நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

காண்ட்ராக்டர் நேசமணிக்கு இணையாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மற்றொரு விஷயத்தையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், எப்போது? எது? டிரெண்ட் ஆகும் என்பதே யாருக்கும் தெரியாது. சமூக வலை தளங்களில் திடீர் திடீரென புதுப்புது விஷயங்களை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து விடுகின்றனர்.

அந்த வகையில் நெட்டிசன்களால் தற்போது டிரெண்ட் செய்யப்பட்டு வரும் ஒரு நபர்தான் காண்ட்ராக்டர் நேசமணி. காண்ட்ராக்டர் நேசமணிக்கு என்னதான் ஆச்சு? என ஒட்டுமொத்த தமிழகமே ஒருமித்த குரல் எழுப்பி வருகிறது.

அத்துடன் காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியலால் தாக்கி அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவரது அண்ணன் மகன் கிருஷ்ண மூர்த்தியை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் தலையில் சுத்தியல் தாக்கும் காட்சியை அடிப்படையாக வைத்துதான் இது தொடர்பான வேடிக்கையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் திடீரென வைரலாக்கி வருகின்றனர். #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலான டிரெண்ட்டிங்கிலும் #PrayForNesamani ஹேஷ்டேக் இடம் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ப்ரே பார் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவதற்கான காரணம் நம்மில் அனைவரும் தெரியும்.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

ஆனால் ஒரு சில விஷயங்கள் ஏன் டிரெண்ட் ஆகிறது? எதற்காக டிரெண்ட் ஆகிறது? என்பதே யாருக்கும் தெரியாது. அப்படி இந்தியா முழுக்க தற்போது டிரெண்ட் ஆகி வரும் மற்றொரு விஷயம் ஜேசிபி. #JCBKiKhudayi என்ற ஹேஷ்டேக் கடந்த செவ்வாய் முதல் டிரெண்ட் ஆக தொடங்கியது.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

#JCBKiKhudayi என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிவிட்டரில் திடீரென டிரெண்ட் செய்ய தொடங்கினர். இது தொடர்பான மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் அதிகம் உலா வந்து கொண்டிருக்கின்றன.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

#JCBKiKhudayi என்றால் ஜேசிபி தோண்டி கொண்டிருக்கிறது என அர்த்தமாம். காண்ட்ராக்டர் நேசமணிக்கு முன்னதாகவே இந்த ஜேசிபி விஷயம் டிரெண்ட் ஆக தொடங்கி விட்டது. ஆனால் ஏன் டிரெண்ட் ஆனது என்பது மட்டும் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

ஒரு சிலர் ஜேசிபி இயந்திரத்தின் மீது நின்று கொண்டு சன்னி லியோன் பதிவிட்ட ஒரு போஸ்ட் மூலமாகதான் அனைவரும் ஜேசிபி இயந்திரத்தை பற்றி பேச தொடங்கினர் என்கிறார்கள். இன்னும் சிலரோ, மணமகன் ஒருவர் ஜேசிபியில் அமர்ந்து உலா வந்ததால்தான் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது என்கிறார்கள்.

ஆனால் உறுதியான காரணம் என்ன? என்பது மட்டும் தெரியவில்லை. இருந்தபோதும் ஜேசிபி இயந்திரம் மீது இந்திய மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர் என்ற விஷயத்தை மட்டும் இதன் மூலம் நம்மால் உறுதியாக புரிந்து கொள்ள முடிகிறது.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

சரி, பொக்லைன், எக்ஸ்காவேட்டர் போன்ற டெக்னிக்கல் பெயர்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? நிச்சயமாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால் ஜேபிசி என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

தற்போது வைரலாகி வரும் இந்த மஞ்சள் நிற அசூரனை ஜேசிபி என்ற நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. ஆம், ஜேசிபி என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். ஜே.சி.பிராம்ஃபோர்டு எக்ஸ்காவேட்டர்ஸ் (J.C. Bamford Excavators Limited) என்ற நிறுவனம்தான் உலக அளவில் ஜேசிபி என அறியப்படுகிறது.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

கட்டுமானம், விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் தயாரித்து வருகிறது. இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் ஸ்டாஃபோர்டுஷையர் கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் எனும் ஊரில் செயல்பட்டு வருகிறது.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

எக்ஸ்காவேட்டர்கள், டிராக்டர்கள் மற்றும் டீசல் இன்ஜின்கள் உள்பட 300 வகையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜோசப் சிரில் பிராம்ஃபோர்டு (Joseph Cyril Bamford) என்பவரால், கடந்த 1945ம் ஆண்டு ஜேசிபி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

ஜேசிபி என்பதை இவரது பெயர் சுருக்கம் என்றும் கூட கூறலாம். இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கூட, இயந்திர டிக்கர்கள் மற்றும் எக்ஸ்காவேட்டர்கள் ஜேசிபி என்ற பெயரால்தான் அறியப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

இந்தியாவின் கட்டுமான உபகரண மார்க்கெட்டில் ஜேசிபி நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு கட்டுமான இயந்திரங்களிலும் மூன்று ஜேசிபி நிறுவனத்தை சேர்ந்ததுதான்.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

ஜேசிபி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்நாட்டு செயல்பாடுகளை கடந்த 1979ம் ஆண்டு தொடங்கியது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள பல்லபாரா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ஜேசிபி நிறுவனத்தின் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...

மேட் இன் இந்தியா ஜேசிபி தயாரிப்புகள் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. உலகம் முழுக்க இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, வட மற்றும் தென் அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஜேசிபி நிறுவனத்திற்கு 18 தொழிற்சாலைகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2019, 12:57 [IST]
English summary
Things To Know About JCBKiKhudayi. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+