ஒழுங்கீனமாக பார்க்கிங் செய்தவருக்கு தக்க பாடம் புகட்டிய ஜீப் ஓட்டுநர்!
வாகன நிறுத்திமிடத்தில் ஒழுங்கீனமாக காரை நிறுத்திய உரிமையாளருக்கு ஜீப் ஓட்டுநர் ஒருவர் சரியான பாடம் புகட்டியுள்ளார். அது குறித்த தகவல்களை காணலாம்.
சாலை விதிகளை பின்பற்றாமல் இஷ்டத்துக்கு வாகனங்களை ஓட்டுபவர்களால் அப்பாவி ஓட்டுநர்கள் தான் பெரும்பாலும் பாதிப்படைகின்றனர். பார்க்கிங் செய்வதிலும் இதேநிலைதான். அடுத்தவருக்குரிய இடத்திலும் சேர்த்து ஒழுங்கீனமாக பார்க்கிங் செய்யும் போது நமக்கு எரிச்சல் ஏற்படத்தான் செய்யும்.

அப்படிப்பட்ட ஒரு ஒழுங்கீனப்பேர்வழிக்கு தக்க பாடம் புகட்ட ஒருவர் செய்த வினோத செயலை பற்றி தான் நாம் இங்கு பார்கப் போகிறோம்.

வாகன நிறுத்திமிடம் ஒன்றில் தனது வாகனத்தை நிறுத்த வந்த ஜீப் ஓட்டுநர் ஒருவர் அங்கு அதிக விலை கொண்ட பிஎம்டபிள்யூ கார் ஒன்று ஒழுங்கற்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு கடுப்பாகியுள்ளார்.

அந்த பிஎம்டபிள்யூ கார் உரிமையாளருக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்தவர், தனது ஜீப்பை கொண்டு பிஎம்டபிள்யூ காரை முட்டித் தள்ளி பிஎம்டபிள்யூவை சரியான நேர்க்கோட்டில் சீர்படுத்தியுள்ளார். இதனால் பிஎம்டபிள்யூ கார் சேதாரமாகியுள்ளயது.
காரின் நிலையை கண்ட அதன் உரிமையாளருக்கு இச்சம்பவம் நிச்சயம் கோபத்தை வரவழைத்தாலும் அடுத்தமுறை இதை மீண்டும் செய்ய மாட்டார் என நம்பலாம். இது அந்த கார் ஓட்டுநருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








