விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் முதன்முறையாக விபத்தில் சிக்கி சிதைந்த ஜீப் காம்பஸ்..!!

விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் முதன்முறையாக விபத்தில் சிக்கி சிதைந்த ஜீப் காம்பஸ்..!!

By Azhagar

விற்பனைக்கு வந்து ஒருமாதம் கூட இன்னும் முடியாத நிலையில் புதிய ஜீப் காம்பஸ் கார் மாடல் ஒன்று பெங்களூரில் நடந்த விபத்தில் முதன்முறையாக சிக்கி அதன் முகப்பு பகுதியை பறிகொடுத்துள்ளது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

மிகவும் கோரமாக நடைபெற்றுள்ள இந்த விபத்தில், காம்பஸ் எஸ்.யூ.வி காரின் சிதைந்து காணப்படும் முகப்பு பகுதி இந்தியளவில் டிரென்டாகி உள்ளது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

அமெரிக்காவின் ஜீப் நிறுவனம் காம்பஸ் காரின் தோற்றத்தை வெளியிட்ட உடன், உலகளவில் புதிய ரக எஸ்.யூ.வி கார் மாடலை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு மிகவும் முத்தாய்பாக இருந்தது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

இந்தியர்கள் மத்தியிலும் ஆவலை தூண்டிய இந்த காருக்கு, ஜீப் மிகவும் கட்டுபடியான விலையை இந்தியாவில் நிர்ணயித்தது.

இதற்கு பிறகு நமது நாட்டு வாடிக்கையாளர்களும் காம்பஸ் எஸ்.யூ.வி-யை கைபற்ற புக்கிங்கை குவித்து விட்டனர்.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ள ஜீப் காம்பஸ் கார் மாடல் ஒன்று, பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.

Recommended Video

Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

எக்ஸ்டாட்டிக்கா சிவப்பு நிறத்திலான இந்த காம்பஸ் கார் எப்படி விபத்தில் சிக்கியது என்பது தொடர்பான தகவல்களும்,

விபத்தின் போது காரின் உருகுலைந்த புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

குறிப்பாக விபத்தில் சிக்கிய இந்த காருக்கு, சமீபத்தில் தான் வாகன எண் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தற்காலிக நம்பர் பிளேட் இந்த காரின் வின்டுஸ்கீரினில் ஒட்டப்பட்டு இருந்தது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

மிகவும் புதியதாக காணப்படும் இந்த காரை அதன் உரிமையாளர் ஓட்டினாரா, அல்லது டீலரிடம் இருந்து டெலிவெரி செய்ய ஓட்டி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

சாலையில் வளைவு பகுதியில் காம்பஸ் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மிகவும் வேகமாக ஸ்டீயரிங்கை திருப்ப முயன்றுள்ளார்.

அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டில் இல்லாமல், கார் சாலையில் சென்று விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது.

புகைப்படங்கள் மட்டுமில்லாமல், இந்த விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஓட்டுநரின் தவறால் இந்த கார் விபத்திற்குள்ளாவது தெரியவருகிறது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

ஜீப் காம்பஸ் காரில் ஏபிஸ், இபிடி மற்றும் இஎஸ்பி போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அம்சங்கள் அனைத்து காம்பஸ் வேரியண்டிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

இவற்றுடன், எந்த வித அவசர சந்தர்ப்பத்திலும் இந்த காரை ஓட்டுபவர் கட்டுப்படுத்த முடியும். அதற்கு ஏற்றவாறான தொழில்நுட்பங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் காரின் தயாரிப்பு பணிகள் உள்ளன.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

இதன் காரணமாக எந்தவிதமான சந்தரிப்பத்திலும், காம்பஸ் எஸ்.யூ.வி காரை ஓட்டுநர் கட்டுபடுத்தலாம் என ஜீப் நிறுவனம் தெரிவிக்கிறது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

பெங்களூரில் நடந்த விபத்தில் இந்த காரை ஓட்டியவர் மிகவும் வேகமாக சாலையில் சென்றுள்ளார். அதே வேகத்தில் காரை இடதுபக்கமாக திருப்ப முயல, அது விபத்தில் முடிந்திருக்கிறது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

வேகத்துடன் திருப்ப முயன்றால், கார் எகிறி நடைபாதையில் ஏறி மரத்தில் மோதி பிறகு தான் நின்றுள்ளது. இதன் காரணமாக காரின் முகப்பு பகுதி முற்றிலுமாக சிதைந்துவிட்டது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

பெங்களூர் நகரில் தற்போது மழையும் தீவிரமாக பெய்து வருவதால், பெரும்பாலான சாலைகள் மிகவும் வழுக்கும் தன்மையோடு உள்ளது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

ஜீப் காம்பஸ் போன்ற ஒரு காரில் வேகமாக செல்கிறோம் என்றால், மழையின் போது அதை பார்த்து தான் இயக்கவேண்டும். இல்லையென்றால் இப்படி தான்.

ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி மாடல் கார் இந்தியாவில் இந்த மாதம் தொடக்கத்தில், ரூ.14.95 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகமானது.

தன்னை சிதைத்து ஓட்டுநரை காப்பாற்றிய ஜீப் காம்பஸ் கார்..!!

மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ.20.65 லட்சம் வரை விலை பெறும் இந்த கார் தயாரிப்பு, வடிவமைப்பு மற்றும் திறன் என அனைத்திலும் திருத்தமான தயாரிப்பு அமைப்புகளை கொண்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Jeep Compass Crashes In Bangalore, Shows Good Build Quality And Safety Features. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X