சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

சாதாரண வாடிக்கையாளரை தாக்கிய டீலர்ஷிப் ஊழியர்கள், புதிய காரை டெலிவரி எடுத்த பிரபல நடிகையை நடனமாடி உற்சாகப்படுத்தினர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

புதிய கார்களை டெலிவரி கொடுக்கும்போது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக, சில கார் டீலர்கள் வித்தியாசமாக ஏதேனும் ஒன்றை செய்வார்கள். இதன் மூலம் காரை டெலிவரி எடுக்கும் வாடிக்கையாளருக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கும். அதுவும் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நட்சத்திரங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

சினிமா நடிகர், நடிகைகள் போன்ற நட்சத்திரங்களுக்கு புதிய காரை டெலிவரி கொடுக்கும்போது, டீலர்கள் அசத்தி விடுவார்கள். இந்த சூழலில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்ஸி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீப் காம்பஸ் காரை வாங்கினார். இது எஸ்யூவி ரக கார் ஆகும்.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

ஆஃப் ரோடு திறன்மிக்க கார்களை தயாரிப்பதில் தலை சிறந்து விளங்கும் ஜீப் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்று காம்பஸ். அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்த மாடல்களில் காம்பஸ் முதன்மையானது.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

இவ்வாறு மிகவும் புகழ்பெற்ற ஜீப் காம்பஸ் காரின் லிமிடெட் பிளஸ் டீசல் மாடலைதான் நடிகை டாப்ஸி டெலிவரி எடுத்துள்ளார். இந்த காரின் மும்பை ஆன் ரோடு விலை தோராயமாக 26 லட்ச ரூபாய். ஆனால் டாப்ஸி இந்த காரை தனக்காக வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரி ஷகுனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பரிசளிப்பதற்காகவே டாப்ஸி இந்த காரை வாங்கினார்.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டாப்ஸி டெலிவரி எடுத்துள்ள மாடலில், 2 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்ய கூடியது. ஜீப் காம்பஸ் காரின் லிமிடெட் பிளஸ் மாடலில் பனேராமிக் சன் ரூஃப் உள்பட ஏராளமான வசதிகள் உள்ளன.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

ஜீப் காம்பஸ் காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜீப் காம்பஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 1.4 லிட்டர் டர்போர்சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமெட்டிக் என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பெட்ரோல் இன்ஜின் பெற்றுள்ளது.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

இந்த சூழலில் நடிகை டாப்ஸிக்கு காரை டெலிவரி கொடுக்கும் முன்பு வித்தியாசமாக ஏதேனும் ஒன்றை செய்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்த டீலர்ஷிப் ஊழியர்கள் முடிவு செய்தனர். மும்பையில் உள்ள லேண்ட்மார்க் ஜீப் என்ற ஜீப் டீலரிடம்தான் நடிகை டாப்ஸி காம்பஸ் காரை டெலிவரி எடுத்தார். டாப்ஸிக்கு காரை டெலிவரி கொடுக்கும் முன்பாக ஜீப் டீலர்ஷிப் ஊழியர்கள் குழு நடனம் ஆடி அவரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

அதிலும் குறிப்பாக டாப்ஸி நடித்த பாலிவுட் திரைப்படங்களில் இருந்து பாடல்களை தேர்வு செய்து அவர்கள் நடனம் ஆடினர். இதனால் டாப்ஸி மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அவரது முகத்தில் அந்த உற்சாகத்தை காண முடிந்தது. தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

முன்னதாக காம்பஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் இதே லேண்ட்மார்க் ஜீப் டீலர்ஷிப் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கியதாக பரபரப்பு புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

ஆனால் சம்பவத்தன்று சம்பந்தப்பட்ட அந்த வாடிக்கையாளர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், அதனால்தான் டீலர்ஷிப் ஊழியர் கோபத்தில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தொழில் நெறிமுறைகளின்படி வாடிக்கையாளர்களை தாக்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றும், இந்த பிரச்னையை வேறு விதமாகதான் கையாண்டிருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு! டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்

இதனிடையே மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், சமீப காலமாக ஜீப் காம்பஸ் காரின் விற்பனை சற்று 'டல்' அடிக்கிறது. அதே நேரத்தில் ஜீப் இந்தியா நிறுவனம் சமீப காலமாக பல்வேறு நட்சத்திரங்களுக்கு, குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களுக்கு காம்பஸ் எஸ்யூவியை டெலிவரி செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஜீப் காம்பஸ் உரிமையாளர்களில், அக்ஸய் குமார், ஜாக்குலின் பெர்ணாண்டஸ் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்டோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2019, 12:10 [IST]
English summary
Jeep Dealer Sales Executives Dance Bollywood Songs Before Delivering Compass SUV To Taapsee - Video Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+