சிங்கப்பூர் ஃபார்முலா- 1 கார் பந்தய திருவிழாவில் ஜெனிபர் லோபஸ் நிகழ்ச்சி!

By Saravana

வரும் செப்டம்பர் 21ந் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் ஃபார்முலா-1 கார் பந்தயத்தின் நிறைவு விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கார் பந்தய ரசிகர்களுக்கு இந்த நிறைவு நிகழ்ச்சி பெரும் விருந்தாக அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக சிங்கப்பூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலில் இருந்து ரசிகர்கள் சிங்கப்பூருக்கு வருகை தர உள்ளனர்.

கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

படாங் அரங்கில் நிகழ்ச்சி

படாங் அரங்கில் நிகழ்ச்சி

சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற படாங் அரங்கில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில்தான் ஜெனிபர் லோபஸ் தனது நிகழ்ச்சியை வழங்க உள்ளார். கவர்ச்சியும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடும் என்பதால் இப்போதே சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ ஃபார்முலா-1 போட்டி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இதர பிரபலங்கள்

இதர பிரபலங்கள்

இந்த நிறைவு விழாவில் ஜெனிபர் லோபஸ் மட்டுமின்றி பிரபல இங்கிலாந்து பாப் பாடகர் ராபர்ட் வில்லியம்ஸ், ஜமைக்காவின் பிரபல இசையமைப்பாளர் ஸிக்கி மார்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

 டிக்கெட் தொடர்புக்கு

டிக்கெட் தொடர்புக்கு

டிக்கெட் பெறுவதற்கு விரும்புவோர் http://www.singaporegp.sg என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம். அல்லது +65 6738 6738 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 ஃபீஃபாவிலும் கலக்கிய லோபஸ்

ஃபீஃபாவிலும் கலக்கிய லோபஸ்

ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க நிகழ்ச்சியிலும் ஜெனிபர் லோபஸ் பங்கேற்று போட்டியின் 'ஓலே ஓலா' என்ற தீம் பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இப்போது சிங்கப்பூர் ஃபார்முலா-1 கார் பந்தய ரசிகர்களையும் கலங்கடிக்க உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2014, 13:14 [IST]
English summary
Race promoter Singapore GP Pte Ltd announced today that global icon JENNIFER LOPEZ will headline the Padang Stage at the 2014 FORMULA 1 SINGAPORE AIRLINES SINGAPORE GRAND PRIX on Sunday, 21 September 2014. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+