சுங்க கட்டணம் யார்கிட்ட கேட்குற? ஜேசிபி டிரைவரிடம் மட்டும் பிரச்சனை வெச்சிக்க கூடாது!! டோல் பூத் க்ளோஸ்...
சுங்கச்சாவடி (Toll Plaza) கட்டணம் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருக்கும் செயல்முறை ஆகும். இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் முறை உள்ளது. ஆனால், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது குறித்த விவாதங்கள் இன்னமும் நம் நாட்டில் உள்ளன. இப்போதும் நாட்டில் பல இடங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியாது என போர்கொடி தூக்குபவர்களும் இருக்கின்றனர். எந்தவொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சுங்கச்சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் பணம் ஆனது முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், உத்தர பிரதேசத்தில் இதை உணராத ஜேசிபி டிரைவர் ஒருவர் சுங்க கட்டணம் கேட்டதற்காக சுங்கச் சாவடியை ஜேசிபி-ஐ கொண்டு அடித்து நொறுக்கியுள்ளார். ஜூன் 10ஆம் தேதி நண்பகல் நேரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஹபூர் மாவட்டத்தில் உள்ள சாஜர்சி சுங்கச் சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மற்ற வாகன ஓட்டிகளிடம் கேட்பதை போல், இந்த ஜேசிபி டிரைவரிடமும் சுங்க சாவடி பணியாளர்கள் கட்டணத்தை கேட்டுள்ளனர். இதற்கு அவர் தர மறுத்துள்ளார். இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாகி உள்ளது.
இதில் மிகுந்த கோபமடைந்த ஜேசிபி டிரைவர் வாகனத்தை ஸ்டார்ட் செய்து அங்கிருந்த இரு கட்டணம் வசூலிக்கும் அறைகளை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து அருகில் உள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீடியோ மற்றும் படங்களை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட ஜேசிபி டிரைவரை கைது செய்துள்ளனர். தேசிய தலைநகர் டெல்லி - உ.பி தலைநகர் லக்னோவிற்கு இடையேயான நெடுஞ்சாலை எண்-9இல் சாஜர்சி சுங்கச் சாவடி அமைந்துள்ளது. இந்த சம்பவத்தில் பொருட்கள் சேதாரமாகி இருப்பினும், எவரொருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால், பொதுவாகவே ஜேசிபி வாகனத்தின் செயல்பாடுகள் கொஞ்சம் மூர்க்கதனமாகவே இருக்கும். நன்கு அனுபவமிக்க டிரைவர்கள் கூட சில நேரங்களில் தடுமாற்றம் அடைவது உண்டு. இதன் விளைவாக, டார்க்கெட் செய்த இடத்தை தாண்டி மற்ற இடங்களிலும் சில நேரங்களில் ஜேசிபி டிரைவர்கள் சேதாரத்தை ஏற்படுத்திவிடுவதை பார்த்திருப்பீர்கள்.

ஆகையால், உத்தர பிரதேசத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்திலும் பிறருக்கு காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தது. நல்லவேளையாக, சேதாரங்களை தடுக்கும் முயற்சியாக சம்பவத்தின்போது யாரும் ஜேசிபி வாகனத்தின் அருகே செல்லவில்லை. மேலும், இவ்வாறான செயல்களில் ஈடுப்படும்போது ஜேசிபி வாகனத்தினுள் அமர்ந்திருக்கும் டிரைவருக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஏனெனில், சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் அறையினுள் நிச்சயமாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டு இருக்கும். தவறுதலாக ஸ்விட்ச் பாக்ஸை உடைத்து, அதனுள் இருக்கும் வயரை ஜேசிபி வாகனத்தின் கொக்கி தொட நேர்ந்தால் மின்சாரம் வாகனத்தினுள் வரை பாய்ந்து டிரைவர் உயிரிழப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. சுங்கச் சாவடிகளில் இவ்வாறான சம்பவங்களை கண்டால் முடிந்தவரையில் உங்களது வாகனத்துடன் ஒதுக்கி நிற்க முயற்சி செய்யுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்க சாவடிகளில் இவ்வாறான நிகழ்வுகளை அவ்வப்போது காண முடியும். ஆதலால், சுங்க சாவடிக்குள் நுழைக்கிறீர்கள் எனில் இவ்வாறான சம்பவங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கவும். ஏனெனில், இவ்வாறான செயலை செய்துவிட்டு தப்பிக்க முயல்பவர்கள் அங்கே நிற்கும் மற்ற வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு செல்ல வாய்ப்புண்டு. வாகனங்களுக்கு நடுவே உங்களது வாகனம் நிற்கிறது எனில், அங்கிருந்து விலகி சென்று முடிந்தவரையில் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









