ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி... இப்படி ஒரு விஷயத்தை யாருமே யோசிச்சிருக்கமாட்டாங்க...
சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் ஐபோன் பயன்படுத்துபவர்களிடையே சிறந்த வாகன ஓட்டிகள் யார் என ஒரு ஆய்வு நடந்தது. இது குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.

இன்று உலகம் முழுவதும் பெரும்பான்மையாக 2 விதமான ஸ்மார்ட்போன்கள் தான் இருக்கிறது. ஒன்று ஆண்ட்ராய்டு மற்றொன்று
ஐபோன். இந்த இரண்டும் தான் மக்களை அதிகம் கவர்ந்துவிட்டது. இந்த இரண்டிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அட்வான்டேஜ் மற்றும் டிஸ்அட்வான்டேஜ் ஆகிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு போன்களை பயன்படுத்துவதற்கும் கார் ஓட்டுவதற்கும் சம்பந்தம் இருக்கிறது எனச் சொன்னால் நம்புவீர்களா? ஆம் இப்படியாக ஒரு ஆய்வு நடந்துள்ளது. அதைப் பற்றி தான் காணப்போகிறோம்.

ஸ்மார்ட்போன்கள் இன்று ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கைக்குள்ளும் புகுந்துவிட்டது. இன்று ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு ஸ்மார்ட் போனை வைத்திருக்கிறார்கள். இப்படியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்களை எளிதாக இரண்டு வகையாக பிரித்து விடலாம் ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள், ஐபோன் பயன்படுத்துபவர்கள் என பிரித்துவிட முடியும்.

இதில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்து நபர்கள் மற்றும் ஐபோன் பயன்படுத்தும் நபர்கள் இவர்களில் சிறப்பாக வாகனம் ஓட்டும் திறன் கொண்டவர்கள் யார் என ஜெர்ரி என்ற ஸ்மார்ட்போன் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஒப்பீட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டும் உள்ளது. இந்த முடிவுகள் பல ஆச்சரியமான தகவல்களைக் கொண்டுள்ளது.

இந்த ஆய்வுகள் சுமார் 20 ஆயிரம் டிரைவர்களை ஐபோன் பயன்படுத்துபவர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் எனப் பிரித்து அவர்கள் ஓட்டிய ஒட்டு மொத்த13 மில்லியன் கி.மீ தொலைவு தூரத்தைக் கணக்கிட்டு அதன் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். சுமார் 14 நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் அந்த ஓட்டுநரின் ஆக்ஸிலரேஷன், ஸ்பீடு, பிரேக்கிங், டர்னிங், கவனச் சிதறல் ஆகிய விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்படி அவர் பயணித்த கி.மீ ஏற்ப இந்தத் தரவுகளைக் கணக்கிட்டு ஒவ்வொரு ஓட்டுநருக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண்களின் சராசரியைக் கணக்கிட்டு எந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்கள் சிறந்த கார் ஓட்டுநர்கள் என ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டது.

இந்த முடிவில் ஐபோன் பயன்படுத்துபவர்களை விட ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துபவர்களே சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த ஆய்வில் ஐபோனைப் பயன்படுத்துபவர்களை விட ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துபவர்களே சிறப்பான வாகன ஓட்டிகள் என்ற முடிவு கிடைத்துள்ளது.

இந்த ஆய்வில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஓட்டுநர்களின் வயதும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐபோனை பயன்படுத்தும் டிரைவர்களை விட ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் டிரைவர்களின் வயது அதிகமாக இருந்தது. இதுவும் அவர்கள் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதில் வயதானவர்கள் சாலையில் வாகனத்தை ஓட்டும் போது சற்று பயத்துடனே ஓட்டியதாகவும் அதனால் அனைத்துப் பாதுகாப்பான விஷயத்தைச் செய்ததாகவும், ஐபோன் பயன்பாட்டாளர்கள் சற்று பயமில்லாமல் கார்களை இயங்கியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த ஆய்வில் மேலும் சில தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜெர்ரி நிறுவனம் ஐபோன் பயன்படுத்துபவர்களை விட ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்கள் அதிகமாக ஓப்பானாகவும், உண்மையாகவும் இருக்கின்றனர் என்றும், ஆனால் ஐபோன் பயன்பாட்டாகள். ரூல்ஸ்களை மீற சற்று அதிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஐபோன் பயன்பாட்டாளர்கள் அதிக எமோசனாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் சொல்லியுள்ளனர்.

இந்தியாவில் வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது என்பது மோட்டார் வாகனச் சட்டத்திற்கு எதிரானது, செல்போன் பயன்படுத்துவது என்றால் செல்போனை காதில் வைத்துப் பேசுவது மட்டுமல்ல, ஹெட்போன், ப்ளூடூத் பயன்படுத்தி பேசுவது, அல்லது பாடல் கேட்டுக்கொண்டே வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். இதற்காக இதைச் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் கார்களில் வாகன ஓட்டிகள் பாட்டுக்கேட்டுக்கொண்டே பயணிக்கலாம். ஆனால் அது ரோட்டில் உள்ள சக வாகன ஓட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். காரில் செல்லும் போதும் மற்றவர்களிடம் போனில் பேசிக்கொண்டே பயணிப்பது குற்றமாகும். ஆனால் வாகனம் ஓட்டும் போது காரிலும், பைக்கிளும் நேவிகேஷனிற்காக செல்போனை பயன்படுத்தலாம். அதுவும் செல்போனை கையில் வைத்துக்கொண்டே வாகனத்தை ஓட்டக்கூடாது. அதற்கான ஹோல்டரை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications