அந்த காலத்துல ரஜினிகாந்த் கூடலாம் ஒன்னா நடிச்சவரு இவரு! 82 வயசுல 2 கோடி ரூபா காரை வாங்கியிருக்காரு!
இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series). கடந்த காலங்களில், சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), வீரேந்திர சேவாக் (Virender Sehwag), நாகார்ஜூனா (Nagarjuna), ஷாருக்கான் (Shah Rukh Khan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சயிஃப் அலி கான் (Saif Ali Khan), அனில் கபூர் (Anil Kapoor), சன்னி லியோன் (Sunny Leone) மற்றும் கஜோல் (Kajol) போன்ற பிரபலங்கள் எல்லாம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வைத்திருந்தனர்.
இதில் தற்போது எத்தனை பேரிடம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் அப்படியே உள்ளது? என்று சரியாக தெரியவில்லை. ஒரு சிலர் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருக்கலாம். அல்லது ஒரு சிலர் விற்பனை செய்திருக்கலாம். ஆனால் இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் தொடர்ந்து பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி கொண்டேதான் உள்ளனர்.

இதற்கு பழம்பெரும் பாலிவுட் நடிகரான ஜிதேந்திரா (Jeetendra) ஒரு உதாரணம். இவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியிருப்பதாக தற்போது வெளியாகியுள்ள யூடியூப் வீடியோ (YouTube Video) ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் தொடக்கத்தில் ஜிதேந்திராவை ரேஞ்ச் ரோவர் (Range Rover) காருடன் காண முடிகிறது.
இதற்கு அடுத்தபடியாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் ஜிதேந்திரா வந்து இறங்குவதை நாம் காணலாம். ஜிதேந்திரா வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740ஐ எம் ஸ்போர்ட் (740i M Sport) வேரியண்ட் ஆகும். தற்போதைய நிலையில் இந்த காரின் புது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 1.81 கோடி ரூபாய் வருகிறது.

ஆன்-ரோடு விலை தோராயமாக (On-road Price) 2.08 கோடி ரூபாய் வரும். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740ஐ எம் ஸ்போர்ட் காரின் செயல்திறனை பொறுத்தவரையில், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 375 ஹெச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும். இது இன்ஜின் உருவாக்கும் சக்தியை, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்துகிறது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740ஐ எம் ஸ்போர்ட், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் என்பதால், ஏராளமான அதிநவீன வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பழம்பெரும் நடிகரான ஜிதேந்திராவிற்கு தற்போது 82 வயதாகிறது. எனவே பெரும்பாலான இடங்களில் மோசமாக உள்ள இந்திய சாலைகளில் அலுங்கல் குலுங்கல் இல்லாமல் அவர் சொகுசாக பயணம் செய்ய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740ஐ எம் ஸ்போர்ட் கார் உதவி செய்யும்.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) மற்றும் ஆடி ஏ8எல் (Audi A8L) போன்ற கார்களுக்கு எல்லாம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. சொகுசு மற்றும் செயல்திறன் ஆகிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு காரை எதிர்பார்க்க கூடிய கோடீஸ்வரர்களுக்கு, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ஏற்றது.
தற்போது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740ஐ எம் ஸ்போர்ட் காரை வாங்கியுள்ள ஜிதேந்திராவிற்கும், நடிகர் ரஜினிகாந்த்திற்கும் (Rajinikanth) இடையே நல்ல நட்பு உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்த்க விஷயம் ஆகும். 1988ம் ஆண்டு வெளியான டமச்சா (Tamacha) உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகன் ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளின்போது, ரஜினிகாந்த் - ஜிதேந்திரா ஆகிய இருவரும் தோளில் கை போட்டு நட்பு பாராட்டிய வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் பரவியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








