேபிஎம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த சில மாதங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்கப்பட்டு வரிசையாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தற்போது ஜேபிஎம் எக்கோ லைஃப் மொபிலிட்டி நிறுவனம் எலெக்ட்ரிக் பஸ் விலை தயாரிக்கும் உதிரி பாகங்களை வாங்குவது எலெக்ட்ரிக் பஸ்ஸை தயாரிப்பது, எலெக்ட்ரிக் பஸ்ஸை உரிய இடத்திற்கு சப்ளை செய்வது, அந்த எலெக்ட்ரிக் பஸ்ஸை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, மற்றும் அதை பராமரிப்பு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அந்த நிறுவனமே செய்ய வேண்டும்.

இதற்கான அத்தனை செலவுகளையும் அந்நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த ஆர்டர் வழங்கப்பட்ட 12 முதல் 18 மாதங்களுக்குள் இந்த பஸ்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என தற்போது மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் பொழுது போக்குவரத்தில் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் இரண்டு விதமான நன்மைகள் அரசுக்கு கிடைக்கிறது. முதல் நன்மை எரிபொருள் செலவு மிகப் பெரிய அளவில் மிச்சம் ஆகிறது. இந்தியாவில் உள்ள பொழுது போக்குவரத்திற்கு எரிபொருள் செலவு என்பது மாநில அரசுகளுக்கு அதிகமாக இருக்கும். இதை பெரும் அளவு எலெக்ட்ரிக் பஸ்கள் குறைக்கின்றன.
மற்றொரு முக்கியமான நன்மை என்றால் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இயங்குகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியேற்றும் மாசு என்பது அதிக அளவில் இருக்கிறது. இந்த இரண்டு நன்மைகளுக்காக அதிக அளவு பணத்தை மத்திய மாநில அரசுகள் முதலீடு செய்து, இந்த எலெக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போல அதிக ஜன நெருக்கடி கொண்ட நாடுகளில் பொது போக்குவரத்து என்பது மிக அவசிய தேவையாக இருக்கிறது. புது போக்குவரத்தால் தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த பொது போக்குவரத்தின் செலவுகளை குறைப்பதன் மூலம் மிக விரைவாக இந்தியா வளர்ச்சி அடைவதற்கு ஒரு வழி கிடைக்கும். இதற்கு இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் மிக உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









