ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
ஜேசிபி இந்தியா நிறுவனம் இந்தியாவில் எர்த் மூவிங் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் 5 லட்சமாவது வாகனத்தை தயாரித்ததை கொண்டாடியுள்ளது. கடந்த 1979-ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் இந்தியாவில் வாகன தயாரிப்பை செய்து வந்த நிலையில், தற்போது 5 லட்சமாவது வாகனத்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஜேசிபி என்றால் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிரபலமான பெயராக இருக்கிறது. பலரும் ஜேசிபி என்பதை ஒரு வாகனத்தின் பெயர் என கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது ஒரு நிறுவனத்தின் பெயர் இந்தியாவில் எர்த் மூவிங் மற்றும் கட்டுமான துறைகளுக்கான வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக ஜேசிபி நிறுவனம் இருக்கிறது.

இந்நிறுவனம் தற்போது தனது 5 லட்சமாவது வாகனத்தை வெற்றிகரமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம் ஆறு தயாரிப்பு ஆலைகளை வைத்து இந்தியாவிலேயே வாகனங்களை தயாரித்து 13 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் தனது 5 லட்சம் ஆவது வாகனத்தை தயாரித்ததை அந்நிறுவனம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள பல்லக்கர் என்ற இடத்தில் உள்ள தனது ஆலையில் கொண்டாடியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஜேசிபி குழுமத்தின் சேர்மன் லாம்ப்ஃபோட்டு கலந்து கொண்டார் அவர் பேசும்போது: " இந்தியா உலக உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வசதி கொண்ட நாடாக மாறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் உட்கட்டுமான மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியாக நாங்கள் எங்கள் வாகனங்களை தயாரித்து கொடுத்ததில் பெருமை கொள்கிறோம்.

கடந்த 1979-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் முதலீடுகளை செய்து வருகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் சர்வதேச அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவும் எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய மார்க்கெட்டாக இருக்கிறது." என்று கூறினார். இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ தீபக் ஷெட்டி கூறும் போது" நாங்கள் வெற்றிகரமாக 5 லட்சமாவது வாகனத்தை தயாரித்து வெளியிட்டுள்ளோம்.
டெலிகண்டலர் எனப்படும் இந்த சாதனம் இந்தியாவிற்கு புதுமையானது. இந்த கருவி சைட்டுகளில் வேலை செய்யும் போது பாதுகாப்பானதாகவும் அதே நேரம் சிறப்பான ப்ரொடக்ஷனை தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பான டிசைன் மற்றும் இன்ஜினியரிங் செய்யப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் பேக்ஹோ லோடர், எஸ்கவேடர் ஆகிய வாகனங்கள் எல்லாம் இந்தியாவின் கட்டுமானங்களை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது" என்று கூறினார்.

ஜேசிபி இந்தியா நிறுவனம் இந்தியாவில் 9 கேட்டகிரியில் 60 விதமான தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் பாலின பாகுபாடுகளையும் வகையில் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் தனது ஜெய்பூர் ஆலையில் 34% பெண்களை பணியில் அமர்த்தியுள்ளது.
அதேபோல குஜராத் மாநிலம் வதோதராவில் இந்நிறுவனத்திற்கு என்று தனி ஆடை இருக்கிறது. அங்கும் 52% பெண்கள் தான் பணியாற்றுகிறார்கள். அந்த ஆலை கடந்த 2022 ஆம் ஆண்டு தான் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் தனது வாகனங்களின் வடிவமைப்பை புனேவில் வைத்து நடத்தி வருகிறது. அங்கு 700க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களையும் சர்வதேச அளவில் தயாரிக்கப்படும் வாகனங்களையும் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் ஜேசிபி நிறுவனம் நீண்ட நாட்களாக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது புதிய மைல் கல்லை எட்டி உள்ளது. இது இந்தியர்களுக்கு பெருமையான ஒரு விஷயம் தான் இந்தியாவில் இந்நிறுவனத்தின் வாகனங்களுக்கு என்று மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜேசிபி இந்தியா நிறுவனம் இந்தியாவில் எர்த் மூவிங் ரக வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் நிலையில், இது உலக அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனமாக மாறி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் இந்திய பொருளாதாரத்தை வளர்த்து வருகிறது. இந்நிறுவனத்தின் மைல்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications









