முதல்ல 12 லட்சம் ரூபா ஆகும்னு விபூதி அடிக்க பாத்தாங்க! அவங்க வந்த உடனே லட்ச ரூபாக்குள்ள வேலைய முடிச்சிட்டாங்க!

லடாக்-இன் இயற்கை எழில் கொஞ்சும் அழகை காண வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கின்றது. இத்தகைய இடத்தைக் கனவே சமீபத்தில் ஓர் குடும்பத்தினர் தங்களுடைய விலை உயர்ந்த சொகுசு கார்களில் புறப்பட்டு சென்றிருக்கின்றனர். இரண்டு கார்களில் அந்த குடும்பம் தங்களுடைய லடாக் பயணத்தை தொடங்கி இருக்கின்றது.

அந்த இரண்டு கார்களும் பிரபல ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். ஒன்று காம்பஸ் ஆகும். மற்றொன்று மெரிடியன் ஆகும். இந்த இரு கார்களிலேயே அந்த குடும்பத்தினர் லடாக்கிற்கு புறப்பட்டு சென்றிருக்கின்றனர். இந்த இரண்டு கார்களில் காம்பஸ் காரால் மட்டுமே வெற்றிகரமாக இந்த லடாக் பயணத்தை நிறை செய்ய முடிந்திருக்கின்றது.

Jeep service center tried to scam huge amount

ஆனால், காம்பஸ் உடன் பயணித்த மெரிடியன் காரால் அந்த பயணத்தை முழுமையுற செய்ய முடியவில்லை. அது பாதி லடாக்கில் சிக்கலைச் சந்தித்து இருக்கின்றது. இதனால் அந்த காரால் பயணத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே மெரிடியன் கார் சரி செய்ய சர்வீஸ் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.

அங்கு காரை சரி செய்ய அவர்கள் ரூ. 12 லட்சம் என்கிற பெரும் தொகையை வாடிக்கையாளரிடம் கோரி இருக்கின்றனர். இது அந்த கார் மாடலின் விலையில் மூன்றில் ஒரு பங்காகும். ஜீப் மெரிடியன் இந்தியாவில் ரூ. 33.41 லட்சம் தொடங்கி ரூ. 38.61 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Jeep meridian broken part

Image Source: Team BHP இந்த விலையிலேயே இந்தியாவில் ஜீப் மெரிடியன் விற்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே 12 லட்ச ரூபாயை ரிப்பேரை சரி செய்ய கார் சர்வீஸ் மையம் பில்லை போட்டு இருக்கின்றது. இந்த சூழலிலேயே இன்சூரன்ஸ் நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இருக்கின்றது. இதன் தலையீடு வந்த உடனே பெரும் தொகையைக் குறைத்து சர்வீஸ் மையம் ரிப்பேரை சரி செய்துக் கொடுத்திருக்கின்றது.

ரூ. 12 லட்ச ரூபாய் வரை ரிப்பேரை சரி செய்ய ஆகும் என கூறி வந்த அந்த சர்வீஸ் மையம் அதிர்ச்சியளிக்கும் விதமாக அதே ரிப்பேரை வெறும் 1.1 லட்சம் ரூபாய் செலவிலேயே சரி செய்துக் கொடுத்திருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் அந்த சர்வீஸ் மையம் ரூ. 11 லட்சம் வரை வாடிக்கையாளரிடம் இருந்து அநியாயமாக பறிக்க பார்த்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது.

சர்வீஸ் மையங்கள் மோசடி செய்வதில் மன்னன்கள் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், இந்த அளவு பெரும் தொகையை அவர்கள் விபூதி அடிப்பார்கள் என்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஏற்கனவே, சர்வீஸ் மையங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பல ஆயிரம் ரூபாய்களை சுரண்டிக் கொண்டிருப்பதாக ஆங்காங்கே கூறப்பட்டு வருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. இந்த சம்பவத்தின் வாயிலாக கார் உரிமையாளர்கள் அனைவரும் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் உள்ளிட்ட நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிற பாடமே கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், ரிப்பேரான ஜீப் மெரிடியன் ரொம்ப பழைய காரெல்லாம் இல்லை என அதன் உரிமையாளர் தெரிவித்து இருக்கின்றார்.

அதன் ஓடோமீட்டர் வாயிலாக 10 ஆயிரம் கிமீ வரை மட்டுமே அக்கார் டிராவல் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. அது மட்டுமில்லைங்க லடாக் கரடு, முரடான பாதையில் பயணித்ததனால் காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகிய இரண்டும் மணிக்கு சுமார் 25 கிமீ முதல் 30 கிமீ வேகத்திலேயே இயக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே மெரிடியன் கார் மட்டும் சிக்கலில் சிக்கி இருக்கின்றது.

இது அந்த காரின் உரிமையாளர்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே செயலற்று நின்ற அந்த காரை அவர்கள் மீட்பு வாகனம் வாயிலாக சர்வீஸ் மையம் எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையிலேயே மிகப் பெரிய தொகையை அந்த சர்வீஸ் மையம் வாடிக்கையாளரிடம் இருந்து வசூல் செய்ய பார்த்திருக்கின்றது.

அதிர்ஷ்டவசமாக காப்பீட்டு நிறுவனத்தின் தலையீட்டால் பெரும் தொகை மிச்சப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த கார் காப்பீட்டு திட்டத்தின்கீழே சரி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய செல்வந்தர்களின் விருப்பமான கார் மாடல்களில் ஒன்றாக ஜீப் மெரிடியன் இருக்கின்றது. சொகுசு வசதிகள் நிறைந்த இந்த எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜட் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த எஞ்ஜில் தேர்வில் மட்டுமே மெரிடியன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை இரு விதமான ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படுகின்றது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் பலர் ஜீப் நிறுவனத்தின் மெரிடியன் காருக்கு ஃபேனாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியில் மூழ்க செய்துவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கே பெரும் தொகையை சர்வீஸ் மையம் அடிக்கப் பார்த்திருக்கின்றது. ஆகையால், ஜீப் மெரிடியன் கார் பயன்பாட்டாளர்கள் அடுத்தும் வரும் நாட்களில் அதிக விழிப்புடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 23, 2023, 22:55 [IST]
English summary
Jeep service center tried to scam huge amount from customer
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+