கல்யாணத்துக்கு ஜேசிபி-யோட போறவங்க அதிகமாயிட்டாங்க!! எல்லாம் லைக்ஸ் வெறி...

கர்நாடகா மாநிலத்தில் திருமண தம்பதிகள் வித்தியாசமான முறையில் ஜேசிபி (JCB)-இன் முன்பக்க லோடரில் அமர வைத்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளன. இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

திருமணம், வாழ்வில் ஒருமுறை நடக்கக்கூடியது என்பதால், அந்த ஒரு நிகழ்வு ஆயுசுக்கும் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் திருமண நிகழ்ச்சிகளில் என்னென்னமோ செய்கின்றனர். திருமணத்திற்கு வருபவர்கள் இந்த திருமணத்தை மறக்கவே கூடாது என்பதற்காகவும், மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு தெரிய வேண்டும் என்பதற்காகவும் இன்றைய கால திருமண நிகழ்ச்சிகள் பல்வேறு புதுமையான செயல்கள் இடம்பெறுகின்றன.

jcb arranged for new couple

இதன் மூலமாக, இணையத்தில் வைரலாகிவிட வேண்டும் என ஆசைப்படுவோரும் உண்டு. அவ்வாறான முயற்சிகளில் ஒன்றாக, திருமண தம்பதிகள் ஜேசிபி போன்ற விசித்திரமான வாகனத்தில் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு, அழைத்துச் செல்லும் சம்பவங்களை சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் மற்றுமொரு நிகழ்வு கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பிரஹ்மாவாரா என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. உடுப்பி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் திருமணங்களில் பாரம்பரியமான விளையாட்டு போட்டி ஒன்று நடத்தப்படும். அதுதான், சேவல் சண்டை. துலுநட் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த சேவல் சண்டையை மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் எடுத்து நடத்துவது வழக்கம்.

jcb arranged for new couple

அதன்பிறகே, திருமணம் நடக்கும். சமீபத்தில் நடந்த இந்த குறிப்பிட்ட திருமணத்திலும் சேவல் சண்டை விடப்பட்டு, கல்யாணம் நடந்து முடிந்தது. பின்னர், புது திருமண தம்பதிகள் மாப்பிள்ளையின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட். திருமணம் முடிக்கும் தம்பதிகள் பொதுவாக மண்டபத்தில் இருந்து கார் அல்லது வேனில் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவர்.

ஆனால், உடுப்பியில் நடைபெற்ற இந்த திருமணத்தை முடித்துக் கொண்ட பிறகு தம்பதிகள் இருவரும் ஜேசிபி வாகனத்தின் முன்பக்க லோடரில் அமர வைத்து, அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதற்காகவே, ஜேசிபி வாகனம் ஒன்றின் முன்பக்க லோடர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், புது தம்பதியினர் அமர்வதற்காக குஷின் வசதி கொண்ட இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது.

jcb arranged for new couple

இவ்வாறு, ஊர் உலகத்திற்கே தெரியும்படி புது திருமண தம்பதியினர் ஜேசிபியில் அழைத்துச் செல்லப்பட, அவர்களுக்கு முன்னால் பாரம்பரிய புலி நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பின்னர், ஒரு கட்டத்திற்கு மேல் திருமண தம்பதியும் சாலையில் இறங்கி புலி நடனத்திற்கு சில ஸ்டெப்களை போட்டனர். இவ்வாறு இந்த திருமணம் முழுக்கவே கொண்டாட்டங்கள் வந்திருந்தோரை வெகுவாக கவர்ந்தன. அத்துடன், இந்த கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜேசிபி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இந்த நிகழ்வை நிச்சயமாக மாப்பிள்ளையும், பெண்ணும் மறக்க மாட்டார்கள். இதை பார்த்து இன்னும் சிலர் இதேபோன்று தங்களது திருமணத்தில் செய்யலாம். ஆனால், ஜேசிபி வாகனம் ஓட்டுவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், அந்த அளவிற்கு அளவில் பெரிய வாகனம் ஜேசிபி ஆகும். ஆதலால், இந்த வாகனத்தில் பயணிக்கும்போது சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுவதை அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

Source: Kannada News18

More from DriveSpark

Article Published On: Wednesday, December 13, 2023, 14:54 [IST]
English summary
Jcb arranged for new couple instead of car check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X